ஓல்டு ஸ்டைல் ஸ்கூட்டர்கள் எடுப்படல... முற்றிலும் கவர்ச்சியான ஸ்டைலில் உருவாகும் புதிய ஹீரோ ஸ்கூட்டர்!!

புதிய ஹீரோ ஸ்கூட்டர் ஒன்று மறைப்புகளுடன் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஓல்டு ஸ்டைல் ஸ்கூட்டர்கள் எடுப்படல... முற்றிலும் கவர்ச்சியான ஸ்டைலில் உருவாகும் புதிய ஹீரோ ஸ்கூட்டர்!!

இந்தியா, ஏன் உலகின் மிக பெரும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக ஹீரோ மோட்டோகார்ப்-ஐ கூறலாம். இந்த நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் மோட்டார்சைக்கிள் பல வருடங்களாக இந்தியாவின் மிக சிறந்த விற்பனை 2-வீலர் மாடலாக விளங்குகிறது. எந்த அளவிற்கு என்றால், ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 2.5 லட்ச யூனிட்கள் விற்பனை செய்யப்படும் மோட்டார்சைக்கிளாக ஸ்பிளெண்டர் விளங்குகிறது.

ஓல்டு ஸ்டைல் ஸ்கூட்டர்கள் எடுப்படல... முற்றிலும் கவர்ச்சியான ஸ்டைலில் உருவாகும் புதிய ஹீரோ ஸ்கூட்டர்!!

இதற்கும் இரண்டாவது இடத்தை பிடிக்கும் இருசக்கர வாகனத்திற்கும் விற்பனையில் பெரும்பாலும் சுமார் 1 லட்ச யூனிட்கள் வரையில் வித்தியாசம் இருக்கும். மேலும், 2வது அல்லது 3வது இடத்தையும் ஹீரோ மோட்டோகார்பின் தயாரிப்பான எச்.எஃப் டீலக்ஸ் கடந்த காலங்களில் பிடித்துள்ளது. ஆனால் ஸ்பிளெண்டர், எச்.எஃப் டீலக்ஸ் இவை இரண்டும் பைக் மாடல்களாகும்.

ஓல்டு ஸ்டைல் ஸ்கூட்டர்கள் எடுப்படல... முற்றிலும் கவர்ச்சியான ஸ்டைலில் உருவாகும் புதிய ஹீரோ ஸ்கூட்டர்!!

பைக்குகள் விற்பனையில்தான் ஹீரோ மோட்டோகார்ப் கோலோச்சி வருகிறதே தவிர்த்து, இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடல்கள் மாத விற்பனையில் டாப்-10 இடத்திற்குள் வருவது மிகவும் அரிதான ஒன்றே. அப்படியே வந்தாலும் ஹீரோ பிளஷர் மட்டுமே வரும். இது 110சிசி ஸ்கூட்டராகும். 125சிசி ஹீரோ ஸ்கூட்டர்களான டெஸ்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடல்கள் மாத விற்பனையில் டாப்-10 இடத்திற்குள் பார்த்ததுபோல் ஞாபகமே இல்லை.

ஓல்டு ஸ்டைல் ஸ்கூட்டர்கள் எடுப்படல... முற்றிலும் கவர்ச்சியான ஸ்டைலில் உருவாகும் புதிய ஹீரோ ஸ்கூட்டர்!!

இந்த 3 ஹீரோ ஸ்கூட்டர்களும் ஹோண்டா ஆக்டிவாவின் ஆதிக்கத்தை உடைக்கும் முயற்சியாக ஹீரோ மோட்டோகார்ப் கொண்டுவந்தவை ஆகும். ஹோண்டா ஆக்டிவா இந்தியாவின் சிறந்த விற்பனை ஸ்கூட்டர். இத்தகைய ஹோண்டா மாடலை விற்பனையில் ஹீரோ முறியடித்ததா என்றால், இல்லை என்பதுதான் பதில். இதனாலேயே தனது தொடர் முயற்சியாக மற்றுமொரு புதிய ஸ்கூட்டரை களமிறக்கும் பணியில் ஹீரோ இறங்கியுள்ளது.

ஓல்டு ஸ்டைல் ஸ்கூட்டர்கள் எடுப்படல... முற்றிலும் கவர்ச்சியான ஸ்டைலில் உருவாகும் புதிய ஹீரோ ஸ்கூட்டர்!!

புதிய 125சிசி ஹீரோ ஸ்கூட்டராக கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படும் இது, முதல்முறையாக சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஹீரோ ஸ்கூட்டரின் இந்த சோதனை ஓட்டம் தொடர்பாக ஷிஃப்டிங் கியர்ஸ் என்ற இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்பை படங்களை கீழே காணலாம். இவற்றில் ஸ்கூட்டர் சிறிது மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளதால், இதன் தோற்றத்தினை முழுமையாக பார்க்க முடியவில்லை.

ஓல்டு ஸ்டைல் ஸ்கூட்டர்கள் எடுப்படல... முற்றிலும் கவர்ச்சியான ஸ்டைலில் உருவாகும் புதிய ஹீரோ ஸ்கூட்டர்!!

