கால்தடம் பதிச்சாச்சு... இனி ஆட்டம் வெறி தனமா இருக்க போகுது! ரெண்டு தரமான கீவே ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

கீவே (Keeway) நிறுவனம் அதன் இரு தரமான ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கால்தடம் பதிச்சாச்சு... இனி ஆட்டம் வெறி தனமா இருக்க போகுது! ரெண்டு தரமான கீவே ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

இந்திய இருசக்கர வாகன உலகை அதகளப்படுத்தும் வகையில் பிரபல கீவே (Keeway) நிறுவனம் இந்தியாவில் அதன் கால் தடத்தைப் பதித்துள்ளது. இதன் வருகையைத் தொடர்ந்து அதிரடியாக மூன்று இருசக்கர வாகனங்களை நாட்டில் வெளியீடு செய்திருக்கின்றது. ஓர் பைக்கையும், இரு ஸ்கூட்டர்களையும் அது வெளியீடு செய்திருக்கின்றது. நிறுவனத்தின் புகழ்மிக்க பைக்கான கே-லைட் 250வி க்ரூஸர், ரெட்ரோ தோற்றத்திலான சிக்ஸ்டீல் 300ஐ (Keeway Sixties 300i) மற்றும் விஸ்டே 300 (Keeway Vieste 300) மேக்ஸி ரக ஸ்கூட்டர் ஆகியவற்றையே நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

கால்தடம் பதிச்சாச்சு... இனி ஆட்டம் வெறி தனமா இருக்க போகுது! ரெண்டு தரமான கீவே ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

ஏற்கனவே நம்முடைய டிரைவ்ஸ்பார்க் தமிழில் கே-லைட் 250வி க்ரூஸர் பைக் பற்றிய தகவல்களை வழங்கிவிட்டோம். இதற்கு அடுத்தபடியாக வெளியீட்டைப் பெற்றிருக்கும் சிக்ஸ்டீல் 300ஐ மற்றும் விஸ்டே 300 ஆகிய இரு ஸ்கூட்டர்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். விரிவான பதிவிற்குள் போகலாம் வாங்க.

கால்தடம் பதிச்சாச்சு... இனி ஆட்டம் வெறி தனமா இருக்க போகுது! ரெண்டு தரமான கீவே ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

நிறுவனம் முதலில் கே-லைட் 250 வி க்ரூஸர் பைக்கையே இந்தியாவில் வெளியீடு செய்ய இருப்பதாக ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்கள் வெளியாகிய சில நாட்களிலேயே கீவே நிறுவனம் மேக்ஸிரக ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் என்கிற கூடுதல் தகவலும் வெளியாகின.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

கால்தடம் பதிச்சாச்சு... இனி ஆட்டம் வெறி தனமா இருக்க போகுது! ரெண்டு தரமான கீவே ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

ஆகையால், நிறுவனத்தின் கீழ் இரு அட்டகாசமான டூ-வீலர்கள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், நிறுவனமோ இருசக்கர வாகன பிரியர்களுக்கு கூடுதல் ட்ரீட்டை வழங்கும் விதமாக ஓர் ரெட்ரோ ஸ்கூட்டரையும் நாட்டில் வெளியீடு செய்திருக்கின்றது. இவ்விரு ஸ்கூட்டர்களும் கண்கவர் தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

கால்தடம் பதிச்சாச்சு... இனி ஆட்டம் வெறி தனமா இருக்க போகுது! ரெண்டு தரமான கீவே ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

உருவத்தில் மாறுபட்டு காட்சிளிக்கும் இந்த ஸ்கூட்டர்கள் எஞ்ஜின் விஷயத்தில் ஒரே மாதிரியானதாக உள்ளன. அதாவது, ஸ்கூட்டரில் 278.8 சிசி திறனை வெளியேற்றக் கூடிய சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 18.7 எச்பி பவரை 6,500 ஆர்பிஎம்மிலும், 22 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும்.இது தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பிற ஸ்கூட்டர்களைக் காட்டிலும் மிக சிறப்பான திறன் ஆகும்.

