ஹார்னட் மாதிரி பைக் விடச் சொன்னா ஹார்னட்டயே அப்டேட் பண்ணி பெயரை மாற்றி விட்டுருக்காங்க....

ஹோண்டா நிறுவனம் CB300F என்ற புதிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை கீழே காணலாம் வாருங்கள்.

ஹார்னட் மாதிரி பைக் விடச் சொன்னா ஹார்னட்டயே அப்டேட் பண்ணி பெயரை மாற்றி விட்டுருக்காங்க . . . .

இந்தியாவில் சமீபகாலமாக 300 சிசிக்கு அதிக திறன் இன்ஜின் கொண்ட வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த கேட்டகிரியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம்தான் சிறப்பான விற்பனையில் இருக்கிறது. இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் 300 சிசி கேட்டகிரியில் இன்று தனது புதிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹார்னட் மாதிரி பைக் விடச் சொன்னா ஹார்னட்டயே அப்டேட் பண்ணி பெயரை மாற்றி விட்டுருக்காங்க . . . .

அதன்படி ஹோண்டா நிறுவனம் CB300F என்ற பைக்கை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கை ஹோண்டா நிறுவனம் மிட் வெயிட் ஸ்டிரீட் ஃபைட்டர் பைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் குறித்த அனைத்து தகவல்களை தற்போது அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் கீழே ஒவ்வொன்றாகக் காணலாம்

ஹார்னட் மாதிரி பைக் விடச் சொன்னா ஹார்னட்டயே அப்டேட் பண்ணி பெயரை மாற்றி விட்டுருக்காங்க . . . .

ஹோண்டா நிறுவனம் மொத்தம் டீலக்ஸ் மற்றும் டீலக்ஸ் ப்ரோ ஆகிய இரண்டு வேரியன்டாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட்கள், முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ், ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, ஹோண்டா செலெக்டபிள் டார்க் கண்ட்ரோல் மற்றும் அலாய் வீல் உள்ளிட்ட ஆப்ஷன்கள் உள்ளன.

ஹார்னட் மாதிரி பைக் விடச் சொன்னா ஹார்னட்டயே அப்டேட் பண்ணி பெயரை மாற்றி விட்டுருக்காங்க . . . .

இந்த பைக்கின் சஸ்பென்சனை பொருத்தவரை முன்புறம் தலை கீழாக அமைக்கப்பட்ட ஃபோர்க், பின்பக்கம் 5 ஸ்டெப் அட்ஜெஸ்டபுள் மோனோஷாக் ஆகிய சஸ்பென்சர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரேக்களை பொருத்தவரை முன்பக்கம் 276மிமீ டிஸ்க் பிரேக், பின்பக்கம் 220 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இது போகப் பின்புறம் 150 மிமீ டயரும் பொருத்தப்பட்டுள்ளது.

ஹார்னட் மாதிரி பைக் விடச் சொன்னா ஹார்னட்டயே அப்டேட் பண்ணி பெயரை மாற்றி விட்டுருக்காங்க . . . .

இந்த ஹோண்டா CB300F பைக்கை பொருத்தவரை 24.1 எச்பி பவரையும், 25.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 293 சிசி, 4 வால்வு, ஆயில் கூல்டு, SOHC இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கியர் பாக்ஸ் ஸ்லிப் - அண்ட் - அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.

ஹார்னட் மாதிரி பைக் விடச் சொன்னா ஹார்னட்டயே அப்டேட் பண்ணி பெயரை மாற்றி விட்டுருக்காங்க . . . .

இந்த பைக் ஏற்கனவே மார்கெட்டில் உள்ள பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், கேடிஎம் 390 டியூக், ஆகிய பைக்களுக்கு போட்டியாக வெளியாகியுள்ளது. இந்த பைக்கள் தான் ஸ்டிரீட் ஃபைட்டர் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கேட்டகிரியில் போட்டியாக ஹோண்டா CB300F பைக் களத்தில் இறங்கவுள்ளது.

ஹார்னட் மாதிரி பைக் விடச் சொன்னா ஹார்னட்டயே அப்டேட் பண்ணி பெயரை மாற்றி விட்டுருக்காங்க . . . .

இந்த பைக்கின் விலையைப் பொருத்தவரை டீலக்ஸ் பைக் ரூ2.26 லட்சம் என்ற ஆன்ரோடு விலையிலும் டீலக்ஸ் ப்ரோ பைக் ரூ2.29 லட்சம் என்ற ஆன்ரோடு விலையிலும் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இதன் போட்டி பைக்களான பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் கேடிஎம் 390 டியூக் ஆகிய பைக்களின் விலையை விட குறைவு தான்.

ஹார்னட் மாதிரி பைக் விடச் சொன்னா ஹார்னட்டயே அப்டேட் பண்ணி பெயரை மாற்றி விட்டுருக்காங்க . . . .

இந்தபைக்கின் லுக்கை பொருத்தவரை அப்டேட் செய்யப்பட்ட ஹார்னட் பைக் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. இந்த பைக்கில் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிங் தொழிற்நுட்பம் டீலக்ஸ் ப்ரோ வேரியன்டில் மட்டும் இருக்கிறது. டீலக்ஸ் வேரியன்டில் அந்தவசதி இல்லை. ஸ்மார்ட்போன்களை இணைப்பது மூலம் போன்களை அட்டென்செய்வது வாய்ஸ் மூலம் நேவிகேஷன் தகவல்களைப் பெறுவது உள்ளிட்ட வசதிகளைப் பெறுகிறது.

ஹார்னட் மாதிரி பைக் விடச் சொன்னா ஹார்னட்டயே அப்டேட் பண்ணி பெயரை மாற்றி விட்டுருக்காங்க . . . .

இந்தபைக் மொத்தம் 3 விதமான கலர் ஆப்ஷன்களில் வெளியாகிறது. அதன்படி மேட் ஆக்ஸிஸ் க்ரே மெட்டாலிக், மேட் மார்டெல் ப்ளு மெட்டாலிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் ஆகிய கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles

English summary
Honda Launches CB300F bike in two variants know the price and other details
Story first published: Monday, August 8, 2022, 20:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X