செம்ம கெத்தாக இந்திய ஷோரூமில் காட்சி தந்த ஹோண்டா சிஆர்எஃப் 300எல் பைக்... முரட்டு காளையை போல் காட்சியளிக்குது!

ஹோண்டா சிஆர்எஃப் 300எல் (Honda CRF300L) மோட்டார்சைக்கிள் இந்திய ஷோரூமில் காட்சி தந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பார்க்கலாம், வாங்க.

செம்ம கெத்தாக இந்திய ஷோரூமில் காட்சி தந்த ஹோண்டா சிஆர்எஃப் 300எல் பைக்... முரட்டு காளையை போல் காட்சியளிக்குது!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda) இந்திய சந்தையில் 8 -க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள் மற்றும் 4-க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, நிறுவனம் பிக்-விங் ஷோரூம் வாயிலாகவும் இன்னும் சில இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவை மட்டுமே தற்போது நிறுவனத்தின் ஷோரூம்களில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

செம்ம கெத்தாக இந்திய ஷோரூமில் காட்சி தந்த ஹோண்டா சிஆர்எஃப் 300எல் பைக்... முரட்டு காளையை போல் காட்சியளிக்குது!

இந்த நிலையில் தற்போது புதுமுக மோட்டார்சைக்கிள் ஒன்றும் ஹோண்டா ஷோரூமில் காட்சியளிக்கத் தொடங்கியிருக்கின்றது. ஹோண்டா சிஆர்எஃப் 300எல் (Honda CRF 300L) மோட்டார்சைக்கிளே ஹோண்டாவின் ஷோரூமில் கம்பீரமாக காட்சி தந்திருக்கின்றது. பைக்கின் இந்த தரிசனம் பல்வேறு கேள்விகளையும், சந்தேகத்தையும் இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் எழுப்பியிருக்கின்றது.

செம்ம கெத்தாக இந்திய ஷோரூமில் காட்சி தந்த ஹோண்டா சிஆர்எஃப் 300எல் பைக்... முரட்டு காளையை போல் காட்சியளிக்குது!

அதாவது, நிறுவனம் இப்பைக்கை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டதா என்கிற சந்தேகத்தை பலரிடத்தில் எழுப்பியிருக்கின்றது. ஆனால், இன்னும் ஹோண்டா நிறுவனம் சிஆர்எஃப் 300எல் பைக்கை விற்பனைக்கு கொண்டு வரவில்லைங்க, இனிமேல்தான், அந்த பைக்கை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் அறிமுகம் ஆகஸ்டு 8ம் தேதி அரங்கேற இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

செம்ம கெத்தாக இந்திய ஷோரூமில் காட்சி தந்த ஹோண்டா சிஆர்எஃப் 300எல் பைக்... முரட்டு காளையை போல் காட்சியளிக்குது!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹோண்டா நிறுவனம் ஓர் புதுமுக வாகனத்தின் டீசர் படத்தை வெளியிட்டு அனைவரையும் கிளர்ச்சியூட்டியது. அந்த டீசர் படம் சிஆர்எஃப் 190எல் அல்லது ஃபோர்ஸா 300 மேக்ஸி வாகனத்திற்கானது என பலர் கருதி வந்தனர். இந்த நிலையிலேயே அது சிஆர்எஃப் 300எல் இருசக்கர வாகனம் ஷோரூம்களில் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது.

செம்ம கெத்தாக இந்திய ஷோரூமில் காட்சி தந்த ஹோண்டா சிஆர்எஃப் 300எல் பைக்... முரட்டு காளையை போல் காட்சியளிக்குது!

ஆகையால், முன்னதாக வெளியிடப்பட்ட டீசர் படங்கள் ஹோண்டா சிஆர்எஃப் 300எல்-க்கானது என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த பைக்கிற்கான காப்புரிமை சில மாதங்களுக்கு முன்னரே பெறப்பட்டுவிட்டது குறிப்பிடத்தகுந்தது. 286 சிசி லிக்யூடு கூல்டு, டிஓஎச்சி, சிங்கிள் சிலிண்டர் மோட்டாரையே சிஆர்எஃப் 300எல் பைக்கில் ஹோண்டா பயன்படுத்தியிருக்கின்றது.