Source: Shifting Gears

இருப்பினும் ஹீரோ மோட்டோகார்பின் இந்த புதிய 125சிசி ஸ்கூட்டர் அதிகளவில் கூர்மையான லைன்களுடன் தற்போதைய ஹீரோ ஸ்கூட்டர்களை காட்டிலும் ஸ்போர்டியான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது மறைப்புகளை தாண்டி நமக்கு தெரிய வருகிறது. டிவிஎஸ் எண்டார்க், யமஹா ரே இசட்.ஆர் மற்றும் சுஸுகி அவெனிஸ் ஸ்கூட்டர்களை போன்று இந்த ஸ்கூட்டர் எல்இடி ஹெட்லேம்ப்களை முன்பக்க கௌலில் கொண்டுள்ளது.

ஓல்டு ஸ்டைல் ஸ்கூட்டர்கள் எடுப்படல... முற்றிலும் கவர்ச்சியான ஸ்டைலில் உருவாகும் புதிய ஹீரோ ஸ்கூட்டர்!!

ஆனால் வழக்கம்போல், ஹேண்டில்பாருக்கு கீழே ஹெட்லேம்ப் வழங்கப்படாது என்றே தோன்றுகிறது. ஹேண்டில்பாருக்கு கீழே ஹெட்லேம்ப் வழங்கப்படவில்லை எனில், இவ்வாறான முன்பக்க தோற்றத்துடன் வரும் முதல் ஹீரோ ஸ்கூட்டர் இதுவாகவே இருக்கும். மற்ற ஹீரோ ஸ்கூட்டர்களை போன்று ஹேண்டில்பாருக்கு கீழே பொருட்களை வைக்க குழிகளை இந்த புதிய மாடலும் பெற்றுள்ளது. இதனால் யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் வசதியினை எதிர்பார்க்கலாம்.

ஓல்டு ஸ்டைல் ஸ்கூட்டர்கள் எடுப்படல... முற்றிலும் கவர்ச்சியான ஸ்டைலில் உருவாகும் புதிய ஹீரோ ஸ்கூட்டர்!!

ஹீரோ மோட்டோகார்ப் தனது 125சிசி ஸ்கூட்டர்களின் என்ஜினில் ஐ3எஸ் தொழிற்நுட்பத்தை வழங்குகிறது. இந்த ஐ3எஸ் தொழிற்நுட்பமானது வாகனத்தின் எரிபொருள் திறனை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது. ஐ3எஸ் தொழிற்நுட்பத்தை தேவைக்கேற்ப ஆன்/ஆஃப் செய்துக்கொள்ள பொத்தான் இந்த புதிய 125சிசி ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரின் வலதுப்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளதை காணலாம்.

ஓல்டு ஸ்டைல் ஸ்கூட்டர்கள் எடுப்படல... முற்றிலும் கவர்ச்சியான ஸ்டைலில் உருவாகும் புதிய ஹீரோ ஸ்கூட்டர்!!

பின்பக்கத்தில் இந்த ஸ்கூட்டர் 'X' வடிவிலான எல்இடி டெயில்லைட் மற்றும் நார்மல் ஹலோஜன் டர்ன் இண்டிகேட்டர்களை கொண்டுள்ளது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை போன்று இந்த புதிய ஸ்கூட்டரிலும் பின்பக்க டெயில்லைட்டை ஸ்மோக்டு எஃபெக்ட் உடன் எதிர்பார்க்கலாம். அதேபோல், பயணிகளின் சவுகரியமான பயன்பாட்டிற்கு ஏற்ப பெட்ரோல் நிரப்பும் பகுதியை இருக்கைக்கு வெளியே ஹீரோ வழங்கலாம்.

ஓல்டு ஸ்டைல் ஸ்கூட்டர்கள் எடுப்படல... முற்றிலும் கவர்ச்சியான ஸ்டைலில் உருவாகும் புதிய ஹீரோ ஸ்கூட்டர்!!

மற்ற ஹீரோ ஸ்கூட்டர்களில் உள்ளதை போன்று சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் இரட்டை ஷாக்கர்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பை படங்களில், ஹீரோவின் இந்த புதிய 125சிசி ஸ்கூட்டர் 12 அங்குல மெஷின்-கட் அலாய் சக்கரங்களை கொண்டிருப்பதுப்போல் தெரிகிறது. இதன் டாப் வேரியண்ட்களின் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கை எதிர்பார்க்கிறோம்.

ஓல்டு ஸ்டைல் ஸ்கூட்டர்கள் எடுப்படல... முற்றிலும் கவர்ச்சியான ஸ்டைலில் உருவாகும் புதிய ஹீரோ ஸ்கூட்டர்!!

அதேநேரம், விலை குறைவான வேரியண்ட்களில் இரும்பு சக்கரங்களும், அவற்றில் ட்ரம் பிரேக்குகளுமே கொடுக்கப்படும். ஹேண்டில்பாரின் இரு கைப்பிடிகளுக்கு மத்தியில், செவ்வக வடிவில் முழு-டிஜிட்டல் எல்சிடி பேனல் வழங்கப்பட்டுள்ளது. இது பயணம் செய்த தூரம், வாகனத்தின் வேகம், நேரம், எரிபொருளின் அளவு உள்ளிட்டவற்றை காட்டக்கூடியதாக வழங்கப்படும். அத்துடன் ப்ளூடூத் இணைப்பு வசதியையும் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Hero motocorp new 125cc scooter spied
Story first published: Wednesday, July 20, 2022, 18:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X