2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மொத்தம் 3 விதமான தேர்வுகளில் கிடைக்கும்!

ஹீரோ நிறுவனம் அதன் 2022 எக்ஸ்ட்ரீம் 160ஆர் (Hero Xtreme 160R) பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த இருசக்கர வாகனம் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மொத்தம் 3 விதமான தேர்வுகளில் கிடைக்கும்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் அதிக கவர்ச்சியான மற்றும் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட எக்ஸ்ட்ரீம் 160ஆர் (Hero Xtreme 160R) மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. கணிசமான அப்டேட்டை இந்த 2022 எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் ஹீரோ செய்திருக்கின்றது.

2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மொத்தம் 3 விதமான தேர்வுகளில் கிடைக்கும்!

டேஷ்போர்டில் கியர் பொசிஷனைக் காண்பிக்கும் வசதி புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட சேடில் மற்றும் புதிய கைப்பிடிகள் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற கணிசமான மாற்றங்களையே புதிய 2022 எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பெற்றிருக்கின்றது.

2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மொத்தம் 3 விதமான தேர்வுகளில் கிடைக்கும்!

பைக்கின் சிங்கிள் பாட் ஹெட்லைட், கட்டுமஸ்தான் ஸ்டைல், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் மற்றும் அலாய் வீல் ஆகியவை எந்த மாற்றமும் இன்றி அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும். சிங்கிள் டிஸ்க் பிரேக், ட்யூவல் டிஸ்க் பிரேக் மற்றும் ஸ்டீல்த் எடிசன் ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும்.

2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மொத்தம் 3 விதமான தேர்வுகளில் கிடைக்கும்!

விலை விபரம்:

எக்ஸ்ட்ரீம் 160ஆர் சிங்கிள் டிஸ்க் (Xtreme 160R Single Disc) தேர்வு : 1,17,148 ரூபாய்க்கும்,

எக்ஸ்ட்ரீம் 160ஆர் சிங்கிள் டூயல் டிஸ்க் (Xtreme 160R Dual Disc) தேர்வு : 1,20,498 ரூபாய்க்கும்,

எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் (Xtreme 160R Stealth) தேர்வு : 1,22,338 ரூபாய்க்கும் விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மொத்தம் 3 விதமான தேர்வுகளில் கிடைக்கும்!

எஞ்ஜின் விபரம்:

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த பைக்கில் 163 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இது ஓர் ஏர் கூல்டு மோட்டாராகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 15 பிஎச்பி பவரை 8,500 ஆர்பிஎம்மிலும், 14 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மொத்தம் 3 விதமான தேர்வுகளில் கிடைக்கும்!

பிரேக்கிங் விபரம்:

இந்த பைக்கின் சிங்கிள் டிஸ்க் பிரேக் தேர்வில் டிரம் பிரேக் செட்-அப்பே பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேவேலையில், டூயல் டிஸ்க் பிரேக் தேர்வில் இரு முனைகளிலும் டிஸ்க்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டீல்த் எடிசனிலும் இதேபோல் இரு முனைகளிலும் டிஸ்க்குகளே வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, சிங்கிள் சேனல் ஏபிஎஸ்-ம் இந்த பைக்கில் வழங்கப்படுகின்றது. இது இன்னும் பல மடங்கு பாதுகாப்பான பிரேக்கிங் வழங்க உதவும்.

2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மொத்தம் 3 விதமான தேர்வுகளில் கிடைக்கும்!

சஸ்பென்ஷன் செட்-அப்:

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இப்பைக்கில் சிறந்த இயக்க அனுபவத்திற்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க்கையும், ப்ரீலோட் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், ப்ரீலோட் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டிருக்கின்றன.

2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மொத்தம் 3 விதமான தேர்வுகளில் கிடைக்கும்!

இந்த சூப்பரான அம்சங்களால் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் மோட்டார்சைக்கிள் மிகவும் அழகான மற்றும் கவர்ச்சியான வாகனமாகக் காட்சியளிக்கின்றது. அதிலும், இதன் ஸ்டீல்த் எடிசன் தேர்வு வேற லெவல் கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. எக்ஸ்ட்ரீம் பேட்ஜ் பேட்ஜ் பொருத்தப்பட்டிருக்கும் விதம், அதன் நிறம், ஹெட்லைட்டின் ஸ்டைல் மற்றும் இருக்கையின் அமைப்பு உள்ளிட்டவை அப்பைக்கிற்கு அதிக அழகை சேர்க்கும் வகையில் இருக்கின்றன.

2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மொத்தம் 3 விதமான தேர்வுகளில் கிடைக்கும்!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் மிக சமீபத்திலேயே அதன் ஸ்பிளெண்டர் (Splendor) பைக் வரிசையில் புதிய தேர்வு ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிசன் (Hero Super Splendor Canvas Black Edition) எனும் சிறப்பு பதிப்பையே அது விற்பனைக்குக் களமிறக்கியது. பிரத்யேகமாக கருப்பு நிறத்தால் இந்த சிறப்பு பதிப்பு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மொத்தம் 3 விதமான தேர்வுகளில் கிடைக்கும்!

அறிமுக விலையாக இப்பைக்கிற்கு ரூ. 77,430 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்டான டிரம் பிரேக் வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த பைக் டிஸ்க் பிரேக் வேரியண்டிலும் விற்பனைக்குக் கிடைக்கும். அதன் விலை ரூ. 81,330 ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலையே என்பது குறிப்பிடத்தகுந்தது. இவ்விரு தேர்வுகளிலேயே சூப்பர் ஸ்பிளெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிசன் விற்பனைக்குக் கிடைக்கும். விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட கையோடு பைக்கிற்கான புக்கிங் பணிகளை இ-ஷாப் வாயிலாக ஹீரோ மோட்டோகார்ப் தொடங்கியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Hero launched xtreme 160r bike in india at rs 1 17 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X