செம்ம கெத்தாக இந்திய ஷோரூமில் காட்சி தந்த ஹோண்டா சிஆர்எஃப் 300எல் பைக்... முரட்டு காளையை போல் காட்சியளிக்குது!

இந்த மோட்டார் 27 எச்பி பவரையும், 26.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதே மோட்டாரே சிபி300ஆர் பைக்கிலும் ஹோண்டா பயன்படுத்தியிருக்கின்றது. ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற வாகனமாக சிஆர்எஃப் 300எல் காட்சியளிக்கின்றது. இதற்காக, 21 அங்குல வீல் முன் பக்கத்திலும், 18 அங்குல வீல் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

செம்ம கெத்தாக இந்திய ஷோரூமில் காட்சி தந்த ஹோண்டா சிஆர்எஃப் 300எல் பைக்... முரட்டு காளையை போல் காட்சியளிக்குது!

இந்த வீல்களில் க்னாப்பி ரக டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக முன் பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் 260 மிமீ மோனோஷாக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிக உயரமான ஃபோர்க் மற்றும் வீல்களால் பைக்கின் ஒட்டுமொத்தமாக கிரவுண்ட் கிளியரன்ஸ் 284 மிமீட்டராக உயர்ந்திருக்கின்றது. இது அதிக பிரீமியம் அம்சங்கள் கொண்ட மோட்டார்சைக்கிளாக விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆகையால், குறைவான விலையில் அல்லாமல் சற்று அதிக விலையிலேயே அது எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்ம கெத்தாக இந்திய ஷோரூமில் காட்சி தந்த ஹோண்டா சிஆர்எஃப் 300எல் பைக்... முரட்டு காளையை போல் காட்சியளிக்குது!

மேலும், ஹோண்டாவின் பிக்-விங் விற்பனையாளர்கள் வாயிலாகவே இருசக்கர வாகனம் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் இந்த விற்பனையகம் பிரத்யேகமாக பிரீமியம் இருசக்கர வாகனங்களின் வர்த்தகத்திற்காக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஹோண்டா பிக்-விங் வாயிலாக ஹைனெஸ் சிபி350, சிபி350ஆர்எஸ், சிபி300ஆர், சிபி500 எக்ஸ், சிபிஆர் 650ஆர், சிபிஆர் 1000ஆர்ஆர்-ஆர், ஆப்பிரிக்கா ட்வின் மற்றும் கோல்ட் விங் டூர் ஆகிய இருசக்கர வாகனங்களே விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுடன் வெகு விரைவில் சிஆர்எஃப் 300 எல் மோட்டார்சைக்கிளும் இணைக்கப்பட இருக்கின்றது.

செம்ம கெத்தாக இந்திய ஷோரூமில் காட்சி தந்த ஹோண்டா சிஆர்எஃப் 300எல் பைக்... முரட்டு காளையை போல் காட்சியளிக்குது!

புது விதமான ஸ்டைல், ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்ற சைலென்சர் செட்-அப், 256 மிமீ மற்றும் 220 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக்குகள், எஞ்ஜின் குவார்ட், ரெக்ட்ராக்டபிள் மெட்டல் ஃபூட் ஃபெக் உள்ளிட்ட அம்சங்கள் சிஆர்எஃப் 300எல் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், இப்பைக்கில் கூடுதல் சிறப்பு வசதியாக 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் க்ளட்ச் அம்சத்துடன் வழங்கப்பட்டிருக்கின்றது.

செம்ம கெத்தாக இந்திய ஷோரூமில் காட்சி தந்த ஹோண்டா சிஆர்எஃப் 300எல் பைக்... முரட்டு காளையை போல் காட்சியளிக்குது!

இந்த பைக்கின் வருகை இந்தியாவில் ஏற்கனவே அட்வென்சர் இருசக்கர வாகன பிரிவில் உள்ள அனைத்து மோட்டார்சைக்கிள்களுக்கும் போட்டியாக அமைய இருக்கின்றது. தற்போது இந்த பிரிவில் இந்தியாவில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, கேடிஎம் 390 அட்வென்சர், யெஸ்டி அட்வென்சர் மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் ஆகிய பைக்குகள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

Source: zigwheels

Most Read Articles
English summary
Honda crf300l spotted at honda dealership in india
Story first published: Wednesday, July 20, 2022, 20:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X