இப்படிப்பட்ட ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியாவிற்கு வருகிறதா? இதற்கு போட்டி மாடலே கிடையாதே... ஹோண்டா X-ADV

2022 ஹோண்டா எக்ஸ்-அட்வென்ச்சர் ஸ்கூட்டரின் பெயர் இந்தியாவில் அதிகாரப்பூர்வ பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நமக்கு கிடைக்க பெற்றுள்ள ஆவண படத்தினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்படிப்பட்ட ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியாவிற்கு வருகிறதா? இதற்கு போட்டி மாடலே கிடையாதே... ஹோண்டா X-ADV

அட்வென்ச்சர் இருசக்கர வாகனங்களில், அதிகளவில் எந்த வாகனமும் செல்லாத பாதைகளில் செல்வது சில நேரங்களில் ஆபத்தை தரக்கூடியது என்றாலும், பல நேரங்களில் இத்தகைய பயணங்கள் புதுமையான அனுபவங்களை வழங்கக்கூடியவைகளாக இருக்கும்.

இப்படிப்பட்ட ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியாவிற்கு வருகிறதா? இதற்கு போட்டி மாடலே கிடையாதே... ஹோண்டா X-ADV

இதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றால்... இந்தியாவில் அட்வென்ச்சர் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. தற்போதைக்கு அட்வென்ச்சர் பைக்குகள் மட்டுமே இந்த பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறதே தவிர்த்து, இன்னும் எந்தவொரு அட்வென்ச்சர் ஸ்கூட்டர் மாடலும் நம் நாட்டு சந்தையில் களமிறக்கப்படவில்லை. ஆனால் இந்த நிலை நீண்ட நாட்களுக்கு இருக்காது.

இப்படிப்பட்ட ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியாவிற்கு வருகிறதா? இதற்கு போட்டி மாடலே கிடையாதே... ஹோண்டா X-ADV

ஏனெனில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் எக்ஸ்-அட்வென்ச்சர் (X-ADV) என்கிற அட்வென்ச்சர் ஸ்கூட்டரின் வர்த்த முத்திரையை இந்தியாவில் பதிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆவண படத்தினை கீழே காணலாம். இந்த படத்தின் மூலம் எக்ஸ்-அட்வென்ச்சரின் பெயர் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இந்தியாவில் ஹோண்டா மோட்டார் நிறுவனம் சார்பில் பதிவிற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

இப்படிப்பட்ட ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியாவிற்கு வருகிறதா? இதற்கு போட்டி மாடலே கிடையாதே... ஹோண்டா X-ADV

தயாரிப்பு நிறுவனத்தின் இந்த மனு கடந்த ஜன.17ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தோற்றத்தையும், ஸ்டைலையும் பொறுத்தவரையில், ஹோண்டா எக்ஸ்-அட்வென்ச்சருக்கு ஓரளவிற்கு இணையான ஸ்கூட்டர் கூட நம் நாட்டு சந்தையில் விற்பனையில் இல்லை. அந்த அளவிற்கு இந்த ஹோண்டா ஸ்கூட்டர் முற்றிலும் வேறுப்பட்டதாகும்.

இப்படிப்பட்ட ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியாவிற்கு வருகிறதா? இதற்கு போட்டி மாடலே கிடையாதே... ஹோண்டா X-ADV

மேக்ஸி-ஸ்கூட்டர்களுடன் ஹோண்டா எக்ஸ்-அட்வென்ச்சரை சிலர் குழப்பி கொள்ளலாம். ஆனால் இரண்டும் முற்றிலும் வேறுப்பட்டவைகளாகும். எக்ஸ்-அட்வென்ச்சர் ஆனது நகர்புற பயன்பாடு மற்றும் ஆஃப்-ரோடு பயன்பாடு என இரு விதமான பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. நீளம் அதிகம் கொண்ட இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் முன்பக்கமும் நன்கு பெரியதாக வடிவமைக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியாவிற்கு வருகிறதா? இதற்கு போட்டி மாடலே கிடையாதே... ஹோண்டா X-ADV

