ஒன்றல்ல, இரண்டல்ல... 10எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அறிமுகம் செய்யபோது நம்ம ஹோண்டா நிறுவனம்! செம்ம ட்ரீட் இருக்கு!

ஜப்பானிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா வெகு விரைவில் 10 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி பணிகளை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒன்றல்ல, இரண்டல்ல... 10 எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அறிமுகம் செய்யபோது நம்ம ஹோண்டா நிறுவனம்... செம்ம ட்ரீட் காத்திருக்கு!

மின்சார இருசக்கர வாகனங்களை களமிறக்கும் பணியில் மிக தீவிரமாக ஹோண்டா நிறுவனம் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் அடுத்தடுத்து 10 புதிய எலெக்ட்ரிக் டூ-வீலர்களை உலகளவில் வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அனைத்தும் வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றல்ல, இரண்டல்ல... 10 எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அறிமுகம் செய்யபோது நம்ம ஹோண்டா நிறுவனம்... செம்ம ட்ரீட் காத்திருக்கு!

நிறுவனம் மின்சார இருசக்கர வாகனங்களின் உற்பத்தியை குறிப்பிடும் வகையில் தயாரித்திருக்கும் பிரசன்டேஷன் படங்களே தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. இந்த படங்களின் வாயிலாகவே நிறுவனம் ஒட்டுமொத்தமாக பத்து புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது என்பது வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது.

ஒன்றல்ல, இரண்டல்ல... 10 எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அறிமுகம் செய்யபோது நம்ம ஹோண்டா நிறுவனம்... செம்ம ட்ரீட் காத்திருக்கு!

சீனா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கான வாகனங்களே இவை என்பதும் அந்த பிரசன்டேஷன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. மேலும், இதில் இருப்பவற்றில் ஐந்து இருசக்கர வாகனங்கள் தினசரி பயன்பாட்டிற்கு (கம்யூட்டர்)-ஆனவை என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இவை மட்டுமின்றி நிறுவனத்தின் லிஸ்டில் நியோ ரெட்ரோ, க்ரூஸர் மற்றும் பெரிய மேக்ஸி ரக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களும் உள்ளன.

ஒன்றல்ல, இரண்டல்ல... 10 எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அறிமுகம் செய்யபோது நம்ம ஹோண்டா நிறுவனம்... செம்ம ட்ரீட் காத்திருக்கு!

இதுதவிர சிறுவர்களுக்கான டர்ட் ரக எலெக்ட்ரிக் பைக்கை ஹோண்டா நிறுவனத்தின் அறிமுகம் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன. இந்த அனைத்து வாகனங்களும் 2024 தொடங்கி 2025 ஆம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒன்றல்ல, இரண்டல்ல... 10 எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அறிமுகம் செய்யபோது நம்ம ஹோண்டா நிறுவனம்... செம்ம ட்ரீட் காத்திருக்கு!

இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களுக்கு சற்று கூடுதல் வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த சூழலை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக ஹோண்டா நிறுவனம் இந்தியாவிலும் அதன் சில எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒன்றல்ல, இரண்டல்ல... 10 எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அறிமுகம் செய்யபோது நம்ம ஹோண்டா நிறுவனம்... செம்ம ட்ரீட் காத்திருக்கு!

தற்போது கசிந்திருக்கும் படங்களின் வாயிலாக நிறுவனம் ஆக்டிவா வெர்ஷனிலும் ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்து எந்தவொரு அசைவையும் நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றாலும், இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் இப்போதே இவ்வாகனத்திற்காக ஆவலுடன் காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

ஒன்றல்ல, இரண்டல்ல... 10 எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அறிமுகம் செய்யபோது நம்ம ஹோண்டா நிறுவனம்... செம்ம ட்ரீட் காத்திருக்கு!

இந்தியாவில் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. இதனாலேயே இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்டைலிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டைரக் காட்டிலும் பல மடங்கு மாறுபட்ட தோற்றத்தில் இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒன்றல்ல, இரண்டல்ல... 10 எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அறிமுகம் செய்யபோது நம்ம ஹோண்டா நிறுவனம்... செம்ம ட்ரீட் காத்திருக்கு!

அதாவது சற்று மாடர்ன் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தைப் பெற்றிருக்கும். குறிப்பாக, இது ஓர் எலெக்ட்ரிக் வாகனம் என்பதை வெளிக்காட்டுகின்ற வகையில் குறிப்பிட்ட சில மாற்றங்களும் இடம் பெற இருக்கின்றன. ஆனால், என்ன மாதிரியான மாற்றங்கள் மற்றும் என்ன மாதிரியான சிறப்பு வசதிகளுடன் அது சந்தையை வந்தடையும் என்பதை ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கவில்லை.

ஒன்றல்ல, இரண்டல்ல... 10 எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அறிமுகம் செய்யபோது நம்ம ஹோண்டா நிறுவனம்... செம்ம ட்ரீட் காத்திருக்கு!

இருப்பினும், இந்த வாகனத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கின்றது. நவீன காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்ப கருவிகள் மற்றும் ஸ்வாப்பபிள் பேட்டரி டெக்னாலஜி உள்ளிட்ட அம்சங்கள் ஹோண்டா ஆக்டிவா ஸ்டைலிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஹோண்டா நிறுவனம் வெகுவிரைவில் மின்சார வாகன உற்பத்தியை மட்டுமல்ல ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் இருசக்கர வாகனங்களை தயாரிப்பையும் கையில் எடுக்க இருக்கின்றது.

ஒன்றல்ல, இரண்டல்ல... 10 எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அறிமுகம் செய்யபோது நம்ம ஹோண்டா நிறுவனம்... செம்ம ட்ரீட் காத்திருக்கு!

நிறுவனம் முதலில் 20 சதவீதம் எத்தனாலில் இயங்கும் இருசக்கர வாகனத்தையே உற்பத்தி செய்ய இருக்கின்றது. இதைத்தொடர்ந்து 2025ம் ஆண்டில் நூறு சதவீதம் எத்தனாலில் இயங்கக் கூடிய வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கின்றது. இத்தகைய தனித்துவமான கொள்கைகளை நிறுவனம் தற்போது உருவாக்கி இருக்கின்றது. இந்த கொள்கையின் கீழாகவே நிறுவனம் எதிர்காலத்தில் இயங்க இருக்கின்றது. ஆகையால், இந்நிறுவனத்தின் எதிர்கால தயாரிப்புகள் மீது பெருத்த எதிர்பார்ப்பு மக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது.

Most Read Articles
English summary
Honda confirmed 10 electric models globally by 2025
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X