2021ஆம் ஆண்டை விற்பனையில் வீழ்ச்சியுடன் நிறைவு செய்திருக்கும் ஹோண்டா 2-வீலர்ஸ்!! ஏற்றுமதியும் பாதியாக குறைவு!

ஹோண்டா 2-வீலர்ஸ் நிறுவனம் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்த இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021ஆம் ஆண்டை விற்பனையில் வீழ்ச்சியுடன் நிறைவு செய்திருக்கும் ஹோண்டா 2-வீலர்ஸ்!! ஏற்றுமதியும் பாதியாக குறைவு!

ஜப்பானிய மோட்டார்சைக்கிள் நிறுவனமான ஹோண்டா 2-வீலர்ஸின் ஆக்டிவா, சிபி ஷைன், யுனிகார்ன் 160 மற்றும் டியோ உள்ளிட்டவை இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகக்கூடிய மாடல்களாக விளங்குகின்றன. இப்படிப்பட்ட நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டில் ஹோண்டா நிறுவனம் புதிய ஆக்டிவா 125 பிரீமியம் எடிசனை அறிமுகப்படுத்தியது.

2021ஆம் ஆண்டை விற்பனையில் வீழ்ச்சியுடன் நிறைவு செய்திருக்கும் ஹோண்டா 2-வீலர்ஸ்!! ஏற்றுமதியும் பாதியாக குறைவு!

இவ்வாறான புதிய அறிமுகங்களுடன் கடந்த ஆண்டில் சில நல்ல மாதங்களையும், அதேநேரத்தில் சில மோசமான மாதங்களையும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தை பொருத்தவரையில், கடந்த ஆண்டை நல்லப்படியான விற்பனை எண்ணிக்கைகளுடன் துவங்கினாலும், ஆண்டு இறுதி மாதங்கள் சரிவை தந்துள்ளன.

2021ஆம் ஆண்டை விற்பனையில் வீழ்ச்சியுடன் நிறைவு செய்திருக்கும் ஹோண்டா 2-வீலர்ஸ்!! ஏற்றுமதியும் பாதியாக குறைவு!

கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 37,81,680 யூனிட் இருசக்கர வாகனங்களின் விற்பனையை HMSI பதிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு முந்தைய 2020ஆம் ஆண்டில் இதனை காட்டிலும் 5.67% குறைவாக 35,78,648 யூனிட் வாகனங்களையே விற்பனை செய்திருந்தது. கடந்த 2021 டிசம்பர் மாதத்தை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தோமேயானால், ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை சிறிது சரிவை கண்டுள்ளது.

2021ஆம் ஆண்டை விற்பனையில் வீழ்ச்சியுடன் நிறைவு செய்திருக்கும் ஹோண்டா 2-வீலர்ஸ்!! ஏற்றுமதியும் பாதியாக குறைவு!

கடந்த மாதத்தில் உள்நாட்டு விற்பனையில் மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியிலும் இந்த நிறுவனம் சறுக்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 2,23,621 இருசக்கர வாகனங்களை ஹோண்டா இந்திய சந்தையிலும், இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளது. ஆனால் 2020 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 2,63,027 ஆக இருந்தது.

2021ஆம் ஆண்டை விற்பனையில் வீழ்ச்சியுடன் நிறைவு செய்திருக்கும் ஹோண்டா 2-வீலர்ஸ்!! ஏற்றுமதியும் பாதியாக குறைவு!

இந்த வகையில் HMSI-இன் ஒட்டுமொத்த விற்பனை 14.98% குறைந்துள்ளது. அதேபோல் இதற்கு முந்தைய 2021 நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையிலும் கடந்த டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கை 20.24% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் இந்தியாவில் இருந்து உள்நாட்டிலும், வெளிநாட்டு சந்தைகளிலும் கிட்டத்தட்ட 2,80,381 ஹோண்டா 2-வீலர்ஸ் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

2021ஆம் ஆண்டை விற்பனையில் வீழ்ச்சியுடன் நிறைவு செய்திருக்கும் ஹோண்டா 2-வீலர்ஸ்!! ஏற்றுமதியும் பாதியாக குறைவு!

