இந்தியாவில் கால் தடம் பதித்தது கீவே நிறுவனம்.. முதல் பைக்கே ராயல் என்பீல்டுக்கு ஆப்பு வைப்பதைபோல் வந்திருக்கு!

கீவே (Keeway) நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதிக்கும் விதமாக அதன் கே-லைட் 250 வி (K-Light 250V) மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் கால் தடம் பதித்தது புதுமுக நிறுவனம்... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டுக்கு ஆப்பு வைப்பதைபோல் வந்திருக்கு!

ஹங்கேரியன் நாட்டைச் சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று இந்தியாவில் கால் தடம் பதித்துள்ளது. கிவே (Keeway) எனும் பெயர் கொண்ட அந்நிறுவனமே இந்தியாவில் முதல் முறையாக நுழைந்துள்ளது. இதன் வருகையைத் தொடர்ந்து கே-லைட் 250 வி (K-Lite 250V) எனும் மோட்டார்சைக்கிளை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கால் தடம் பதித்தது புதுமுக நிறுவனம்... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டுக்கு ஆப்பு வைப்பதைபோல் வந்திருக்கு!

இது ஓர் ஆரம்ப நிலை வி-ட்வின் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பைக்கிற்கான விலை அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில் தற்போது பைக்கிற்கான புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ. 10 ஆயிரம் முன் தொகையில் புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்தியாவில் கால் தடம் பதித்தது புதுமுக நிறுவனம்... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டுக்கு ஆப்பு வைப்பதைபோல் வந்திருக்கு!

இந்த பணிகள் பெனெல்லி விற்பனையாளர்கள் வாயிலாக நடைபெற தொடங்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி விரைவில் இப்பைக்கை டெஸ்ட் டிரைவ் வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்பணிகள் வரும் மே 26 இல் தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், புக்கிங் பணிகள் ஜூன் மாதத்தில் இருந்தே தொடங்கப்பட உள்ளன.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

இந்தியாவில் கால் தடம் பதித்தது புதுமுக நிறுவனம்... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டுக்கு ஆப்பு வைப்பதைபோல் வந்திருக்கு!

அதாவது, இப்போது பைக்கை புக் செய்பவர் ஜூன் மாதத்தில் அதன் டெலிவரியை எதிர்பார்க்கலாம். கே-லைட் 250 வி மோட்டார்சைக்கிள் படு கவர்ச்சியான தோற்றம் கொண்ட க்ரூஸராக காட்சியளிக்கின்றது. வெளிநாடுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் கே-லைட் 250வி-யைக் காட்டிலும் இந்தியாவிற்கான கே-லைட் 250வி சற்று கவர்ச்சியானதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் கால் தடம் பதித்தது புதுமுக நிறுவனம்... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டுக்கு ஆப்பு வைப்பதைபோல் வந்திருக்கு!

குறிப்பாக, பெரிய டேங்க்குடன் பைக் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இத்துடன், டயர்கள் மற்றும் ஃபோர்க்குகளும் சற்றே குண்டானதாக காட்சியளிக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்து கே-லைட் 250 வி பைக்கை பிரபல ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் பைக்கைப் போல் காட்சியளிக்க செய்திருக்கின்றன.

இந்தியாவில் கால் தடம் பதித்தது புதுமுக நிறுவனம்... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டுக்கு ஆப்பு வைப்பதைபோல் வந்திருக்கு!

பைக்கில் வழங்கப்பட்டிருக்கும் ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை, எக்சாஸ்ட் உள்ளிட்டவை ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாயைப் போல் பிரதிபலிக்கச் செய்திருக்கின்றது. பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்தும் எல்இடி மின் விளக்குகள் ஆகும். இதுதவிர, செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற நவீன கால சிறப்பம்சங்களும் டூ-வீலரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கால் தடம் பதித்தது புதுமுக நிறுவனம்... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டுக்கு ஆப்பு வைப்பதைபோல் வந்திருக்கு!

இந்த கருவியானது பைக்கின் கியர் எந்த நிலையில் இருக்கின்றது என்பதைக்கூட காட்டிக் கொடுக்கும். மிகவும் தாழ்வான இருக்கை அமைப்பு மோட்டார்சைக்கிளுக்கு கூடுதல் கவர்ச்சியைச் சேர்த்துள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மிமீ ஆகும். மேலும், பைக்கின் தோற்றம் மிக சிறியதாகத் தென்படுகின்றது.

