என்னங்க சொல்றீங்க... 50சிசி-யில் ஹோண்டா ஸ்கூட்டரா!! இங்க இல்ல, ஜப்பானில் அறிமுகம்!

அப்டேட் செய்யப்பட்ட ஜியார்னோ ஸ்கூட்டரை தொடர்ந்து, ஹோண்டா ஜப்பான் நிறுவனம் சில புதிய நிறத்தேர்வுகளுடன் 2022 டங்க் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய ஹோண்டா ஸ்கூட்டரை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

என்னங்க சொல்றீங்க... 50சிசி-யில் ஹோண்டா ஸ்கூட்டரா!! இங்க இல்ல, ஜப்பானில் அறிமுகம்!

சமீபத்தில் ஜப்பான் நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியார்னோ ஆனது ரெட்ரோ டிசைனிலான ஸ்கூட்டராகும். ஆனால் ஹோண்டா டங்க் ஆனது தற்கால இளம் தலைமுறையினரை கவரும் வகையில் ஸ்டைலிஷானதாக உள்ளது.

என்னங்க சொல்றீங்க... 50சிசி-யில் ஹோண்டா ஸ்கூட்டரா!! இங்க இல்ல, ஜப்பானில் அறிமுகம்!

இந்த படங்களின் மூலம் பார்க்கும்போது இந்த ஸ்கூட்டர் மிகவும் மெல்லியது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். ஆனால் பார்ப்பதற்கு அருமையானதாக உள்ளது. முன்பக்கத்தில் கூர்மையான பேனல்களுடன் ஹலோஜன் ஹெட்லைட், டர்ன்-இண்டிகேட்டர்களுடன் வழங்கப்பட்டுள்ளது.

என்னங்க சொல்றீங்க... 50சிசி-யில் ஹோண்டா ஸ்கூட்டரா!! இங்க இல்ல, ஜப்பானில் அறிமுகம்!

ஜியார்னோவை போன்று ஹோண்டா டங்க் மாடலும் 50சிசி ஸ்கூட்டராகும். அதேபோல் இதில் பொருத்தப்பட்டுள்ள ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினும் ஜியார்னோவில் வெளிப்படுத்துவதை போல் அதிகப்பட்சமாக அதே 4.5 பிஎஸ் மற்றும் 4.1 என்எம் டார்க் திறனையே வழங்குகிறது. இதனால் ஜியார்னோவை போன்று டங்க் மாடலும் நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும்.

என்னங்க சொல்றீங்க... 50சிசி-யில் ஹோண்டா ஸ்கூட்டரா!! இங்க இல்ல, ஜப்பானில் அறிமுகம்!

ஹோண்டா டங்க் ஸ்கூட்டரில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ஒற்றை ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க புதிய டங்க் ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் டிஸ்க்கும், பின்பக்கத்தில் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

என்னங்க சொல்றீங்க... 50சிசி-யில் ஹோண்டா ஸ்கூட்டரா!! இங்க இல்ல, ஜப்பானில் அறிமுகம்!

தொழிற்நுட்ப சிறப்பம்சங்களாக, அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் துளை வழங்கப்பட்டுள்ளன. 2022 டங்க் ஸ்கூட்டரில் பெட்ரோல் டேங்க் 4.5 லிட்டர்கள் கொள்ளளவில் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு இந்த 50சிசி ஸ்கூட்டர் அதிகப்பட்சமாக 75 கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியது என ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவிக்கிறது.

என்னங்க சொல்றீங்க... 50சிசி-யில் ஹோண்டா ஸ்கூட்டரா!! இங்க இல்ல, ஜப்பானில் அறிமுகம்!

இது ஜியார்னோ ஸ்கூட்டருடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 5kmpl குறைவாகும். மொத்தம் 81 கிலோ எடை கொண்டதாக உள்ள புதிய ஹோண்டா டங்க் ஸ்கூட்டரில் ஓட்டுனர் இருக்கை தரையில் இருந்து 730மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது உயரம் குறைவான ரைடர்களுக்கும் ஏற்றதாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

என்னங்க சொல்றீங்க... 50சிசி-யில் ஹோண்டா ஸ்கூட்டரா!! இங்க இல்ல, ஜப்பானில் அறிமுகம்!

ஜப்பான் நாட்டு சந்தையில் ஹோண்டா டங்க் ஸ்கூட்டரின் விலை 2,29,900 ஜப்பானிய யென் -ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1.47 லட்சம் அதிகமாகும். ஜப்பான் நம் இந்தியாவை காட்டிலும் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடு என்பது உண்மைதான், இருப்பினும் ஒரு 50சிசி ஸ்கூட்டருக்கு ஏறக்குறைய ரூ.1.50 லட்சம் என்பது அதிகப்படியான விலையே ஆகும்.

என்னங்க சொல்றீங்க... 50சிசி-யில் ஹோண்டா ஸ்கூட்டரா!! இங்க இல்ல, ஜப்பானில் அறிமுகம்!

தற்போதைக்கு இது ஜப்பானில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இப்போதைக்கு வாய்ப்பே இல்லை. இந்தியாவில் ஸ்டைலிஷான மற்றும் இளம் தலைமுறையினரை கவரக்கூடிய ஸ்கூட்டர் என்று பார்த்தால், டிவிஎஸ் என்டார்க் 125 மற்றும் சமீபத்திய அறிமுகமான சுஸுகி அவெனிஸை சொல்லலாம்.

என்னங்க சொல்றீங்க... 50சிசி-யில் ஹோண்டா ஸ்கூட்டரா!! இங்க இல்ல, ஜப்பானில் அறிமுகம்!

ஹோண்டா பிராண்டிலும் க்ரேஸியா 125 சந்தையில் விற்பனையில் உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.78,644 உள்ளது. இதில் பொருத்தப்படுகின்ற 125சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 124.9சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம்-இல் 8.52 பிஎச்பி மற்றும் 5,000 ஆர்பிஎம்-இல் 10.54 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

என்னங்க சொல்றீங்க... 50சிசி-யில் ஹோண்டா ஸ்கூட்டரா!! இங்க இல்ல, ஜப்பானில் அறிமுகம்!

இதே என்ஜின் தான் இந்திய சந்தையில் பிரபலமான ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரிலும் பொருத்தப்படுகிறது. டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.79,257 ஆகவும், புதிய சுஸுகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் ரூ.88,848 ஆகவும் உள்ளன. இவற்றை காட்டிலும் அளவில் பெரியதாக சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் உள்ளது.

Most Read Articles
English summary
Honda Dunk Scooter.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X