"எலெக்ட்ரிக் எல்லாம் வேஸ்ட்.. நாங்க ஃபிளக்ஸி ஃபியூயல் வாகனம் தயாரிக்க போறோம்" புது ரூட்டை எடுக்கும் ஹோண்டா

தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்குப் பதிலாக 2024ம் ஆண்டு ஃபிளக்ஸி ஃபியூயல் வாகனங்களைக் களம் இறக்க முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் எல்லாம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பலர் வாகனங்களைப் பயன்படுத்தவே முடியாமல் தவித்துவருகின்றனர். போக்குவரத்திற்கான செலவு மிக அதிகமாக இருக்கிறது. ஒருவர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்காக ஆகும் செலவு 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது இரண்டும் மடங்கு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தத் துவங்கிவிட்டனர். ஹீரோ துவங்கி, டிவிஎஸ் வரை பல முன்னணி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியைத் துவங்கிவிட்டனர். பெரிய அளவில் இல்லாவிட்டாலும் ஒரு சில வாகனங்களையாவது தயாரிக்கத் துவங்கிவிட்டனர். எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் இந்தியாவில் அதிகம் செயல்படப்போகிறது என்ற பேச்சும் மக்கள் மத்தியில் அடிபடுகிறது. மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் செய்து வருகிறது.

இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் இதுவரை இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யவில்லை . இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அட்சுஸி ஓகாட்டா என்பவர் சமீபத்தில் இது குறித்துப் பேசியிருந்தார். அப்பொழுது ஹோண்டா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனத்தைத் தயாரிப்பதில் தீவிரம் காட்ட வில்லை என்றும் மாறாக பிளக்ஸ் பியூயல் மாடல் வாகனங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

மத்திய அரசு அடுத்த சில ஆண்டுகளில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலின் அளவை குறைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது பெட்ரோலுடன் எத்தனாலை சேர்த்து பெட்ரோலை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் ஃபிளக்ஸி ஃபியூயல் ரக வாகனங்களை உற்பத்தி செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

மேலும் அவர் அளித்த பேட்டியில் இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் 2024ம் ஆண்டிற்கு ஃபிளக்ஸி ஃபியூயல் வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம் என்றும் மெது மெதுவாக அந்நிறுவன தயாரிப்பு வாகனங்களில் ஃபிளக்ஸி ஃபியூயல் வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் எலெக்டரிக் வாகனம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்ட போது. இந்தியாவில் தற்போது ஹோண்டா எலெக்டரிக் வாகனங்களுக்கான தயாரிப்பு எதுவும் இல்லை என்றும் எதிர்காலத்தில் கொண்டு வருவோமா என்பது குறித்து தற்போது கூற முடியாது என்றும் கூறினார். இது மட்டுமல்ல இந்தியாவைப் பொருந்தவரை எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கைகள் ஓங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹோண்டாவை பொருத்தவரை, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்தியச் சூழ்நிலைக்கு அந்த பைக்களை விற்பனை செய்ய முடியாது என ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவின் எலெக்டரிக் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்றால் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட எலெக்டரிக் வாகனங்களைத்தான் விற்பனை செய்ய வேண்டும் என ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இல்லை. அதனால் பேட்டரி உள்ளிட்ட பல விஷயங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால் எலெக்டிரிக் வாகன உற்பத்தியில் தற்போது ஹோண்டா நிறுவனம் ஈடுபடும் எண்ணத்தில் இல்லை எனத் தெரிகிறது.

மேலும் அவர் அளித்த பேட்டியில் அடுத்த சில ஆண்டுகளில் ஹோண்டா நிறுவனம் 100 சிசி கேட்டகிரியில் பல புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தவும், மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பல வாகனங்களை அந்நிறுவனம் ஹரியானா மாநிலத்தில் நடத்தி வரும் தொழிற்சாலையில் அந்த வானகங்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

தற்போது அதிகமான வாகனங்களை விற்பனை செய்யவே ஹோண்டா முயற்சிப்பதாகவும், எலெக்டரிக் போன்ற புதிய ரக வாகனங்களை அறிமுகப்படுத்த ஹோண்டாவிற்கு எண்ணம் இல்லை என்றும் கூறினார். இந்நிறுவனம் தெரிவித்துள்ள ஃபிளக்ஸி ஃபியூயல் என்றால் பெட்ரோல் உடன் எத்தனால் போன்ற வேறு விதமான ஃபியூயல்கள் கலந்து இயங்குவது. இந்த ரக வாகனங்களைப் பயன்படுத்துவதால் பெட்ரோல் பயன்பாடு வெகுவாக குறையும். இதனால் வாகனத்திற்கான போக்குவரத்து செலவும் குறையும்.

எத்தனாலை பொருத்தவரை இந்தியாவின் விவசாய கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக கரும் சக்கை, சோள கழிவுகளிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதை நேரடியாக பெட்ரோல் உடன் கலந்தால் எரிபொருளாகப் பயன்படும். இதைப் பயன்படுத்துவது மூலம் எளிதாக பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்கலாம் என்பதால் சாதாரணமாகவே பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலக்கும் முயற்சியில் மத்திய அரசு உள்ளது.

இந்த ஃபிளக்ஸி ஃபியூயலை பொருத்தவரை மேலும் அதிகமாக எத்தனால் மற்றும் மற்ற எரிபொருளையும் பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்த முடியும். இதற்கான முயற்சியில் தான் தற்போது ஹோண்டா நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றிபெற்றால் இது ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தும்.

Most Read Articles
English summary
Honda plans to introduce Flexi fuel two wheelers in 2024 find full details
Story first published: Friday, May 20, 2022, 12:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X