ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் புதுசா கொடுத்திருக்காங்க... புதிய அவதாரத்தில் அறிமுகமானது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றான ஸ்பிளெண்டர் (Splendor) புதிய அவதாரத்தில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் புதுசா கொடுத்திருக்காங்க... புதிய அவதாரத்தில் அறிமுகமானது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்!

இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), புதிய அவதாரத்தில் உருவாக்கப்பட்ட ஸ்பிளெண்டர் பிளஸ் (Splendor+) பைக்கை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலை தள பக்கங்களில் தகவல்களைப் பகிர்ந்திருக்கின்றது.

ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் புதுசா கொடுத்திருக்காங்க... புதிய அவதாரத்தில் அறிமுகமானது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்!

புதிய அவதாரத்தில் உருவாகியிருக்கும் அந்த பைக் ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் (Splendor+ XTEC) எனும் பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது. அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் இப்பைக் விற்பனைக்கு வந்திருப்பதை இந்த பெயர் நமக்கு தெரியப்படுத்துகின்றது.

ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் புதுசா கொடுத்திருக்காங்க... புதிய அவதாரத்தில் அறிமுகமானது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்!

அதாவது, முழு டிஜிட்டல் மீட்டர் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன், அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி பற்றிய தகவலை திரையில் வழங்கும் வசதி, ரியல் டைம் மைலேஜ் இன்டிகேட்டர், எரிபொருள் குறைவாக இருப்பது பற்றி எச்சரிக்கும் வசதி, எல்இடி ரக ஹை இன்டென்சிட்டி பொசிஷன் லேம்ப் மற்றும் பிரத்யேக கிராஃபிக்குகள் ஆகியவற்றுடன் புதிய அவதாரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் பைக் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் புதுசா கொடுத்திருக்காங்க... புதிய அவதாரத்தில் அறிமுகமானது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்!

ஹீரோ நிறுவனம் இந்த பைக்கை ரூ. 72,900 என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இப்பைக்கிற்கு ஐந்தாண்டுகள் சிறப்பு வாரண்டியையும் ஹீரோ மோட்டோகார்ப் வழங்க இருக்கின்றது.

ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் புதுசா கொடுத்திருக்காங்க... புதிய அவதாரத்தில் அறிமுகமானது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்!

புதிய ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் பைக்கில் பாதுகாப்பு வசதிகளாக சில சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்தவகையில், சைடு ஸ்டாண்டு போட்டிருந்தால் அதனை விஷுவலாக இன்டிகேட் செய்யும் வசதி மற்றும் சைடு ஸ்டாண்டு போட்டிருந்தால் எஞ்ஜின் ஆஃப் ஆகும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் புதுசா கொடுத்திருக்காங்க... புதிய அவதாரத்தில் அறிமுகமானது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்!

இதுமட்டுமின்றி, எதிர்பாராத விதமாக வாகனம் சரியும் எனில், அப்போதும் தானாக எஞ்ஜினை ஆஃப் செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. பேங்க் ஆங்கிள் சென்சார் (Bank-angle-sensor) எனும் பெயரில் இந்த வசதி வழங்கப்பட்டிருக்கின்றது.

ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் புதுசா கொடுத்திருக்காங்க... புதிய அவதாரத்தில் அறிமுகமானது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்!

புதிய அவதாரமாக இப்பைக்கில் எல்இடி ஹை இன்டென்சிட்டி பொசிஷன் லேம்ப் (LED High Intensity Position Lamp) வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், வழக்கமான ஸ்பிளெண்டரிடம் இருந்து மாறுபட்டுக் காணப்படுவதற்காக சிறப்பு கிராஃபிக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், எல்இடி ஸ்டிரிப் முகப்பு பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் புதுசா கொடுத்திருக்காங்க... புதிய அவதாரத்தில் அறிமுகமானது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்!

வண்ண தேர்வாக நான்கு புதிய நிறங்கள் இப்பைக்கில் வழங்கப்படுகின்றன. ஸ்பார்க்கிளிங் பீடா ப்ளூ (Sparkling Beta Blue), கேன்வாஸ் பிளாக் (Canvas Black), டொர்னடோ கிரே (Tornado Grey) மற்றும் பியர்ல் வெள்ளை (Pearl White) ஆகிய வண்ண தேர்வுகளிலேயே புதிய ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் புதுசா கொடுத்திருக்காங்க... புதிய அவதாரத்தில் அறிமுகமானது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்!

எஞ்ஜினை பொருத்தவரை புதிய ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் பைக்கில் 97.2 சிசி பிஎஸ் VI தர மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.9 பிஎச்பி பவரை 7000 ஆர்பிஎம்மிலும், 8.05 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். அதிக பெர்ஃபார்மான்ஸான ரைடை வழங்க இந்த திறன்கள் ஏதுவாக இருக்கும். இதுமட்டுமின்றி மிக சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் விதமாக ஐ3எஸ் தொழில்நுட்பம் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இது ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் (Idle Stop-Start System) வசதிக் கொண்டது.

குறிப்பு: முதல் இரண்டு படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.

Most Read Articles
English summary
Hero motoCorp launched new splendor plus xtec edition in india at inr 72900
Story first published: Thursday, May 19, 2022, 19:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X