ஹோண்டா ஷைன் பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை 1 கோடியை எட்டியது!! 125சிசி பைக் பிரிவில் பலரது முதல் சாய்ஸ்!

ஷைன் மோட்டார்சைக்கிள்களின் விற்பனையில் 1 கோடி என்கிற மைல்கல்லை கடந்துள்ளதை ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியா நிறுவனம் விமர்சையாக கொண்டாடி வருகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை 1 கோடியை எட்டியது!! 125சிசி பைக் பிரிவில் பலரது முதல் சாய்ஸ்!

பல்வேறு அம்சங்களுடன், அதிநவீன தொழிற்நுட்பங்களுடன் ஏகப்பட்ட புதிய இருசக்கர வாகனங்கள் நம் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும், உண்மையில் இந்திய சந்தையில் பட்ஜெட் ரக மோட்டார்சைக்கிள்களுக்கே எப்போதும் மார்க்கெட் இருக்கும் என்பது எல்லாருக்கும் நன்றாகவே தெரியும்.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை 1 கோடியை எட்டியது!! 125சிசி பைக் பிரிவில் பலரது முதல் சாய்ஸ்!

ஏனெனில் நம் நாடு இன்னமும் பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் நாடாகவே உள்ளது. புதியதாக மோட்டார்சைக்கிள்களை வாங்குவோரில் பெரும்பாலானோர் அதன் தொழிற்நுட்ப அம்சங்களை பார்ப்பதற்கு முன்னதாக, அந்த மோட்டார்சைக்கிள் எவ்வளவு மைலேஜை வழங்கும், பைக்கின் விலை எவ்வளவு என்பதைதான் முதலாவதாக ஆராய்கின்றனர்.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை 1 கோடியை எட்டியது!! 125சிசி பைக் பிரிவில் பலரது முதல் சாய்ஸ்!

இதனாலேயே ஹீரோ, ஹோண்டா, டிவிஎஸ் போன்ற முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அத்தகைய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்து, விற்பனை செய்து வருகின்றன. இதில் குறிப்பாக ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹோண்டா 2வீலர்ஸ் நிறுவனம் மற்ற வெளிநாட்டு சந்தைகளில் காஸ்ட்லீயான பைக்குகளை விற்பனை செய்தாலும், இந்தியாவில் 'பட்ஜெட்' ரக பைக்குகளுக்கே முன்னுரிமை அளிக்கிறது.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை 1 கோடியை எட்டியது!! 125சிசி பைக் பிரிவில் பலரது முதல் சாய்ஸ்!

இந்த வகையில் ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியா நிறுவனத்தில் இருந்து சந்தைப்படுத்தப்பட்டு வரும் மோட்டார்சைக்கிள் மாடல்தான் ஷைன் ஆகும். அன்றாட பயன்பாட்டிற்கு வாடிக்கையாளர்கள் பலரது முதன்மையான தேர்வுகளுள் ஒன்றாக விளங்கும் ஷைனின் விற்பனையில் 1 கோடி என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் எட்டியுள்ளது.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை 1 கோடியை எட்டியது!! 125சிசி பைக் பிரிவில் பலரது முதல் சாய்ஸ்!

இந்திய 125சிசி மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் ஹோண்டா 2வீலர்ஸ் இந்த பிரிவில் ஷைன் பிராண்டின் மூலமாக சுமார் 50 சதவீத பங்கை தற்சமயம் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, 125சிசி பைக்குகள் பிரிவில் வாடிக்கையாளர்களின் முதன்மையான சாய்ஸாக விளங்கும் ஷைன் தான் 1 கோடி வாடிக்கையாளர்கள் என்கிற மிக பெரிய மைல்கல்லை எட்டியுள்ள முதல் 125சிசி பைக் என்றும் ஹோண்டா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை 1 கோடியை எட்டியது!! 125சிசி பைக் பிரிவில் பலரது முதல் சாய்ஸ்!

அதிலிலும் குறிப்பாக, 2020ஆம் ஆண்டை காட்டிலும் கடந்த 2021ஆம் ஆண்டில் சுமார் 29% அதிக ஹோண்டா ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த சாதனை குறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைவருமான அட்சுஷி ஒகாடா கருத்து தெரிவிக்கையில், "பல ஆண்டுகளாக ஷைன் பெற்ற மிக பெரிய ரெஸ்பான்ஸால் நாங்கள் தாழ்மையுடன் இருக்கிறோம்.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை 1 கோடியை எட்டியது!! 125சிசி பைக் பிரிவில் பலரது முதல் சாய்ஸ்!

அற்புதமான ஷைன் உடன் 2022இல் இந்தியா பயணம் செய்யும்போது, புதிய சவால்களை ஏற்றுக்கொள்வதற்கும், எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களை சிறந்த தயாரிப்புகளுடன் மகிழ்விப்பதற்கும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். HMSI குடும்பத்தின் சார்பாக, ஷைன் பிராண்டில் மதிப்புமிக்க நம்பிக்கையை வைத்துள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்றார்.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை 1 கோடியை எட்டியது!! 125சிசி பைக் பிரிவில் பலரது முதல் சாய்ஸ்!

HMSI நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா பேசுகையில், மில்லியன் கணக்கான ஷைன் பயனர்களிடம் இருந்து பெற்ற அன்பு மற்றும் நம்பிக்கைக்கு நாங்கள் பெருமையையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம். ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாக, ஷைன் என்ற பிராண்ட் பல தலைமுறை ரைடர்களுக்கு உண்மையான துணையாக இருந்து வருகிறது.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை 1 கோடியை எட்டியது!! 125சிசி பைக் பிரிவில் பலரது முதல் சாய்ஸ்!

இது அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள இந்திய குடும்பங்களில் மிகவும் பிரபலமான மோட்டார்சைக்கிள் பிராண்ட்களில் ஒன்றாகும். இது 125சிசி பிரிவில் நம்பத்தன்மை மற்றும் தரங்களின் உண்மையான அளவுகோலை பெருமையுடன் நிலைநிறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் விசுவாசம் என்பது ஒரு அற்புதமான தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவையின் விளைவாகும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை 1 கோடியை எட்டியது!! 125சிசி பைக் பிரிவில் பலரது முதல் சாய்ஸ்!

இதை கருத்தில் கொண்டு, நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை தொடருவோம்" என்றார். 2006இல் முதன்முதலாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா ஷைன் 2017இல் 50 லட்சம் என்கிற மைல்கல்லை எட்டியது. ஆனால் அடுத்த 50 லட்ச வாடிக்கையாளர்கள் வெறும் 5 ஆண்டிற்கு உள்ளாகவே கிடைத்துள்ளனர் என்பதுதான் இதில் சிறப்பே.

Most Read Articles

English summary
Honda 2Wheeler India’s brand Shine celebrates 1 Crore customer milestone.
Story first published: Tuesday, January 18, 2022, 22:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X