ஷைன் பைக்கை கூடுதல் அழகாக்கிய ஹோண்டா... மலிவு விலை 125சிசி பைக் சிடி 125எக்ஸ்-க்கு போட்டியாக அறிமுகம்!

ஹோண்டா (Honda) நிறுவனம் அதன் ஷைன் (Shine) பைக்கை இன்னும் பல மடங்கு அழகானதாக மாற்றியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஷைன் பைக்கை கூடுதல் அழகாக்கிய ஹோண்டா... மலிவு விலை 125சிசி பைக் சிடி 125எக்ஸ்-க்கு போட்டியாக அறிமுகம்!

தினசரி இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற இருசக்கர வாகன விளங்கிக் கொண்டிருக்கின்றது ஹோண்டா நிறுவனத்தின் ஷைன் (Honda Shine) பைக் மாடல். மிகவும் சிம்பிளான தோற்றம், அதிக தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் சூப்பரான மைலேஜ் திறன் ஆகிய சிறப்புகளை இந்த பைக் கொண்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இந்தியாவில் பல ஆண்டுகளைக் கடந்தும் இப்போதும் இப்பைக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஷைன் பைக்கை கூடுதல் அழகாக்கிய ஹோண்டா... மலிவு விலை 125சிசி பைக் சிடி 125எக்ஸ்-க்கு போட்டியாக அறிமுகம்!

இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஷைன் பைக் மாடலில் சிறப்பு பதிப்பு ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஷைன் செலபிரேஷன் எடிசன் (Honda Shine Celebration Edition) எனும் மாடலையே நிறுவனம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

ஷைன் பைக்கை கூடுதல் அழகாக்கிய ஹோண்டா... மலிவு விலை 125சிசி பைக் சிடி 125எக்ஸ்-க்கு போட்டியாக அறிமுகம்!

இதற்கு அறிமுக விலையாக ரூ. 78,878 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. வழக்கமான ஷைன் பைக் மாடலைக் காட்டிலும் இதன் விலை ரூ. 1,500 கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. வழக்கமான வேரியண்டைக் காட்டிலும் இதன் பிரீமியம் தோற்றம் கூடுதலாக்கப்பட்டிருப்பதே இந்த அதிக விலைக்கு காரணமாக உள்ளது.

ஷைன் பைக்கை கூடுதல் அழகாக்கிய ஹோண்டா... மலிவு விலை 125சிசி பைக் சிடி 125எக்ஸ்-க்கு போட்டியாக அறிமுகம்!

ஆமாங்க, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஹோண்டா நிறுவனம் ஷைன் பைக்கை சற்று கவர்ச்சியான நிறங்களால் அலங்கரித்திருக்கின்றது. இது அப்பைக்கிற்கு முற்றிலும் புதிய தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. சொல்லப்போனால் நிறுவனம் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்திருப்பதைபோல் இந்த வாகனம் காட்சியளிக்கின்றது.

ஷைன் பைக்கை கூடுதல் அழகாக்கிய ஹோண்டா... மலிவு விலை 125சிசி பைக் சிடி 125எக்ஸ்-க்கு போட்டியாக அறிமுகம்!

இதற்காக நிறுவனம் கோல்டு நிறத்தை அதிகளவில் பயன்படுத்தியிருக்கின்றது. இந்த நிறத்திலான எம்பளமே (சின்னமே) இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், செல்பரேஷன் எடிசன் எனும் லோகோவும் பைக்கின் பெட்ரோல் டேங்கின் மேற்பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சேடில் பிரவுன் நிறத்திலான இருக்கைகள் புதிதாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஷைன் பைக்கை கூடுதல் அழகாக்கிய ஹோண்டா... மலிவு விலை 125சிசி பைக் சிடி 125எக்ஸ்-க்கு போட்டியாக அறிமுகம்!

இத்துடன், மேட் ஆக்ஸிஸ் கிரே மெட்டாலிக் மஃப்ளர் கவர், ஆங்காங்க தங்க நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட சைடு பேனல்கள் மற்றும் முன் பக்கத்தில் கோல்டு கார்னிஷ் உள்ளிட்டவைக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றினாலேயே சிறப்பு பதிப்பு ஷைன் முற்றிலும் ஸ்பெஷலான பைக்காக மாறியிருக்கின்றது. இந்த வாகனத்தை, அதாவது, ஷைன் செலபிரேஷன் எடிசனை இரு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது, ஹோண்டா.

