Just In
- 6 min ago
இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்.. நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க!
- 11 hrs ago
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- 13 hrs ago
அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய ஸ்கார்பியோ காரின் அறிமுகம் எப்போது? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
- 14 hrs ago
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
Don't Miss!
- News
லடாக்கில் பாலம்..ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி...சீனா சொந்தம் கொண்டாடுவதை ஏற்கமாட்டோம் - அரிந்தம் பக்சி
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Movies
கேன்ஸ் திரைப்பட விழா : மோடியை பாராட்டிய மாதவன்… எதுக்குனு தெரியுமா ?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹோண்டா கிரேஸியா 125 - அப்படி என்னதாங்க இந்த ஸ்கூட்டரில் இருக்கு? கிழக்கிந்திய மாநிலங்களில் 2 லட்ச கஸ்டமர்ஸ்!!
கிழக்கிந்திய மாநிலங்களில் ஹோண்டா கிரேஸியா 125 ஸ்கூட்டருக்கு கிடைத்துள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கிழக்கிந்திய மாநிலங்களில் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்தை பல்வேறு விதமான சாலைகளுக்கு விரிவுப்படுத்தும் முயற்சியில், கிரேஸியா 125 ஸ்கூட்டரை 2 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து தங்களது குடும்பத்தில் ஒருவராக இணைத்து கொண்டுள்ளனர் என்று HMSI நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா கிரேஸியா 2 லட்ச வாடிக்கையாளர்களை பெற்றுள்ள கிழக்கிந்திய மாநிலங்களில் பீகார், மேற்கு வங்காளம், ஜார்க்காண்ட், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், மேகலாயா, மிசோரம், திரிப்புரா, சிக்கிம், ஒடிசா, அஸ்ஸாம் மற்றும் நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்கள் அடங்குகின்றன. இந்த மாநிலங்களில் இளம் தலைமுறையினரின் தனிப்பயன்பாட்டு வாகன தேவை ஸ்கூட்டர்களை நோக்கி செல்வதை HMSI சரியாக பயன்படுத்தி வருகிறது.

கிரேஸியா ஸ்கூட்டர்களின் விற்பனையில் இத்தகைய மைல்கல்லை அடைந்திருப்பது குறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா கருத்து தெரிவிக்கையில், "இந்த பிராந்தியத்தில் உள்ள 2 லட்ச மகிழ்ச்சியான மற்றும் திருப்திக்கரமான கிரேஸியா 125 வாடிக்கையாளர்களிடம் இருந்து இது மிகவும் பெருமைக்குரிய தருணம் மற்றும் சாட்சி ஆகும்.

இளம் தலைமுறையினர் மற்றும் வேடிக்கையான மனிதர்களின் தேர்வான கிரேஸியா 125 பல ஆண்டுகளாக திறன்மிக்க அம்சங்கள் மற்றும் வலுவான சாலை இருப்புடன் தன்னை புதுப்பித்து கொண்டு வருகிறது. தெரியாதவற்றை ஆராய இது உண்மையிலேயே கிழக்கிந்திய மாநிலங்களில் உள்ள நவநாகரீக இளைஞர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. ஹோண்டா பிராண்டின் மீதான எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர் அன்பு மற்றும் நம்பிக்கைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறோம்" என்றார்.

மேற்கூறப்பட்ட இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் மொத்தம் 1,020 வாடிக்கையாளர் தொடு மையங்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கொண்டுள்ளது. இதில் டீலர்ஷிப்கள், அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள் மற்றும் சிறந்த விற்பனை மையங்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இவற்றில் ஹோண்டாவின் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்கள் & ஸ்கூட்டர்களின் விற்பனையும், அவற்றிற்கான பராமாரிப்பு சேவைகளும் வழங்கப்படுகின்றன.

வைரஸ் பரவல்கள் & ஊரடங்கு உத்தரவுகளினால் சில ஆன்லைன் ஷாப்பிங்கை பெரிதும் விரும்புகின்றனர். இதற்காக HMSI-இன் தயாரிப்பு வாகனங்கள் இணையம் வாயிலாகவும் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதேநேரம் தங்களது டீலர்ஷிப் மையங்களில் அரசாங்கத்தின் பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தும் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுவதாகவும் ஹோண்டா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இணையம் வாயிலாக ஹோண்டா 2-வீலர்ஸை வாங்க விரும்புவோர் www.honda2wheelersindia.com என்ற இணையத்தள பக்கத்தினை அணுகவும். இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் சற்று பின்தங்கிய கிழக்கிந்திய மாநிலங்களில் ஆட்டோமொபைல் வாகனங்களின் விற்பனை சிறிது தொய்வாக இருக்கும். இத்தகைய பகுதியிலேயே கிரேஸியா 125 ஸ்கூட்டருக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஹோண்டா பெற்றிருப்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயமே ஆகும்.

இந்தியாவில் தற்சமயம் மொத்தம் 20 இருசக்கர வாகனங்களை HMSI சந்தைப்படுத்தி வருகிறது. இதில் குறைந்தப்பட்ச விலையை கொண்டதாக சிடி110 ட்ரீம் மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.67 ஆயிரங்கள் என்ற அளவில் உள்ளது. ஸ்கூட்டரை பொறுத்தவரையில், டியோ ரூ.70 ஆயிரங்கள் என்கிற விலையில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய சந்தையில் சமீபத்தில் ஹோண்டா அதன் புதிய அறிமுகமாக 2022 சிபிஆர்650ஆர் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியது. ஹோண்டாவின் பிக் விங் டீலர்ஷிப் மையங்களின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள புதிய சிபிஆர்650ஆர் பைக் சிகேடி முறையில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வெளிநாட்டில் இருந்து பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள தொழிற்சாலையில் முழு மோட்டார்சைக்கிளாக கட்டமைக்கப்படுவதாகும்.

2022 ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக்கின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.35 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2022 ஜனவரி மாத துவக்கத்தில் புதிய சிபி300ஆர் பைக்கினை ஹோண்டா இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்திருந்தது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.77 லட்சமாகும். இதனையும் ஹோண்டா பிக் விங் டீலர்ஷிப் ஷோரூம்களின் வாயிலாக வாங்கலாம்.
-
அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க மத்தது எதுக்குங்க!
-
இப்படி ஒரு தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கல... ராங் சைடில் போனால் இவ்வளவு பஞ்சாயத்து இருக்குதா?
-
அதிக ரேஞ்ச் உடன்... டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா? டீசர் வீடியோ வெளியீடு!!