இந்தியாவில் கால் தடம் பதித்தது புதுமுக நிறுவனம்... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டுக்கு ஆப்பு வைப்பதைபோல் வந்திருக்கு!

இருப்பினும் அதை 179கிலோவாக இருக்கின்றது. இது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் மாடலைக் காட்டிலும் 13 கிலோ மட்டுமே குறைவான எடை ஆகும். இப்பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் ஃப்யூவர் டேங்கின் கொள்ளளவு 20 லிட்டர்கள் ஆகும். நீண்ட தூர பயணங்களுக்கு இந்த கெபாசிட்டி போதுமானதாக உள்ளது.

இந்தியாவில் கால் தடம் பதித்தது புதுமுக நிறுவனம்... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டுக்கு ஆப்பு வைப்பதைபோல் வந்திருக்கு!

கீவே நிறுவனம் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான நிற தேர்வுகளில் இப்பைக்கை வழங்க இருக்கின்றது. மேட் நீல நிறம், மேட் கருப்பு மற்றும் மேட் கிரே ஆகிய நிற தேர்வுகளிலேயே அது கிடைக்க உள்ளது. இத்துடன், இரு முனைகளிலும் அலாய் வீல்கள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கால் தடம் பதித்தது புதுமுக நிறுவனம்... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டுக்கு ஆப்பு வைப்பதைபோல் வந்திருக்கு!

இதுதவிர, ட்யூவல் சேனர் ஏபிஎஸ் பிரேக்கிங் அம்சமும் மிக சிறப்பான பிரேக்கிங் அனுபவத்திற்காக வழங்கப்பட்டுள்ளன. பைக்கில் 249 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் 4 வால்வ் வி-ட்வின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 18.7 எச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 19 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

இந்தியாவில் கால் தடம் பதித்தது புதுமுக நிறுவனம்... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டுக்கு ஆப்பு வைப்பதைபோல் வந்திருக்கு!

கூடுதல் சிறப்பு விஷயமாக இந்த பைக்கின் மோட்டாரில் ராயல் என்பீல்டு பைக்குகளில் வழங்கப்படுவதைப் போல 49 மிமீ போர் மற்றும் 66 மிமீ ஸ்ட்ரோக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இது மிக சிறந்த எஞ்ஜின் திறன் வெளியேற்றத்திற்கு உதவியாக இருக்கும். இத்துடன் மிக ஸ்மூத்தான இயக்கத்திற்கு ஸ்கூட்டர்களில் வழங்கப்படுவதைப் போல பெல்ட் டிரைவ் அம்சம் இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கால் தடம் பதித்தது புதுமுக நிறுவனம்... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டுக்கு ஆப்பு வைப்பதைபோல் வந்திருக்கு!

இதுமாதிரியான அம்சத்தை ஹார்லி டேவிட்சன் நிறுவன தயாரிப்புகளிலேயே அதிகளவில் நம்மால் பார்க்க முடியும். இதுமட்டுமின்றி ஹார்லி டேவிட்சன் தயாரிப்புகளில் காணப்படுவதைப் போல ட்வின் அப்ஸ்வெப்ட் ரக எக்சாஸ்ட் டூ-வீலரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பைக்கின் எஞ்ஜின் டபுள் கிரேடில் ஃப்ரேமில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இத்துடன், முழு குவார்டும் எஞ்ஜினுக்கு பக்கபலமாக பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கால் தடம் பதித்தது புதுமுக நிறுவனம்... முதல் தயாரிப்பே ராயல் என்பீல்டுக்கு ஆப்பு வைப்பதைபோல் வந்திருக்கு!

இத்தகைய சூப்பரான அம்சங்கள் கொண்ட மோட்டார்சைக்கிளையே கீவே நிறுவனம் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வருகை ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மற்றும் இன்டர்செப்டர் 650 ஆகிய பைக்குகளுக்கு போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கீவே நிறுவனம் க்ரூஸர் ரக பைக்குடன் சேர்த்து இரு ஸ்கூட்டர்களையும் நாட்டில் வெளியீடு செய்திருக்கின்றது. விஸ்டே 300 (Vieste 300) மற்றும் சிக்ஸ்டீல் 300ஐ (Sixties 300i) ஆகிய இரு அட்டகாசமான ஸ்கூட்டர்களையும் அது அறிமுகம் செய்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Hungarian brand keeway launches k lite 250v motorcycle in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X