ஹோண்டா இந்த எலெக்ட்ரிக் வாகனத்தைதான் முதலில் அறிமுகம் செய்யபோகுதா?.. இப்போவே கதிகலங்கும் போட்டி நிறுவனங்கள்!

ஹோண்டா நிறுவனம் முதலில் களமிறக்க இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹோண்டா இந்த எலெக்ட்ரிக் வாகனத்தைதான் முதலில் அறிமுகம் செய்யபோகுதா?.. இப்போவே கதிகலங்கும் போட்டி நிறுவனங்கள்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை வெளியீடு செய்யும் நாளை அறிவித்திருக்கின்றது. வரும் அக்டோபர் 7 ஆம் தேதியையே நிறுவனம் அறிமுகத்திற்கான நாளாக குறித்து வைத்திருக்கின்றது. இந்த நாளிலேயே நிறுவனம் அதன் விடா (Vida) எனும் புதிய பிராண்டையும் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த பிராண்டின்கீழே நிறுவனத்தின் முதல் மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

ஹோண்டா இந்த எலெக்ட்ரிக் வாகனத்தைதான் முதலில் அறிமுகம் செய்யபோகுதா?.. இப்போவே கதிகலங்கும் போட்டி நிறுவனங்கள்!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே ஹீரோ மோட்டோகார்ப் அதன் புதுமுக மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த நிறுவனம் மட்டுமின்றி இன்னும் சில நிறுவனங்களும் இந்திய சந்தையில் மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கின்றன.

ஹோண்டா இந்த எலெக்ட்ரிக் வாகனத்தைதான் முதலில் அறிமுகம் செய்யபோகுதா?.. இப்போவே கதிகலங்கும் போட்டி நிறுவனங்கள்!

அதில், ஒன்றே பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான, ஹோண்டா. இந்நிறுவனமும் இந்தியாவில் அதன் முதல் மின்சார டூ-வீலரை அறிமுகம் செய்ய இருக்கின்றது. அது முதலில் மொபட் ரக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தையே நாட்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த சம்பவத்தை வரும் 2023 ஏப்ரல் மாதத்திலேயே ஹோண்டா நிறுவனம் செய்ய இருக்கின்றது.

ஹோண்டா இந்த எலெக்ட்ரிக் வாகனத்தைதான் முதலில் அறிமுகம் செய்யபோகுதா?.. இப்போவே கதிகலங்கும் போட்டி நிறுவனங்கள்!

இதனை சமீபத்தில் கார் அண்ட் பைக் செய்தி நிறுவனத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது நிறுவனத்தின் தலைவரும், எம்டி-யும் ஆன அட்சுஷி ஒகடா உறுதிப்படுத்தினார். இதுமட்டுமின்றி இன்னும் சில தகவல்களையும் அவர் வெளியிட்டிருக்கின்றார். இதன் வாயிலாக நிறுவனம் எலெக்ட்ரிக் பைக், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளிட்டவற்றையும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

ஹோண்டா இந்த எலெக்ட்ரிக் வாகனத்தைதான் முதலில் அறிமுகம் செய்யபோகுதா?.. இப்போவே கதிகலங்கும் போட்டி நிறுவனங்கள்!

ஆனால் முதலில் எலெக்ட்ரிக் மொபட்டே ரக டூ-வீலரே நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த வாகனம் வேகம் குறைவானதாகவும், கணிசமான அளவில் நல்ல ரேஞ்ஜை தரக் கூடியதாகவும் இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மணிக்கு 50 கிமீ எனும் வேக திறனிலேயே இந்த எலெக்ட்ரிக் வாகனம் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

ஹோண்டா இந்த எலெக்ட்ரிக் வாகனத்தைதான் முதலில் அறிமுகம் செய்யபோகுதா?.. இப்போவே கதிகலங்கும் போட்டி நிறுவனங்கள்!

இதன் வருகையைத் தொடர்ந்து அடுத்தடுத்த மின் வாகனங்களை நிறுவனம் களமிறக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, அதிக வேகத்தில் ஓடக் கூடிய மின்சார இருசக்கர வாகனங்களையே அது அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. உலகளவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்தியர்கள் மத்தியிலும் மின்சார வாகனங்களுக்கு சூப்பரான வரவேற்பு நிலவத் தொடங்கியுள்ளது.

ஹோண்டா இந்த எலெக்ட்ரிக் வாகனத்தைதான் முதலில் அறிமுகம் செய்யபோகுதா?.. இப்போவே கதிகலங்கும் போட்டி நிறுவனங்கள்!

இதனைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே முன்னணி நிறுவனங்கள் தங்களின் மின் வாகனங்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இந்திய மின்வாகன சந்தையில் தங்களது பங்களிப்பை வழங்கும் விதமாக பஜாஜ், டிவிஎஸ், ஏத்தர் மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் மின் வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹோண்டா இந்த எலெக்ட்ரிக் வாகனத்தைதான் முதலில் அறிமுகம் செய்யபோகுதா?.. இப்போவே கதிகலங்கும் போட்டி நிறுவனங்கள்!

இந்த நிலையிலேயே இவற்றின் வரிசையில் ஹோண்டா நிறுவனம் அதன் பங்களிப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. நிறுவனம் என்ன மாதிரியான வசதியுடன் அதன் முதல் எலெக்ட்ரிக் மொபட்டை விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது தெரியவில்லை. இதுகுறித்த எந்தவொரு தகவலையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை.

ஹோண்டா இந்த எலெக்ட்ரிக் வாகனத்தைதான் முதலில் அறிமுகம் செய்யபோகுதா?.. இப்போவே கதிகலங்கும் போட்டி நிறுவனங்கள்!

இருப்பினும், நிறுவனத்தின் இப்புதிய தகவல் இந்திய ஹோண்டா இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் ஆவலை தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த ஆவலுக்கு விருந்தளிக்கும் வகையில் ஹோண்டா நிறுவனம் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் அதன் இ-மொபட்டை விற்பனைக்குக் கொண்டு வரும் என யூகிக்க முடிகின்றது.

Most Read Articles
English summary
Honda to be launched its first ev in april 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X