உள்நாட்டு விற்பனையை பொருத்தவரையில், கடந்த மாதத்தில் 2,10,612 இருசக்கர வாகனங்களை ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. அதுவே 2020 டிசம்பரில் 2,42,046 யூனிட் இருசக்கர வாகனங்களையும், 2021 நவம்பரில் 2,56,173 யூனிட் இருசக்கர வாகனங்களையும் ஹோண்டா இந்தியாவில் விற்பனை செய்திருந்தது. இதன்படி பார்க்கும்போது, ஹோண்டா 2-வீலர்ஸின் உள்நாட்டு விற்பனை முறையே 12.99% மற்றும் 17.78% கடந்த மாதத்தில் குறைந்துள்ளது.

2021ஆம் ஆண்டை விற்பனையில் வீழ்ச்சியுடன் நிறைவு செய்திருக்கும் ஹோண்டா 2-வீலர்ஸ்!! ஏற்றுமதியும் பாதியாக குறைவு!

வெளிநாட்டு சந்தைகளுக்கு கடந்த மாதத்தில் மொத்தம் 13,009 யூனிட் வாகனங்களை ஹோண்டா 2-வீலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்துள்ளது. ஹோண்டாவின் உள்நாட்டு விற்பனையாவது பரவாயில்லை, வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி வருடம்-வருடம் மற்றும் மாதம்-மாதம் ஒப்பிடுகையிலும் முறையே 38% மற்றும் 46.27% என பெரிய அளவில் குறைந்துள்ளது.

2021ஆம் ஆண்டை விற்பனையில் வீழ்ச்சியுடன் நிறைவு செய்திருக்கும் ஹோண்டா 2-வீலர்ஸ்!! ஏற்றுமதியும் பாதியாக குறைவு!

ஏனென்றால், 2020 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 20,981 இருசக்கர வாகனங்களையும், 2021 நவம்பரில் 24,211 இருசக்கர வாகனங்களையும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. கடந்த நவம்பரில் இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனையில் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி 8.64 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் 5.82% சதவீதமாக குறைந்துள்ளது.

2021ஆம் ஆண்டை விற்பனையில் வீழ்ச்சியுடன் நிறைவு செய்திருக்கும் ஹோண்டா 2-வீலர்ஸ்!! ஏற்றுமதியும் பாதியாக குறைவு!

கடந்த 2021ஆம் ஆண்டை விற்பனையில் 11.39% வளர்ச்சியுடன் HMSI நிறுவனம் துவங்கியது. அதாவது, 2020 ஜனவரியில் 3,74,110 ஹோண்டா 2-வீலர்ஸ் இந்தியாவிலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், 2021 ஜனவரியில் சுமார் 4,16,716 யூனிட் இருசக்கர வாகனங்களை இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

2021ஆம் ஆண்டை விற்பனையில் வீழ்ச்சியுடன் நிறைவு செய்திருக்கும் ஹோண்டா 2-வீலர்ஸ்!! ஏற்றுமதியும் பாதியாக குறைவு!

2021ஆம் ஆண்டின் கடைசி காலாண்டை (அக்டோபர்- டிசம்பர்) கணக்கில் எடுத்து பார்த்தோமேயானால், இருசக்கர வாகனங்களின் விற்பனையில் 25.04 சதவீத சரிவை ஹோண்டா கண்டுள்ளது. ஏனெனில் இந்த 3 மாதங்களிலும் சேர்த்து 861,405 ஹோண்டா 2-வீலர்ஸ் விற்பனை செய்யப்பட்டிருக்க, 2020ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்த எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்திருந்தது.

Most Read Articles
English summary
Honda 2Wheelers India closes 2021 with 223,621 units sales in December 2021.
Story first published: Wednesday, January 5, 2022, 23:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X