'வீல் ஆஃப் ட்ரஸ்ட்' டூ-வீலர் ரீ-சேலுக்காக புதிய தளத்தை அறிமுகம் செய்த ஹீரோ... இங்கு பழசுக்கு புதுசு கிடைக்கும்

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் தனது ரீ-சேல் தளத்தை புதிய அவதாரத்திற்கு உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பழைய டூ-வீலர்களை ரீ-சேலுக்கு எடுக்கும் தளத்தை புதிய அவதாரத்திற்கு உயர்த்திய ஹீரோ... இங்கு பழசுக்கு புதுசு கிடைக்கும்!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), வீல்ஸ் ஆஃப் ட்ரஸ்ட் (Wheels of Trust) எனும் பெயரில் புதிய இருசக்கர வாகன மறு விற்பனை (Resale) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்முறை பைஜிட்டல் (Phygital) அவதாரத்தில் இயங்கும் என ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பழைய டூ-வீலர்களை ரீ-சேலுக்கு எடுக்கும் தளத்தை புதிய அவதாரத்திற்கு உயர்த்திய ஹீரோ... இங்கு பழசுக்கு புதுசு கிடைக்கும்!

அதாவது, டிஜிட்டல் மற்றும் ஆன்-கிரவுண்ட் என இரு வழிகளிலும் அது இயங்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆகையால், இது ஓர் சர்வ சேனலாக செயல்படும் என யூகிக்க முடிகின்றது. இந்த தளத்தின் வாயிலாக ஹீரோ என்ன செய்யப் போகின்றது என கேட்குறீங்களா?, ஹீரோ நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனை அதிகரிக்கச் செய்யும் விதமாகவே இந்த புதிய தளத்தைத் தொடங்கியிருக்கின்றது.

பழைய டூ-வீலர்களை ரீ-சேலுக்கு எடுக்கும் தளத்தை புதிய அவதாரத்திற்கு உயர்த்திய ஹீரோ... இங்கு பழசுக்கு புதுசு கிடைக்கும்!

அதாவது, நிறுவனம் மற்ற பிராண்ட் இருசக்கர வாகனங்களை ரீ-சேல் செய்வதற்காக பிரத்யேகமாக இத்தளத்தை உருவாக்கியிருக்கின்றது. ஹீரோ நிறுவனம் இப்போதுதான் இந்த செயலில் களமிறங்குகின்றது என நினைத்துக் கொள்ள வேண்டாம். நிறுவனம் கடந்த சில ஆண்டுகளே ரீ-சேல் சேவையினை செய்து வருகின்றது.

பழைய டூ-வீலர்களை ரீ-சேலுக்கு எடுக்கும் தளத்தை புதிய அவதாரத்திற்கு உயர்த்திய ஹீரோ... இங்கு பழசுக்கு புதுசு கிடைக்கும்!

மேலும், இந்த திட்டத்தின்கீழ் ஏற்கனவே 5 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பலனடைந்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை இன்னும் பல மடங்கு விரிவாக்கம் செய்யும் வகையிலேயே ஹீரோ மோட்டோகார்ப் புதிய வீல் ஆஃப் ட்ரஸ்ட் தளத்தை மறு வடிவமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.

பழைய டூ-வீலர்களை ரீ-சேலுக்கு எடுக்கும் தளத்தை புதிய அவதாரத்திற்கு உயர்த்திய ஹீரோ... இங்கு பழசுக்கு புதுசு கிடைக்கும்!

இந்த தளத்தை செல்போன் அல்லது கணினி வாயிலாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தளம் உங்களின் பழைய இருசக்கர வாகனம் பற்றிய அனைத்து முக்கிய தகவல்களையும் உள்ளீடு செய்ய கேட்கும். அவற்றை அங்கு வழங்குவதன் வாயிலாக பழைய வாகனத்தின் தகுதி என்ன என்பதை அந்த தளமே கணக்கீடு செய்யும்.

பழைய டூ-வீலர்களை ரீ-சேலுக்கு எடுக்கும் தளத்தை புதிய அவதாரத்திற்கு உயர்த்திய ஹீரோ... இங்கு பழசுக்கு புதுசு கிடைக்கும்!

இதன் அடிப்படையிலேயே அந்த வாகனம் ரீ-சேலுக்கு எடுத்துக் கொள்ளப்படும். வாடிக்கையாளரின், மாநிலம், நகரம், இருசக்கர வாகனத்தின் வகை, உற்பத்தியாளர் பெயர், மாடல் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட விபரம் உள்ளிட்டவற்றையே அந்த தளம் கேட்கும்.

பழைய டூ-வீலர்களை ரீ-சேலுக்கு எடுக்கும் தளத்தை புதிய அவதாரத்திற்கு உயர்த்திய ஹீரோ... இங்கு பழசுக்கு புதுசு கிடைக்கும்!

இதுதவிர, இருசக்கர வாகனம் பற்றிய கூடுதல் சில முக்கிய விபரங்களும் அந்த தளத்தில் கேட்கப்படும். இந்த விபரங்களின் அடிப்படையிலேயே இருசக்கர வாகனத்தின் ரீ-சேல் வேல்யூ ரிசல்ட் கிடைக்கப்பெறும். இதைத்தொடர்ந்தே தங்களின் அதிகாரப்பூர்வ சேனல் பார்ட்னர் வாயிலாக வாடிக்கையாளர்களின் பழைய வாகனத்தை அது ரீ-சேலுக்கு எடுத்துக் கொள்ளும்.

பழைய டூ-வீலர்களை ரீ-சேலுக்கு எடுக்கும் தளத்தை புதிய அவதாரத்திற்கு உயர்த்திய ஹீரோ... இங்கு பழசுக்கு புதுசு கிடைக்கும்!

நிறுவனம் பன்முக வழிகளில் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. இதனடிப்படையில் ஹீரோ நிறுவனம் செயல்படுத்தி வரும் சேவையே அனைத்து பிராண்டுகளையும் ரீ-சேலுக்கு பெறும் யுக்தி. இதற்கு இருசக்கர வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் கணிசமான அளவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பழைய டூ-வீலர்களை ரீ-சேலுக்கு எடுக்கும் தளத்தை புதிய அவதாரத்திற்கு உயர்த்திய ஹீரோ... இங்கு பழசுக்கு புதுசு கிடைக்கும்!

இதுமட்டுமில்லைங்க ஹீரோ நிறுவனம் புதிய வாகனங்களின் வாயிலாகவும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் அடிப்படையில், அண்மையில் சூப்பர் ஸ்பிளெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிசன், எக்ஸ்பல்ஸ் 200 4வி ரேலி எடிசன் மற்றும் எக்ஸ்ட்ரீம் 160 ஆர் ஆகிய இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, அப்டேட்டட் எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கையும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Hero motocorp launches two wheeler resale platform
Story first published: Thursday, August 4, 2022, 14:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X