மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒட்டுமொத்தமாக 1.4 மில்லியன் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து, தான் ஓர் உலகின் முன்னணி டூ-வீலர் உற்பத்தியாளர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்-இன் தயாரிப்புகள், 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மிக மிக அதிகளவில் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பெற்றிருக்கும் விற்பனை எண்ணிக்கையை வைத்து பார்க்கையில், இதனால்தான் நம்முடைய இந்த இந்திய நிறுவனத்தை உலகின் மிக பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளர் என ஒட்டுமொத்த வாகன உலகமும் போற்றுகின்றது என்பது மிக தெளிவாக தெரிகின்றது.

மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!

ஒட்டுமொத்தமாக 1.4 மில்லியன் யூனிட்டுகள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதாவது 13,90,193 யூனிட் ஹீரோ பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. அனைத்தும், 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில்) விற்பனையாகியவை ஆகும். ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை என இரண்டும் இதில் அடங்கும்.

மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!

இத்தகைய பிரமாண்ட விற்பனையை வேறு எந்த நிறுவனமும் இதுவரை பெற வில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதே நிறுவனத்தின் தயாரிப்புகள் சென்ற 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில் 10,24,507 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகின. இதுவும் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை இரண்டும் சேர்க்கப்பட்ட எண்ணிக்கை இதுவாகும்.

மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!

இந்த எண்ணிக்கையைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 35.7 சதவீதம் அதிக விற்பனையை ஹீரோ மோட்டோகார்ப் பெற்றிருக்கின்றது. இது முயல் வேக விற்பனை வளர்ச்சி ஆகும். நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு மக்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது இதன் வாயிலாக உறுதியாகியுள்ளது.

மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!

இந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் அதிகளவில் பைக்குகளே விற்பனையாகியிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 13,06,294 யூனிட் பைக்குகள் விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில், ஹீரோ நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் 83,899 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.

மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!

பைக் விற்பனையைக் காட்டிலும் மிக மிக குறைவான அளவில் ஹீரோவின் ஸ்கூட்டர் விற்பனையாகிக் கொண்டிருப்பதை இந்த விற்பனை எண்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. அதேநேரத்தில், கடந்த 2022 நிதியாண்டின் முதல் காலாண்டு விற்பனையுடன் ஒப்பிட்டு பார்க்கையில், ஸ்கூட்டர்களும் விற்பனையில் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருப்பது தெளிவாக தெரிகின்றது.

மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் சென்ற 2021-22 நிதியாண்டில் 64,918 யூனிட்டுகளும், பைக்குகள் 9,59,589 யூனிட்டுகளும் விற்பனையாகின. இந்த எண்ணிக்கையை வைத்து பார்க்கையில் ஸ்கூட்டர் மட்டுமின்றி நிறுவனத்தின் பைக்குகளும் மிக அமோகமான வரவேற்பை நடப்பாண்டின் முதல் காலாண்டில் பெற்றிருப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!

உள்நாட்டு விற்பனையில் பல மடங்கு அதீத வளர்ச்சியைக் கண்டிருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் லேசான சரிவைச் சந்தித்துள்ளது. 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் தயாரிப்புகள் 83,800 யூனிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், நடப்பு 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் 62,027 யூனிட்டுகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 21,773 யூனிட்டுகள் குறைவான ஏற்றுமதி ஆகும்.

மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!

நிதியாண்டு-டூ-நிதியாண்டு விற்பனையைப் போலவே ஜூன்-டூ-ஜூன் விற்பனையிலும் மிக சூப்பரான விற்பனை வளர்ச்சியை ஹீரோ மோட்டோகார்ப்பின் தயாரிப்புகள் பெற்றிருக்கின்றன. அதாவது, 2021 ஜூனைக் காட்டிலும் 2022 ஜூனில் ஹீரோவின் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் விற்பனையாகியுள்ளன. அதேநேரத்தில், ஸ்கூட்டரின் விற்பனையும், ஏற்றுமதி பிரிவும் லேசான சரிவைச் சந்தித்திருக்கின்றது. இதுகுறித்த தகவலை பின்வருமாறு பார்க்கலாம்.

மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகள் 2022 ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 4,84,867 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. இதில், பைக்குகள் 4,61,421 யூனிட்டுகளும், ஸ்கூட்டர்கள் 23,446 யூனிட்டுகளாகும். இதுமட்டுமின்றி, 21,657 யூனிட் இருசக்கர வாகனங்களை ஹீரோ ஏற்றுமதி செய்திருக்கின்றது.

மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!

இந்த எண்ணிக்கையை 2021 ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் ஏற்றுமதி மற்றும் ஸ்கூட்டர் விற்பனை லேசாக சரிவைச் சந்தித்திருப்பதை நம்மால் அறிய முடிகின்றது. ஹீரோ நிறுவனம் 2021 ஜூனில் ஒட்டுமொத்தமாக 4,69,160 யூனிட் வாகனங்களை விற்பனைச் செய்தது. இதில், பைக்குகள் 4,41,536 யூனிட்டுகளும், ஸ்கூட்டர்கள் 27,624 யூனிட்டுகளாகும். இதேபோல், 30,646 யூனிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.

மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!

இவ்வாறே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சில பிரிவுகளில் ஏற்றத்தையும், சில பிரிவுகளில் தாழ்வையும் சந்தித்துள்ளது. இந்த ஏற்ற-தாழ்வை மிக தெளிவாகக் கூறக் கூடிய தகவலைப் பட்டியலாகக் கீழே பார்க்கலாம்.

Hero June'22 June'21 YTD FY'23 YTD FY'22
Motorcycles 4,61,421 4,41,536 13,06,294 9,59,589
Scooters 23,446 27,624 83,899 64,918
Total 4,84,867 4,69,160 13,90,193 10,24,507
Domestic 4,63,210 4,38,514 13,28,166 9,40,707
Exports 21,657 30,646 62,027 83,800
Most Read Articles
English summary
Hero motocorp sells more than 1 4 million two wheelers in q1 fy 2022 23
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X