பெட்ரோல் டூ-வீலர்களை அடுத்து மின்சார வாகன விற்பனையிலும் களமிறங்கிய ஹீரோ.. விடா பெயரில் இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் விடா எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இது இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதுபோன்று இன்னும் பல சுவாரஷ்யமான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெட்ரோல் டூ-வீலர்களை அடுத்து மின்சார வாகன விற்பனையிலும் களமிறங்கிய ஹீரோ... விடா எனும் பெயரில் புதுமுக இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்திய சந்தையில் தனது புதுமுக மின்சார இருசக்கர வாகனத்தை ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நிறுவனம் பெட்ரோல் இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் மட்டுமே ஈடுபட்டு வந்தநிலையில் தற்போது நாட்டின் மின்சார வாகன பிரிவிலும் தனது கால் தடத்தைப் பதித்துள்ளது.

பெட்ரோல் டூ-வீலர்களை அடுத்து மின்சார வாகன விற்பனையிலும் களமிறங்கிய ஹீரோ... விடா எனும் பெயரில் புதுமுக இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

இதன் ஒரு பகுதியாகவே விடா எனும் புதிய பிராண்டின் கீழ் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹீரோ இன்று (அக்டோபர் 07) அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த மின்சார ஸ்கூட்டர் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். விடா வி1 பிளஸ் (Vida V1 Plus) மற்றும் விடா வி1 ப்ரோ (Vida V1 Pro) ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும்.

பெட்ரோல் டூ-வீலர்களை அடுத்து மின்சார வாகன விற்பனையிலும் களமிறங்கிய ஹீரோ... விடா எனும் பெயரில் புதுமுக இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

விலை:

 • விடா வி1 பிளஸ் (Vida V1 Plus): விலை ரூ. 1.45 லட்சம்
 • விடா வி1 ப்ரோ (Vida V1 Pro) : விலை ரூ. 1.59 லட்சம்
 • மேலே பார்த்த இரு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

  பெட்ரோல் டூ-வீலர்களை அடுத்து மின்சார வாகன விற்பனையிலும் களமிறங்கிய ஹீரோ... விடா எனும் பெயரில் புதுமுக இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

  வெகு நீண்ட நாட்களாகவே இந்த நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வந்தநிலையில் இப்போது அவை விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. விலையுடன் சேர்த்து மின்சார இருசக்கர வாகனத்தின் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதன் வாயிலாக இரு வேரியண்டுகளுக்கும் இடையில் பேட்டரி பேக் மட்டுமே வித்தியாசமானதாக இருப்பது தெரிகின்றது.

  பெட்ரோல் டூ-வீலர்களை அடுத்து மின்சார வாகன விற்பனையிலும் களமிறங்கிய ஹீரோ... விடா எனும் பெயரில் புதுமுக இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

  பேட்டரி பேக்கின் விபரங்கள்:

  விடா வி1 பிளஸ்:

  இந்த இருசக்கர வாகனத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3.44 kWh ரிமூவபிள் பேட்டரி பேக்குடன் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்வதன் வாயிலாக சுமார் 143 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம்.

  பெட்ரோல் டூ-வீலர்களை அடுத்து மின்சார வாகன விற்பனையிலும் களமிறங்கிய ஹீரோ... விடா எனும் பெயரில் புதுமுக இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

  விடா வி1 ப்ரோ:

  3.94 kWh பேட்டரி பேக்கே ப்ரோ வேரியண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்வதன் வாயிலாக 165 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது சற்று பெரிய பேட்டரி பேக் என்பதால் இந்தளவு சூப்பரான ரேஞ்ஜை அது வழங்குகின்றது. அதிக டிராஃபிக் அல்லது அதீ-வேகத்தில் இயக்கினால் இந்த ரேஞ்ஜை பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

  பெட்ரோல் டூ-வீலர்களை அடுத்து மின்சார வாகன விற்பனையிலும் களமிறங்கிய ஹீரோ... விடா எனும் பெயரில் புதுமுக இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

  இரு பேட்டரி பேக் தேர்வையும் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்ய வெறும் 65 நிமிடங்களே போதுமானது.

  மின் மோட்டார்:

  இந்த இரு வேரியண்டுகளிலும் ஒரே மாதிரியான திறனை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மணிக்கு 80 கிமீ பயணிக்கும் திறன் கொண்டது. இதுமட்டுமின்றி, வெறும் 3.2 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் இது கொண்டிருக்கின்றது. இது தற்போது விற்பனையில் இருக்கும் ஏத்தர் 450எக்ஸ் ஜென்3 மாடலைக் காட்டிலும் சூப்பர் ஃபாஸ்ட் வேக திறன் ஆகும்.

