விநோத தோற்றத்தில் சுற்றி திரிந்த ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வியந்து வேடிக்கை பார்த்த பெங்களூர் வாசிகள்!

விநோத தோற்றம் கொண்ட ஹோண்டா பென்லி (Honda Benly) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சாலையில் காட்சி சந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

விநோத தோற்றத்தில் இந்தியாவில் சுற்றி திரிந்த ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வியந்து வேடிக்கை பார்த்த பெங்களூர் வாசிகள்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மிக வேகமாக பிரபலமடைந்துக் கொண்டிருந்தன. மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துக் காணப்படுவதனால் நாளுக்கு நாள் இவற்றின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் எனெர்ஜி, ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஒகினவா உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

விநோத தோற்றத்தில் இந்தியாவில் சுற்றி திரிந்த ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வியந்து வேடிக்கை பார்த்த பெங்களூர் வாசிகள்!

இதுமாதிரியான சூழல் முன்னணி நிறுவனங்களையும் அவர்களின் பங்களிப்பை இந்தியாவின் மின்சார வாகன பிரிவில் வழங்க ஈர்த்திருக்கின்றது. மிக விரைவில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் சுஸுகி உள்ளிட்ட இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை நாட்டில் களமிறக்க இருக்கின்றன.

விநோத தோற்றத்தில் இந்தியாவில் சுற்றி திரிந்த ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வியந்து வேடிக்கை பார்த்த பெங்களூர் வாசிகள்!

இந்த நிலையில், ஹோண்டா (Honda) நிறுவனமும் அதன் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை இந்தியாவில் களமிறக்குவதில் ஆர்வம் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனத்தின் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று இந்திய சாலையில் காட்சி தந்திருக்கின்றது.

விநோத தோற்றத்தில் இந்தியாவில் சுற்றி திரிந்த ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வியந்து வேடிக்கை பார்த்த பெங்களூர் வாசிகள்!

உலக நாடுகள் சிலவற்றில் தற்போது விற்பனையில் உள்ள பென்லி (Benly) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே இந்திய சாலையில் காட்சி தந்திருக்கின்றது. விநோதமான தோற்றம் கொண்ட அந்த இருசக்கர வாகனம் கர்நாடகா மாநிலம், பெங்களூருவின் சாலையிலேயே காட்சியளித்திருக்கின்றது. பச்சை நிற பதிவெண் பிளேட்டுடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சித் தந்திருக்கின்றது. இந்த வாகனம்குறித்து டிஸ்மோடெக் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, இந்த வாகனம் பெங்களூருவின் ஜெயாநகரில் உள்ள ஓர் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

விநோத தோற்றத்தில் இந்தியாவில் சுற்றி திரிந்த ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வியந்து வேடிக்கை பார்த்த பெங்களூர் வாசிகள்!

இந்த பகுதியிலேயே ஹோண்டா நிறுவனத்தின் மற்றுமொரு அங்கமான 'ஹோண்டா பவர் பேக் எனெர்ஜி இந்தியா' (Honda Power Pack Energy India) செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே இந்த நிறுவனமே பென்லி இ-ஸ்கூட்டரை இம்போர்ட் செய்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இந்திய சந்தையில் வைத்து சோதனைக்கு உட்படுத்த இதனை இறக்குமதி செய்திருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகின்றது.

விநோத தோற்றத்தில் இந்தியாவில் சுற்றி திரிந்த ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வியந்து வேடிக்கை பார்த்த பெங்களூர் வாசிகள்!

ஹோண்டா பவர் பேக் எனெர்ஜி இந்தியா, நாட்டின் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்துக் கொண்டு பேட்டரி ஸ்வாப் நிலையங்களை நிறுவும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த சேவை வெகு விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே பென்லி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தரிசனம் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றது. ஆனால், ஹோண்டா நிறுவனம் இந்த வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வருமா என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

விநோத தோற்றத்தில் இந்தியாவில் சுற்றி திரிந்த ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வியந்து வேடிக்கை பார்த்த பெங்களூர் வாசிகள்!

இதுகுறித்த எந்தவொரு தகவலையும் அது வெளியிடவில்லை. அதேவேலையில், இந்த பென்லி எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் விற்பனைக்கு வந்தாலும் தனி நபர்களால் வாங்க முடியாது. ஆமாங்க, இந்த வாகனம் வர்த்தக பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வாகனமாகும். அதாவது, டெலிவரி சேவை நிறுவனங்கள் மற்றும் பிற சரக்குகளை கையாளும் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு ஏதுவாகவே பென்லி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விநோத தோற்றத்தில் இந்தியாவில் சுற்றி திரிந்த ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வியந்து வேடிக்கை பார்த்த பெங்களூர் வாசிகள்!

ஸ்விக்கி, சொமேட்டோ, ஃப்ளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் நம்ம ஊரு அண்ணாச்சி கடைக்காரர்கள் ஆகியோர்கள் பயன்படுத்தும் ஓர் வாகனமாக அது இருக்கும். இந்த வாகனத்தில் ஒரே நேரத்தில் 60 கிலோவுக்கும் அதிகமான எடைக் கொண்ட சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். இதற்கேற்பவே பென்லி வடிவமைக்கப்பட்டுள்ளது.

விநோத தோற்றத்தில் இந்தியாவில் சுற்றி திரிந்த ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வியந்து வேடிக்கை பார்த்த பெங்களூர் வாசிகள்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பின் பக்கத்தில் மட்டுமின்றி முன் பக்கத்திலும் பார்சல்களை கையாள முடியும். இதற்காக முன் பக்கத்தில் பிரத்யேகமாக ஓர் கேரியர் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த வாகனத்தை வர்த்தக பயன்பாட்டிற்காக உருவாக்கியிருந்தாலும் கவர்ச்சியான தோற்றத்தை வழங்க ஹோண்டா தவறவில்லை. அதுமட்டுமா தொழில்நுட்ப வசதிகளையும் அது வாரி வழங்கியிருக்கின்றது.

விநோத தோற்றத்தில் இந்தியாவில் சுற்றி திரிந்த ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வியந்து வேடிக்கை பார்த்த பெங்களூர் வாசிகள்!

அந்தவகையில், எல்இடி லைட்டுகள், சார்ஜிங் போர்ட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்டவை பென்லியில் வழங்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிக சிறந்த ரேஞ்ஜ் திறனை வழங்குவதற்காக 48v பேட்டரி பேக் மற்றும் சூப்பரான வேக திறனை வெளியேற்றுவதற்காக 2.8 kW மின் மோட்டார் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, 4.2 kW திறன் கொண்ட பவர்ஃபுல் மோட்டார் தேர்விலும் இந்த வாகனம் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

Most Read Articles
English summary
Honda benly e scooter spied in karnataka
Story first published: Friday, July 1, 2022, 21:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X