சாதாரண எக்ஸ்பல்ஸை ரேலி பைக்காக மாற்றும் ஹீரோவின் கிட் விற்பனைக்கு அறிமுகம்... பைக்கை செம்ம அழகா மாத்திக்கலாம்!

ஹீரோ (Hero MotoCorp), நிறுவனம் அதன் எக்ஸ்பல்ஸ் 200 4வி (Xpulse 200 4V) பைக்கிற்கான ரேலி கிட் (Rally Kit)-டை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சாதாரண பைக்கை ரேலி பைக்காக மாற்றும் ஹீரோவின் கிட் விற்பனைக்கு அறிமுகம்... பைக்கை செம்ம அழகா மாத்திக்கலாம்!

இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), எக்ஸ்பல்ஸ் 200 4வி (Xpulse 200 4V) பைக்கிற்கான ரேலி கிட் (Rally Kit)-டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இது வழக்கமான தோற்றத்தில் காட்சியளிக்கும் எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கை அட்டகாசமான ரேலி ரக பைக்காக தோற்றுவிக்க உதவும்.

சாதாரண பைக்கை ரேலி பைக்காக மாற்றும் ஹீரோவின் கிட் விற்பனைக்கு அறிமுகம்... பைக்கை செம்ம அழகா மாத்திக்கலாம்!

விலை:

அறிமுக விலையாக இந்த ரேலி கிட்டிற்கு ரூ. 46 ஆயிரம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4 வால்வு வேரியண்ட் எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த ரேலி கிட்டை வாங்கி பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏனெனில் இந்த வாகனத்திற்கு ஏற்பவே பிரத்யேகமாக இந்த ரேலி கிட்டை ஹீரோ நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.

சாதாரண பைக்கை ரேலி பைக்காக மாற்றும் ஹீரோவின் கிட் விற்பனைக்கு அறிமுகம்... பைக்கை செம்ம அழகா மாத்திக்கலாம்!

கிட் வாயிலாக என்னென்ன பொருட்களை நிறுவனம் வழங்குகின்றது?

வழக்கமான எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கை ரேலி வாகனமாக மாற்றும் விதமாக பல்வேறு சிறப்பு பொருட்களை இந்த கிட் வாயிலாக ஹீரோ மோட்டோகார்ப் வழங்குகின்றது. அவற்றில், மேக்ஸிஸ் ரேலி டயர்கள், ரேலி ட்யூன்ட் ப்ரீ-லோட் அட்ஜெஸ்டபிள் 220 மிமீ நீளம் கொண்ட டிராவல் சஸ்பென்ஷன் (பின் பக்கத்திற்காக), 250 மிமீ நீளம் கொண்ட டிராவல் அட்ஜெஸ்டபிள் கார்ட்ரிட்ஜ் சஸ்பென்ஷன் (முன் பக்கத்திற்காக), ஹேண்டில் பார் ரைசர்ஸ், ஃபிளாட் டால் பென்ச் ரக இருக்கை, எக்ஸ்டென்டட் கியர் பெடல் மற்றும் எக்ஸ்ட்ரா லாங் சைடு ஸ்டாண்டு ஆகியவை வழங்கப்படும்.

சாதாரண பைக்கை ரேலி பைக்காக மாற்றும் ஹீரோவின் கிட் விற்பனைக்கு அறிமுகம்... பைக்கை செம்ம அழகா மாத்திக்கலாம்!

இந்த பிரத்யேக கிட்டை பொருத்துவதனால் பைக்கிற்கு புதிய அட்டகாசமான தோற்றம் கிடைக்கும். இதுமட்டுமில்லைங்க, அதன் அளவுகளும் சற்று மாறுபடும். பைக்கின் உயரம், நீளம் மற்றும் வீல் பேஸ் உள்ளிட்டவை ரேலி கிட்டைப் பொருத்துவதனால் லேசாக அதிகரிக்கும். அந்தவகையில், வழக்கமான ஒன்றைக் காட்டிலும் ரேலி கிட்டால் அலங்கரிக்கப்படும் எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக் 21 மிமீ கூடுதல் நீளம், 50 மிமீ கூடுதல் உயரம் மற்றும் 9 மிமீ கூடுதல் வீல்பேஸை பெற்றிருக்கும்.

