ஓலாவை வச்சு செய்ய போகும் ஹோண்டா... 2023ல் இருக்கிறது கடும் போட்டி...

ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டம் அறிமுகமாகிவிட்டால் விரைவில் நம்பர் 1 விற்பனையை என்ற இடத்தை பிடிக்கும் எனவும் கணிப்பு இது குறித்த முழு தகவல்களை கீழே காணலாம் வாருங்கள்

ஓலாவை வச்சு செய்ய போகும் ஹோண்டா... 2023ல் இருக்கிறது கடும் போட்டி...

இந்தியாவில் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மவுசு கூடியுள்ளது. மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முனைப்பு காட்டி வருகின்றனர். இன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்கெட்டில், ஓலா, ஹீரோ எலெக்ட்ரிக், ஒகினவா ஆகிய நிறுவனங்கள் டாப் 3 இடங்களில் உள்ளனர்.

ஓலாவை வச்சு செய்ய போகும் ஹோண்டா... 2023ல் இருக்கிறது கடும் போட்டி...

எலெக்டரிக் வாகனங்களை பொறுத்தவரை எலெக்ட்ரிக் காரை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்க தான் மவுசு அதிகம் உள்ளது. அதற்கு முக்கியமான காரணம் விலை. எலெக்ட்ரிக் கார்கள் பெட்ரோல் டீசல்கள் கார்களை விட விலை மிக அதிகமாக உள்ளது. ஆனால் எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் பெட்ரோல் ஸ்கூட்டர்களின் விலையிலேயோ அல்லது அதை விட குறைவாகவோ தான் உள்ளது.

ஓலாவை வச்சு செய்ய போகும் ஹோண்டா... 2023ல் இருக்கிறது கடும் போட்டி...

இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல் ஸ்கூட்டர்களின் நம்பர் 1 விற்பனையில் இருப்பது ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் தான். இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டரின் பெயரிலேயே புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஹோண்டா மோர்ட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அட்சுசூசி ஓட்டகா என்பவர் தெரிவித்துள்ளார்.

ஓலாவை வச்சு செய்ய போகும் ஹோண்டா... 2023ல் இருக்கிறது கடும் போட்டி...

ஹோண்டா நிறுவனம் தற்போது விற்பனையாகும் பெட்ரோல் ஸ்கூட்டர் டிசைனிலேயே எலெக்ட்ரிக்கை பொறுத்தாமல் அதை தனி ஸ்கூட்டராக அறிமுகப்படுத்தவுள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் ஆக்டிவா என்ற பெயர் பிரபலமாகிவிட்டதால் அதே பெயரையே அந்த ஸ்கூட்டருக்கும் வைத்தால் எளிதாக மார்கெட்டிங் செய்யலாம் என திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை 2023ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளது.

ஓலாவை வச்சு செய்ய போகும் ஹோண்டா... 2023ல் இருக்கிறது கடும் போட்டி...

ஆனால் ஹோண்டா நிறுவனம் இதற்காக ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக புதிய டிசைனை வெளியிடப்போகிறதா? அல்லது சர்வதேச மார்கெட்டில் உள்ள வேறு ஏதாவது வாகனத்தில் லேசாகாக ஏதாவது மாற்றம் செய்து வெளியிடுகிறதா என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

ஓலாவை வச்சு செய்ய போகும் ஹோண்டா... 2023ல் இருக்கிறது கடும் போட்டி...

ஆனால் ஹோண்டா நிறுவனம் பென்லி ஸ்கூட்டர்களை சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Automotive Research Association of India(ARAI)ல் பென்லி ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் சோதனை செய்துள்ளது. பென்லி என்பது ஹோண்டா நிறுவனம் ஜப்பானில் விற்பனை செய்து வரும் ஒரு ஸ்கூட்டர் ஆகும். அந்த நாட்டில் அந்த ஸ்கூட்டர் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.

ஓலாவை வச்சு செய்ய போகும் ஹோண்டா... 2023ல் இருக்கிறது கடும் போட்டி...

ஜப்பானில் பென்லியை ஸ்கூட்டரை பொறுத்தவரை மொத்தம் 4 வேரியண்ட்கள் உள்ளன. பென்லி இ: I, பென்லி இ: I ப்ரோ, பென்லி இ: II, and பென்லி இ: II ப்ரோ, ஆகிய 4 வேரியண்ட்களில் விற்பனையாகிவருகிறது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள உதிரி பாகங்கள் தரமானதாவும் வாடிக்கையாளர்களுக்கு பிடித்ததுமாக இருப்பதாக பல பாசிடிவ் விமர்சனங்கள் இந்த ஸ்கூட்டரின் மீது உள்ளது.

ஓலாவை வச்சு செய்ய போகும் ஹோண்டா... 2023ல் இருக்கிறது கடும் போட்டி...

ஏற்கனவே இந்தியாவில் சோனையில் இருப்பதால் ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டரையே இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகப்படுத்தகூடும் என எதிர்பா்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஹோண்டா நிறுவனத்திடம் ஹோண்டா பிசிஎக்ஸ் எலெக்ட்ரிக், ஹோண்டா கைரோ இ, ஹோண்டா கைரோ கேனோப்பி உள்ளிட்ட பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சர்வதேச சந்தைகளில் உள்ளன.

ஓலாவை வச்சு செய்ய போகும் ஹோண்டா... 2023ல் இருக்கிறது கடும் போட்டி...

ஹேண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஏற்கன புகுந்து விட்டது. எலெக்டரிக் வாகன பேட்டரிகளை தயாரிக்கும் நிறுவனத்தை ரூ133 கோடி முதலீட்டில் துவங்க திட்டமிட்டுவிட்டது. தற்போது அதன் அடிப்படையாக கொண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கவுள்ளது.

ஓலாவை வச்சு செய்ய போகும் ஹோண்டா... 2023ல் இருக்கிறது கடும் போட்டி...

ஹோண்டா நிறுவனம் இப்படியாக எலெக்ட்ரிக் மார்கெட்டிற்குள் நுழைத்தால் மார்கெட்டில் மிகப்பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்களுக்கு பிடித்துவிட்டால் இந்த துறையிலும் ஆக்டிவா நம்பர்1 விற்பனையாகும் ஸ்கூட்டர் என்ற நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Honda planning to launch activa electric scooter in 2023
Story first published: Thursday, May 5, 2022, 17:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X