புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தில் ஹோண்டா... பெயருக்கு ஏற்ப ஸ்கூட்டரும் சூப்பரா இருக்குது!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஹோண்டா (Honda, ஸ்கூபி (Scoopy) எனும் புதுமுக ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தில் ஹோண்டா... பெயருக்கு ஏற்ப ஸ்கூட்டரும் சூப்பரா இருக்குது!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதுமுக ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் புதிய அந்த ஸ்கூட்டருக்கான காப்புரிமை தாக்கல் (Patent Filed) பதிவை செய்திருக்கின்றது.

புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தில் ஹோண்டா... பெயருக்கு ஏற்ப ஸ்கூட்டரும் சூப்பரா இருக்குது!

ஸ்கூபி (Honda Scoopy) எனும் புதுமுக ஸ்கூட்டருக்கே நிறுவனம் காப்புரிமை தாக்கல் செய்திருக்கின்றது. இந்த பதிவு செயலை ஹோண்டா நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதமே செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த தகவல்கள் இப்போதே வெளிவர தொடங்கியுள்ளன. ஹோண்டா நிறுவனம் பன்முக புது வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தில் ஹோண்டா... பெயருக்கு ஏற்ப ஸ்கூட்டரும் சூப்பரா இருக்குது!

அதில் ஒன்றே ஸ்கூபி. இது ஓர் மாடர்ன் கிளாசிக் ரக ஸ்கூட்டராகும். ரெட்ரோ ஸ்டைலுக்குண்டான அம்சங்கள் சிலவும் ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன. இது இளம் தலைமுறையினரை நிச்சயம் கவரும். தற்போது விற்பனையில் இருக்கும் டியோ மற்றும் ஆக்டிவா 6ஜி ஆகிய ஸ்கூட்டர்களை போல் நல்ல வரவேற்பை இந்தியர்கள் மத்தியில் பெறும் என ஹோண்டா நம்புகின்றது.

புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தில் ஹோண்டா... பெயருக்கு ஏற்ப ஸ்கூட்டரும் சூப்பரா இருக்குது!

முட்டை வடிவ ஹெட்லேம்ப், விநோத தோற்றத்திலான இன்டிகேட்டர் மின் விளக்குகள் உள்ளிட்டவை ஸ்கூபி ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன், முற்றிலும் வித்தியாசமான முன் தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் ஹேண்டில் பார், ஒற்றை துண்டு சேடில், பெரிய மற்றும் நீளமான தோற்றம் கொண்ட இருக்கை உள்ளிட்டவையும் ஸ்கூபி ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தில் ஹோண்டா... பெயருக்கு ஏற்ப ஸ்கூட்டரும் சூப்பரா இருக்குது!

ஸ்கூபி மாதிரியான தோற்றம் கொண்ட ஸ்கூட்டர்களை ஐரோப்பிய சந்தையிலேயே அதிகளவில் காண முடியும். இந்த நிலையிலேயே இந்த ஸ்கூட்டரைக் கொண்டு இந்தியாவையும் ஒரு கை பார்க்கும் விதமாக, ஹோண்டா நிறுவனம், ஸ்கூபிக்கு பேடண்ட் பதிவை செய்திருக்கின்றது. தோற்றத்தில் மட்டுமல்ல சிறப்பம்சத்திலும் இந்த ஸ்கூட்டர் சிறப்பானதாக காட்சியளிக்கின்றது.

புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தில் ஹோண்டா... பெயருக்கு ஏற்ப ஸ்கூட்டரும் சூப்பரா இருக்குது!

யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், சாவியில்லாமல் எஞ்ஜினை ஆன் செய்யும் வசதி, புரஜெக்டர் எல்இடி ஹெட்லைட், மல்டி ஃபங்க்சன் ஹூக், சைடு ஸ்டாண்ட் இன்டிகேட்டர் மற்றும் இருக்கைக்கு அடியில் 15.4 லிட்டர் ஸ்டோரேஜ் உள்ளிட்டவை ஸ்கூபியில் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தில் ஹோண்டா... பெயருக்கு ஏற்ப ஸ்கூட்டரும் சூப்பரா இருக்குது!

இதுதவிர, பாதுகாப்பு விஷயத்திற்காக ஆன்டி தெஃப்ட் அலாரம் மற்றும் திருப்பி பதிலளிக்கும் வசதிக் கொண்ட ஸ்மார்ட் கீ உள்ளிட்டவையும் ஸ்கூபியில் வழங்கப்பட இருக்கின்றன. இத்துடன், சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் பொருட்டு டெலிஸ்கோபிக் ஃபோர்க் ஸ்கூட்டரின் முன் பக்கத்திலும், மோனோஷாக் பின்பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தில் ஹோண்டா... பெயருக்கு ஏற்ப ஸ்கூட்டரும் சூப்பரா இருக்குது!

இதுதவிர, 12 இன்ச் அலாய் வீல்கள் ஸ்கூட்டரின் இரு முனைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக டிஸ்க் பிரேக் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் ஸ்கூட்டரில் கொடுக்கப்படும்.

புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தில் ஹோண்டா... பெயருக்கு ஏற்ப ஸ்கூட்டரும் சூப்பரா இருக்குது!

ஸ்கூபியில் 109.51 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு, எஸ்ஓஎச்சி எஞ்ஜினே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதே எஞ்ஜின் ஆக்டிவா மற்றும் டியோ ஸ்கூட்டர்களிலும் பயன்படுத்தப்பட்டன. இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.76 பிஎஸ் பவரையும், 9 என்எம் டார்க்கையும் வெளியற்றும் திறன் கொண்டவை.

புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தில் ஹோண்டா... பெயருக்கு ஏற்ப ஸ்கூட்டரும் சூப்பரா இருக்குது!

இத்தகைய சூப்பரான திறன் வசதிகளுடனேயேஸ் ஸ்கூபி இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் வருகை எப்போது அமையும் என்பது தெளிவாக தெரியவில்லை. தற்போது இந்தோனேசியா போன்ற குறிப்பிட்ட உலக சந்தைகளில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தில் ஹோண்டா... பெயருக்கு ஏற்ப ஸ்கூட்டரும் சூப்பரா இருக்குது!

ஸ்கூபி ஓர் மிக சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் ஸ்கூட்டர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், ஸ்கூட்டரில் ஏசிஜி எனும் ஸ்டார்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கும். அது, மிக ஸ்மூத்தான எஞ்ஜின் இயக்கத்தை வழங்க உதவும்.

Most Read Articles
English summary
Honda patent filed for scoopy 110cc scooter here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X