ஆக்டிவா 6ஜி ஸ்பெஷல் எடிசனை முழுமையாக காட்சிப்படுத்திய ஹோண்டா... செம்ம அழகா இருக்கு... நமக்கே வாங்க தோனுது!

ஹோண்டா (Honda Motorcycle and Scooters India) நிறுவனம் அதன் வரவிருக்கும் ஆக்டிவா பிரீமியம் எடிசன் (Activa Premium Edition) எனும் சிறப்பு பதிப்பு இருசக்கர வாகன சந்தை முதல் முறையாக வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆக்டிவா 6ஜி ஸ்பெஷல் எடிசனை முழுமையாக காட்சிப்படுத்திய ஹோண்டா... செம்ம அழகா இருக்கு... நமக்கே வாங்க தோனுது!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle and Scooters India) நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஆக்டிவா 6ஜி (Activa 6G) ஸ்கூட்டர் மாடலில் பிரீமியம் எடிசன் (Activa Premium Edition) எனும் சிறப்பு பதிப்பை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த தகவலை நிறுவனம் அதன் டுவிட்டர் பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் ஆக்டிவா 6ஜி-யைக் காட்டிலும் பல மடங்கு கவர்ச்சியான தயாரிப்பாக ஆக்டிவா பிரீமியம் எடிசன் காட்சியளிக்கின்றது.

ஆக்டிவா 6ஜி ஸ்பெஷல் எடிசனை முழுமையாக காட்சிப்படுத்திய ஹோண்டா... செம்ம அழகா இருக்கு... நமக்கே வாங்க தோனுது!

வெளிப் புற தோற்றம் மட்டுமே இந்த கவர்ச்சியான தோற்றத்திற்காக மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆக்டிவா பேட்ஜ், வீல் ரிம் மற்றும் இன்னும் சில முக்கிய கூறுகளில் மட்டும் கோல்டன் நிறம் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த பிரத்யேக நிற பூச்சு ஸ்கூட்டருக்கு பல மடங்கு அழகைச் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. தற்போது இருசக்கர வாகனம் பொது பார்வைக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

ஆக்டிவா 6ஜி ஸ்பெஷல் எடிசனை முழுமையாக காட்சிப்படுத்திய ஹோண்டா... செம்ம அழகா இருக்கு... நமக்கே வாங்க தோனுது!

விற்பனைக்கு விரைவில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்போதே ஸ்பெஷல் எடிசனின் விலை மற்றும் பிற முக்கிய விபரங்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன. சமீப சில காலமாக நிறுவனம் இந்த இருசக்கர வாகனத்தின் டீசர் படத்தை வெளியிட்ட வண்ணம் இருந்தது. இந்த நிலையிலேயே அதனை முழுமையாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றது.

ஆக்டிவா 6ஜி ஸ்பெஷல் எடிசனை முழுமையாக காட்சிப்படுத்திய ஹோண்டா... செம்ம அழகா இருக்கு... நமக்கே வாங்க தோனுது!

ஆனால், ஒரு பக்கம் சுய விபரத்தை வெளிக்காட்டக் கூடிய படம் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றது. வெகு விரைவில் அல்லது இன்னும் ஒரு சில தினங்களில் முழுமையாக காட்சிப்படுத்தப்பட இருக்கின்றது. இருசக்கர வாகனத்தை அலங்கரிக்கும் கோல்டன் நிறம் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் போலவே பழுப்பு நிறமும் ஸ்பெஷல் பதிப்பில் அதிகளவில் பயன்டுத்தப்பட்டிருக்கின்றது.

ஆக்டிவா 6ஜி ஸ்பெஷல் எடிசனை முழுமையாக காட்சிப்படுத்திய ஹோண்டா... செம்ம அழகா இருக்கு... நமக்கே வாங்க தோனுது!

இருக்கை, கால் வைக்கும் இடம் மற்றும் ஸ்பீடோ மீட்டர் இருக்கும் பகுதி என அனைத்து இடங்களிலும் இந்த நிறத்தினாலயே அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் பிரபலமான இருசக்கர வாகனத்திற்கு பல மடங்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இந்த செயல்பாடு அமைந்துள்ளது. இந்த சிறப்பு பதிப்பில் டிஸ்க் பிரேக் தேர்வு வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.

ஆக்டிவா 6ஜி ஸ்பெஷல் எடிசனை முழுமையாக காட்சிப்படுத்திய ஹோண்டா... செம்ம அழகா இருக்கு... நமக்கே வாங்க தோனுது!

தற்போது வெளியாகியிருக்கும் படத்தில் டிரம் கொண்ட ஆக்டிவா 6ஜி பிரீமியம் எடிசனே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. வழக்கமான ஆக்டிவா 6ஜி மற்றும் புதிய சிறப்பு பதிப்பு ஆக்டிவா 6ஜி ஆகிய இரண்டிற்கும் இடையில் வெளிப்புற தோற்றம் மட்டுமே வித்தியாசம் உள்ளது. வேறு எந்த விஷயத்திலும் இவை இரண்டிற்கும் இடையில் வித்தியாசம் தென்படவில்லை.

ஆக்டிவா 6ஜி ஸ்பெஷல் எடிசனை முழுமையாக காட்சிப்படுத்திய ஹோண்டா... செம்ம அழகா இருக்கு... நமக்கே வாங்க தோனுது!

குறிப்பாக, அனைத்து மெக்கானிக்கல் விஷயத்திலும் இரு வாகனங்களும் ஒரே மாதிரியாக உள்ளன. ஆகையால், பிரேக்கிங் சிஸ்டம், எஞ்ஜின் மற்றும் சஸ்பென்ஷன் ஆகிய அனைத்தும் இரண்டும் ஒரே மாதிரியான இருக்கின்றன. தற்போது, ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் 109 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.8 எச்பி பவரை 8,800 ஆர்பிஎம்மிலும், 8.84 என்எம் டார்க்கை 5,250 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும்.

ஆக்டிவா 6ஜி ஸ்பெஷல் எடிசனை முழுமையாக காட்சிப்படுத்திய ஹோண்டா... செம்ம அழகா இருக்கு... நமக்கே வாங்க தோனுது!

இதில் டிரான்ஸ்மிஷன் அம்சத்திற்காக சிவிடி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்தகைய மோட்டாருடனேயே ஆக்டிவா 6ஜி விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. இது ரூ. 72 தொடங்கி ரூ. 74 வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரீமியம் தர அம்சங்கள் அதிகளவில் இடம் பெற இருப்பதால் இத்தகைய அதிகபட்ச விலையில் அது எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்குறிப்பிடப்பட்ட விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

ஆக்டிவா 6ஜி ஸ்பெஷல் எடிசனை முழுமையாக காட்சிப்படுத்திய ஹோண்டா... செம்ம அழகா இருக்கு... நமக்கே வாங்க தோனுது!

இந்த வாகனத்தின் வருகை டிவிஎஸ் ஜுபிடர், சுஸுகி அக்செஸ் மற்றும் ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த வாகனம் இப்போதே இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்தியாவில் இது நல்ல விற்பனை எண்ணிக்கையைப் பெறும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Honda official released photo of their upcoming activa 6g premium edition scooter
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X