சாதாரண பைக்கை ரேலி பைக்காக மாற்றும் ஹீரோவின் கிட் விற்பனைக்கு அறிமுகம்... பைக்கை செம்ம அழகா மாத்திக்கலாம்!

இதுமட்டுமில்லைங்க பைக்கின் எடையும் சற்று அதிகரிக்கும். அது ஒரு கிலோ வரை உயரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, வீல் பேஸ் 275 மி.மீட்டராக., மாறும். ஒட்டுமொத்தத்தில் ரேலி கிட்டைப் பெறும் எக்ஸ்பல்ஸ் 200 4வி ஓர் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு இந்த கிட்டால் மாறும் என்பது தெளிவாக தெரிகின்றது.

சாதாரண பைக்கை ரேலி பைக்காக மாற்றும் ஹீரோவின் கிட் விற்பனைக்கு அறிமுகம்... பைக்கை செம்ம அழகா மாத்திக்கலாம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கில் 199.6 சிசி எஞ்ஜினையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 18.8 எச்பி பவரை 8,500 ஆர்பிஎம்மிலும், 17.35 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸே இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

சாதாரண பைக்கை ரேலி பைக்காக மாற்றும் ஹீரோவின் கிட் விற்பனைக்கு அறிமுகம்... பைக்கை செம்ம அழகா மாத்திக்கலாம்!

இந்தியாவில் தற்போது மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் அட்வென்சர் பைக்காக எக்ஸ்பல்ஸ் 200 4வி இருக்கின்றது. ரூ. 1,35,978 என்ற ஆரம்ப விலையில் இருந்து இப்பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. செல்ஃப் ஸ்டார்ட், ஏபிஎஸ், டிஸ்க் பிரேக்குடன் விற்பனைக்குக் கிடைக்கும் தேர்வின் விலை இதுவாகும். இது வெறும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

சாதாரண பைக்கை ரேலி பைக்காக மாற்றும் ஹீரோவின் கிட் விற்பனைக்கு அறிமுகம்... பைக்கை செம்ம அழகா மாத்திக்கலாம்!

ஹீரோ நிறுவனம் இந்த ரேலி கிட்டை மட்டுமில்லைங்க எக்ஸ்பல்ஸ் 200 4வி ரேலி எடிசன் பைக்கையும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த பைக்கை ஏற்கனவே நிறுவனம் வெளியீடு செய்துவிட்டது. இது வழக்கமான எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கைக் காட்டிலும் மிகவும் அட்டகாசமான கிராஃபிக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். சிவப்பு மற்றும் கருப்பு நிற ஷேட்டுகளாலும் அப்பைக் அலங்கப்பட்டிருக்கும்.

சாதாரண பைக்கை ரேலி பைக்காக மாற்றும் ஹீரோவின் கிட் விற்பனைக்கு அறிமுகம்... பைக்கை செம்ம அழகா மாத்திக்கலாம்!

இதுமட்டுமில்லைங்க இப்பைக்கின் எஞ்ஜின் ஹெட் சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. பொதுவாக, வழக்கமான எக்ஸ்பல்ஸ் பைக்குகள் சில்வர் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, எக்சாஸ்ட் மற்றும் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை முழுமையாக கருப்பு நிறத்தால் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதன் ஹெட்லேம்ப் கிளாம்புகளில் கிரே நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய வேலைப்பாடுகளால் வேற லெவல் தயாரிப்பாக எக்ஸ்பல்ஸ் 200 4வி விற்பனைக்கு வர இருப்பது தெளிவாக தெரிகின்றது.

Most Read Articles
English summary
Hero motocorp launches rally kit for xpulse 200 4v bike
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X