  பெட்ரோல் டூ-வீலர்களை அடுத்து மின்சார வாகன விற்பனையிலும் களமிறங்கிய ஹீரோ... விடா எனும் பெயரில் புதுமுக இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

  இவற்றுடன் சேர்த்து மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கும் விதமாக டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்-அப் இருசக்கர வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக டிஸ்க் பிரேக் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது.

  பெட்ரோல் டூ-வீலர்களை அடுத்து மின்சார வாகன விற்பனையிலும் களமிறங்கிய ஹீரோ... விடா எனும் பெயரில் புதுமுக இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

  ஹீரோ நிறுவனம் இந்த இருசக்கர வாகனத்தை முற்றிலும் கவர்ச்சியான மற்றும் மாடர்ன் கால தோற்றத்தில் உருவாக்கியிருக்கின்றது. மேலும், கிளாசிக் ஸ்டைல் அம்சங்களை இந்த ஸ்கூட்டரில் சேர்க்கவும் நிறுவனம் தயங்கவில்லை. அந்தவகையில், இருசக்கர வாகனத்தின் முகப்பு பகுதிக்கு ஷார்ப்பான தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தோற்றத்திற்கு அதிக ஸ்டைலை வழங்கும் வகையில் வித்தியாசமான எல்இடி லைட்டுகள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன.

  பெட்ரோல் டூ-வீலர்களை அடுத்து மின்சார வாகன விற்பனையிலும் களமிறங்கிய ஹீரோ... விடா எனும் பெயரில் புதுமுக இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

  இந்த லைட்டை சற்று உற்று நோக்கி பார்த்தால் ரோபோக்களின் முகத்தைப் போன்று காட்சியளிக்கின்றது. இத்தகைய சூப்பரான லுக்கிலேயே ஸ்கூட்டரின் முகப்பு பகுதி காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டூயல் டோன் அலாய் வீல், எல்இடி டர்ன் இன்டிகேட்டர், டூ-டோன் பெயிண்ட் உள்ளிட்டவற்றாலும் அலங்கரித்திருக்கின்றது.

  பெட்ரோல் டூ-வீலர்களை அடுத்து மின்சார வாகன விற்பனையிலும் களமிறங்கிய ஹீரோ... விடா எனும் பெயரில் புதுமுக இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

  கூடுதல் சிறப்பம்சங்கள்:

  கூடுதல் சிறப்பு வசதிகளாக விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 7 அங்குல தொடுதிரை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த திரை திருப்பத்திற்கு திருப்பம் நேவிகஷன் தகவலை வழங்கும் வசதிக் கொண்டது. இத்துடன் ஓடிஏ அப்டேட், இணைப்பு தொழில்நுட்பம், ஃபாலோ மீ ஹோம், எஸ்ஓஎஸ் அலர்ட், ரிவர்ஸ் மோட், பூஸ்ட் மோட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

  பெட்ரோல் டூ-வீலர்களை அடுத்து மின்சார வாகன விற்பனையிலும் களமிறங்கிய ஹீரோ... விடா எனும் பெயரில் புதுமுக இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

  இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்து கொள்ள இருவிதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. 15ஏ ஹோம் சார்ஜர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் ஆகிய இரு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, பேட்டரி ஸ்வாப் மையங்கள் வாயிலாகவும் ஸ்கூட்டரில் உள்ள மின்சாரம் தீர்ந்து போன பேட்டரிகளை கொடுத்து சார்ஜ் ஃபுல் செய்யப்பட்ட பேட்டரிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

  பெட்ரோல் டூ-வீலர்களை அடுத்து மின்சார வாகன விற்பனையிலும் களமிறங்கிய ஹீரோ... விடா எனும் பெயரில் புதுமுக இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

  இதற்கான பிரத்யேக வலைதளத்தை ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் நாடு முழுவதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஓலா எஸ்1 ப்ரோ, ஏத்தர் 450எக்ஸ் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பக்கம் மக்களை கவரும் விதமாக நிறுவனம் அசூரன்ஸ் திட்டத்தை அறிவித்துள்ளது.

  பெட்ரோல் டூ-வீலர்களை அடுத்து மின்சார வாகன விற்பனையிலும் களமிறங்கிய ஹீரோ... விடா எனும் பெயரில் புதுமுக இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

  18 மாதங்களுக்கு 70 சதவீதம் பை-பேக் வேல்யூ என்ற சிறப்பு சலுகையை அது அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்னும் மூன்று தினங்களில் இந்த ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை ஹீரோ மோட்டோகார்ப் ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

Most Read Articles

English summary
Hero launches vida v1 electric scooter in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X