எக்ஸ்-அட்வென்ச்சரின் முன்பக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல்களுடன் இரட்டை எல்இடி ஹெட்லேம்ப்கள், பெரிய எதிர்காற்று தடுப்பு கண்ணாடி, ட்ரெண்டியான எல்இடி டர்ன் சிக்னல்கள், கை விரல் பாதுகாப்பான்கள், செதுக்கப்பட்டது போன்றதான பாடி பேனல்கள், என்ஜின் பாதுகாப்பான், படிக்கட்டு போன்றதான டிசைனில் இருக்கை, மேல் நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் நறுக்கப்பட்ட டிசைனில் பின்பக்க முனை பகுதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியாவிற்கு வருகிறதா? இதற்கு போட்டி மாடலே கிடையாதே... ஹோண்டா X-ADV

இவற்றுடன் தனித்து தெரிவதற்காக கோல்டன் நிறத்தில் முன்பக்க யுஎஸ்டி சஸ்பென்ஷன் ஃபோர்க்குகளை இந்த ஹோண்டா ஸ்கூட்டர் ஏற்கிறது. அதேபோல் இந்த தங்க நிறத்தை ஸ்கூட்டரின் முன்பக்கத்திலும், பின்பக்க டிஸ்க் ப்ரேக் பகுதிகளிலும் பார்க்க முடிகிறது. சர்வதேச சந்தைகளில் கருப்பு மெட்டாலிக், பேர்ல் அடர் மட் க்ரே, கிராண்ட் ப்ரிக்ஸ் சிவப்பு மற்றும் ஹார்வெஸ்ட் பழுப்பு என்கிற நிறத்தேர்வுகளில் எக்ஸ்-அட்வென்ச்சர் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது.

இப்படிப்பட்ட ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியாவிற்கு வருகிறதா? இதற்கு போட்டி மாடலே கிடையாதே... ஹோண்டா X-ADV

மேம்பட்ட பயண அனுபவத்திற்காக, 5-இன்ச்சில் டிஎஃப்டி திரை இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் வழங்கப்படுகிறது. ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டத்தின் வாயிலாக பல்வேறான இணைப்பு வசதிகளை இந்த திரையின் வழியாக பெறலாம். தற்போதைக்கு இந்த திரை ஆண்ட்ராய்டு கருவிகளை மட்டுமே ஏற்கக்கூடியதாக உள்ளது. ஓட்டுனருக்கு தேவையான விபரங்கள் இந்த திரையில் காட்டப்படும்.

இப்படிப்பட்ட ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியாவிற்கு வருகிறதா? இதற்கு போட்டி மாடலே கிடையாதே... ஹோண்டா X-ADV

இருக்கை அடியில் பெரிய அளவில், 21 லிட்டர்கள் கொள்ளளவில் இடவசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் தான் டைப்-சி சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. எக்ஸ்-அட்வென்ச்சர் ஸ்கூட்டரில் 745சிசி, லிக்யுடு-கூல்டு, 8-வால்வு, SOHC இணையான இரட்டை-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 6,750 ஆர்பிஎம்-இல் 58 எச்பி மற்றும் 4,750 ஆர்பிஎம்-இல் 69 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இப்படிப்பட்ட ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியாவிற்கு வருகிறதா? இதற்கு போட்டி மாடலே கிடையாதே... ஹோண்டா X-ADV

இதனுடன் 6-ஸ்பீடு இரட்டை க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் த்ரோட்டல்-பை வயர் கண்ட்ரோல்களுடன் ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட், மழை மற்றும் கிராவல் என மொத்தம் 5 ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. இதனால் ஹோண்டா எக்ஸ்-அட்வென்ச்சரை எந்தவொரு சாலைக்கும் பயமின்றி கொண்டு செல்லலாம். நிச்சயமாக இந்த ஸ்கூட்டரின் விலையினை மலிவானதாக எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் யுகே சந்தையில் இதன் விலை 10,949 யூரோக்களாக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.11.10 லட்சமாகும்.

Most Read Articles
English summary
2022 Honda X-ADV Scooter Trademark Accepted In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X