ஷைன் பைக்கை கூடுதல் அழகாக்கிய ஹோண்டா... மலிவு விலை 125சிசி பைக் சிடி 125எக்ஸ்-க்கு போட்டியாக அறிமுகம்!

அவை, மேட் சங்க்ரியா ரெட் மெட்டாலிக் மற்றும் மேட் ஸ்டீல் பிளாக் மெட்டாலிக் ஆகியவை ஆகும். இதுமட்டுமின்றி, இந்த சிறப்பு பதிப்பு ஷைன் பைக்கை டிரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனிலும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது ஹோண்டா நிறுவனம். இந்த தேர்வுகள் வாடிக்கையாளர்களைக் கூடுதலாக கவரும் பொருட்டு ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஷைன் பைக்கை கூடுதல் அழகாக்கிய ஹோண்டா... மலிவு விலை 125சிசி பைக் சிடி 125எக்ஸ்-க்கு போட்டியாக அறிமுகம்!

இந்த இருசக்கர வாகனத்தில் ஹோண்டா நிறுவனம் 123.94 சிசி திறனை வெளியேற்றக் கூடிய மோட்டாரையே பயன்படுத்தியுள்ளது. இது 7,500 ஆர்பிஎம்மில் 10.59 எச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 11 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதே மோட்டாரே வழக்கமான ஷைன் பைக் மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஷைன் பைக்கை கூடுதல் அழகாக்கிய ஹோண்டா... மலிவு விலை 125சிசி பைக் சிடி 125எக்ஸ்-க்கு போட்டியாக அறிமுகம்!

இதை வைத்து பார்க்கையில் ஹோண்டா நிறுவனம் புதிய ஷைன் செலபிரஷன் எடிசனில் வெறும் உருவ அலங்காரத்தை மட்டுமே செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது தெரிய வருகின்றது. இதன் வருகை பஜாஜ் சிடி125எக்ஸ் பைக்கிற்கு போட்டியாக அமைந்துள்ளது. பஜாஜ் நிறுவனம் நேற்றைய தினம் மலிவு விலையில் 125சிசி பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கும் விதமாக சிடி 125எக்ஸ் பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

ஷைன் பைக்கை கூடுதல் அழகாக்கிய ஹோண்டா... மலிவு விலை 125சிசி பைக் சிடி 125எக்ஸ்-க்கு போட்டியாக அறிமுகம்!

இந்த வாகனத்திற்கு போட்டியளிக்கும் வகையிலேயே இக்கவர்ச்சியான ஷைன் செலபிரேஷன் எடிசன் விற்பனைக்கு வந்திருக்கின்றது. நாட்டின் மூன்றாவது அதிகம் விற்பனையாகும் பைக் மாடல் ஷைன் என்பதை நாம் யாராலும் மறுக்க முடியாது. ஹோண்டா ஆக்டிவா, ஹீரோ ஸ்பிளெண்டர் ஆகிய இரு இருசக்கர வாகன மாடல்களுக்கு அடுத்தபடியாக ஹோண்டா ஷைனே இந்தியர்களின் பிரியமான இருசக்கர வாகனமாக இருக்கின்றது.

ஷைன் பைக்கை கூடுதல் அழகாக்கிய ஹோண்டா... மலிவு விலை 125சிசி பைக் சிடி 125எக்ஸ்-க்கு போட்டியாக அறிமுகம்!

இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 2022 ஜூன் மாதத்தில் மிக அதிக எண்ணிக்கையில் இப்பைக் விற்பனையாகியிருந்தது. சுமார் 1,25,947 யூனிட்டுகள் ஷைன் பைக் மாடல் விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஷைன் மற்றும் எஸ்பி 125 ஆகிய இரண்டும் சேர்ந்து பெற்ற விற்பனை எண்ணிக்கை இதுவாகும். இந்த எண்ணிக்கை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தைக் காட்டிலும் 75 சதவீதம் அதிக விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: முதல் இரு படத்தை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Honda launches shine celebration edition in india at rs 78878
Story first published: Friday, August 26, 2022, 9:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X