விரிவாக்கம், புது தயாரிப்புகள் என பட்டைய கிளப்பும் ஹாப்! சீக்கிரமே சூப்பரான எலெக்ட்ரிக் பைக்க களமிறக்க போறாங்க

ஜெய்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் ஹாப் எலெக்ட்ரிக் மொபிலிட்டி (HOP Electric Mobility), நிறுவனம் விரிவாக்கம் மற்றும் புதிய தயாரிப்புகள் என மிக துடிப்புடன் செயல்பட தொடங்கியிருக்கின்றது. நிறுவனம் மிக விரைவில் இரு எலெக்ட்ரிக் டூ-வீலர்களை நாட்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விரிவாக்கம், புதிய தயாரிப்புகள் என பட்டைய கிளப்பும் ஹாப்... சீக்கிரமே ஒரு சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்க போறாங்க!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஹாப் எலெக்ட்ரிக் மொபிலிட்டி (HOP Electric Mobility), இந்நிறுவனம் தற்போது நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே அதன் விற்பனையகங்களை செயல்படுத்தி வருகின்றது. ஆகையால், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே நிறுவனத்தின் மின் வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உள்ளது. அதே நேரத்தில் நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துக் காணப்படுகின்றது.

விரிவாக்கம், புதிய தயாரிப்புகள் என பட்டைய கிளப்பும் ஹாப்... சீக்கிரமே ஒரு சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்க போறாங்க!

ஆகையால், நிறுவனம் அதன் விற்பனையகங்களை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கின்றது. தற்போது இந்தியாவின் 12 மாநிலங்களில் உள்ள 54 நகரங்களில் மட்டுமே தனது விற்பனை வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றது. இவற்றுடன் அண்மையில் புதிதாக 10 எக்ஸ்பீரியன்ஸ் மையங்களை நிறுவனம் சேர்த்தது.

விரிவாக்கம், புதிய தயாரிப்புகள் என பட்டைய கிளப்பும் ஹாப்... சீக்கிரமே ஒரு சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்க போறாங்க!

இவைகளையே இன்னும் பல மடங்குகளுக்கு விரிவாக்கம் செய்ய ஹாப் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதற்கான முயற்சியில் நிறுவம் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது. இதனடிப்படையில், 300 புதிய நகரங்களில் விற்பனையகங்கள் தொடங்கப்பட இருக்கின்றன. இதன் வாயிலாக நிறுவனம் மிக விரைவில் இன்னும் பல புதிய நகரங்களில் கால் தடம் பதிக்கும் என தெரிகின்றது. இந்த இலக்கை நடப்பு 2022ம் ஆண்டிற்குள்ளாகவே செயல்படுத்த இருக்கின்றது, ஹாப்.

விரிவாக்கம், புதிய தயாரிப்புகள் என பட்டைய கிளப்பும் ஹாப்... சீக்கிரமே ஒரு சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்க போறாங்க!

மேலும், இதனை ஓர் இலக்காக கொண்டு நிறுவனம் செயல்படவும் தொடங்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக விரைவில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒன்றையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இப்புதிய எலெக்ட்ரிக் பைக்கின் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் டீசர் படங்களை வெளியிட்டிருக்கின்றது.

விரிவாக்கம், புதிய தயாரிப்புகள் என பட்டைய கிளப்பும் ஹாப்... சீக்கிரமே ஒரு சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்க போறாங்க!

அந்த படத்தில் புதிய எலெக்ட்ரிக் டூ-வீலரின் முகப்பு பகுதி இடம் பெற்றிருக்கின்றது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக்கின் முகப்பு பகுதியை பிரதிபலிக்கும் ஸ்டைலில் அது காட்சியளிக்கின்றது. இந்த மின்சார பைக் ஹாப் ஆக்ஸோ (HOP OXO) எனும் பெயரில் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதனை அறிமுகப்படுத்த தயாராக இருப்பதை வெளிக்காட்டும் வகையிலேயே நிறுவனம் புதிய டீசர் படத்தை வெளியிட்டிருக்கின்றது.

விரிவாக்கம், புதிய தயாரிப்புகள் என பட்டைய கிளப்பும் ஹாப்... சீக்கிரமே ஒரு சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்க போறாங்க!

எலெக்ட்ரிக் பைக்கின் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவுற்றிருப்பதாகவும், மிக விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக்குடன் ஓர் புத்தம் புதிய அதி-வேக மின்சார ஸ்கூட்டரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

விரிவாக்கம், புதிய தயாரிப்புகள் என பட்டைய கிளப்பும் ஹாப்... சீக்கிரமே ஒரு சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்க போறாங்க!

பெயரிடப்படாத இந்த இ-ஸ்கூட்டர் நிஜ வாழ்க்கையில் 150 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜ் தரும் திறனுடன் பயன்பாட்டிற்கு வரும் என நிறுவனம் உறுதியளித்திருக்கின்றது. ஆனால், இதைவிட குறைவான ரேஞ்ஜ் திறன் கொண்டதாகவே ஹாப் ஆக்ஸோ விற்பனைக்கு வர இருக்கின்றது. முழுமையான சார்ஜில் 120 கிமீ தூரம் வரை மட்டுமே செல்லக் கூடிய திறனே இப்பைக் பெற்றிருக்கின்றது.

விரிவாக்கம், புதிய தயாரிப்புகள் என பட்டைய கிளப்பும் ஹாப்... சீக்கிரமே ஒரு சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்க போறாங்க!

ஹாப் நிறுவனம் ஏற்கனவே இரு எலெக்டர்க் வாகனங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ஹாப் லியோ (HOP LEO) மற்றும் ஹாப் லைஃப் (HOP LYF) எனும் பெயரில் அவை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. இரண்டும் உயர் செயல்திறன் கொண்ட லித்தியம் அயன்-பேட்டரி, நிலையான மற்றும் அதிக ரேஞ்ஜ் வரம்புகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன.

விரிவாக்கம், புதிய தயாரிப்புகள் என பட்டைய கிளப்பும் ஹாப்... சீக்கிரமே ஒரு சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்க போறாங்க!

இதுமட்டுமின்றி தானியங்கி பார்க்கிங் உதவி, பக்கவாட்டில் சென்சார் கொண்ட ரிவர்ஸ் கியர், யுஎஸ்பி சார்ஜிங், ரிமோட் கீ, திருட்டை தவிர்க்க உதவும் அலாரம், ஆண்டி தெஃப்ட் வீல் லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் இந்த வாகனங்களில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், இணையம் மற்றும் ஜிபிஎஸ் இணைப்பு உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன.

விரிவாக்கம், புதிய தயாரிப்புகள் என பட்டைய கிளப்பும் ஹாப்... சீக்கிரமே ஒரு சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்க போறாங்க!

இதுமாதிரியான சிறப்பு வசதிகளுடனேயே மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இ-பைக் மற்றும் மின்சார ஸ்கூட்டர்களும் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹாப் நிறுவனம், மிக விரைவில் பேட்டரி சார்ஜிங் மற்றும் ஸ்வாப்பபிள் நெட்வொர்க் (Swapping network)-குகளை நாடு முழுவதும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் திட்டமிட்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Hop electric mobility unveils oxo electric motorcycle teaser
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X