கால்தடம் பதிச்சாச்சு... இனி ஆட்டம் வெறி தனமா இருக்க போகுது! ரெண்டு தரமான கீவே ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

சிக்ஸ்டீஸ் 300ஐ:

சிக்ஸ்டீஸ் 300ஐ ஓர் ரெட்ரோ கிளாசிக் ரக ஸ்கூட்டர் மாடலாகும். இந்த ஸ்கூட்டரில் 12 அங்குல ட்யூப்லெஸ் டயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து விதமான சாலை இயக்கத்திலும் சிறந்து விளங்கும். ஸ்கூட்டர் மேட் லைட் ப்ளூ, மேட் ஒயிட் மற்றும் மேட் கிரே ஆகிய நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

கால்தடம் பதிச்சாச்சு... இனி ஆட்டம் வெறி தனமா இருக்க போகுது! ரெண்டு தரமான கீவே ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

இதன் ஸ்டைல் 1960ம் ஆண்டுகளில் விற்பனையில் இருந்த ஸ்கூட்டர்களைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. எனவேதான் இதற்கு சிக்ஸ்டீஸ் 300ஐ என பெயர்வைக்கப்பட்டுள்ளது. பெயருக்கேற்ற அம்சங்களே ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேவேலையில், முன்பக்கத்தில் கிரில் போன்ற சில தனித்துவமான அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

கால்தடம் பதிச்சாச்சு... இனி ஆட்டம் வெறி தனமா இருக்க போகுது! ரெண்டு தரமான கீவே ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

இத்துடன், ஹெக்ஸோகோனல் ஹெட்லைட், ஸ்பிளிட் ரக இருக்கைகள், டிஸ்க் பிரேக், ட்யூவல் ஏபிஎஸ், பன்முக கன்ட்ரோல்கள் உள்ளிட்ட சிறப்பு வசதிகளையும் ஸ்கூட்டர் தாங்கியிருக்கின்றது. வழக்கமாக ஸ்கூட்டர்களில் 6க்கும் குறைவான லிட்டர்களை சேமிக்கும் வகையில் ஃப்யூவல் வழங்கப்படும். ஆனால், இந்த ஸ்கூட்டரில் 10 லிட்டர் கெபாசிட்டிக் கொண்ட எரிபொருள் தொட்டி வழங்கப்பட்டுள்ளது.

கால்தடம் பதிச்சாச்சு... இனி ஆட்டம் வெறி தனமா இருக்க போகுது! ரெண்டு தரமான கீவே ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

விஸ்டே 300 மேக்ஸி ஸ்கூட்டர்:

இந்த மேக்ஸி ஸ்கூட்டரில் நான்கு எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லைட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், கருப்பு நிற விண்ட்ஸ்கிரீன், அனலாக் மற்றும் டிஜிட்டல் வசதிகள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எல்இடி டெயில் லைட் மற்றும் சாவியில்லாமல் ஸ்கூட்டரை பயன்படுத்தும் வசதி உள்ளிட்ட அம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

கால்தடம் பதிச்சாச்சு... இனி ஆட்டம் வெறி தனமா இருக்க போகுது! ரெண்டு தரமான கீவே ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

இந்த ஸ்கூட்டரை ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வண்ண தேர்வில் பெற்றுக் கொள்ள முடியும். மேட் பிளாக், மேட் நீலம் மற்றும் மேட் ஒயிட் ஆகிய நிற தேர்வுகளிலேயே விஸ்டா 300 மேக்ஸி ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். இது யமஹா ஏரோக்ஸ் 155 மற்றும் பிஎம்டபிள்யூ சி400 ஜிடி ஆகிய மேக்ஸி ஸ்கூட்டர்களுக்கு போட்டியளிக்கும் வகையில் விரைவில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

கால்தடம் பதிச்சாச்சு... இனி ஆட்டம் வெறி தனமா இருக்க போகுது! ரெண்டு தரமான கீவே ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

தற்போது இவற்றின் வெளியீட்டு நிகழ்வு மட்டுமே அரங்கேறியிருக்கின்றது. விரைவில் இதன் விலைகள் அறிவிக்கப்பட உள்ளன. மே 26ம் தேதி இருசக்கர வாகனங்களை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை வழங்க இருக்கின்றது. இந்த மாதம் அல்லது ஜூன் மாதத்திற்குள் இதன் டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றது. இப்போது ரூ. 10 ஆயிரம் முன்தொகையில் அனைத்து இருசக்கர வாகனங்களுக்கான முன் பதிவு பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
Hungarian two wheeler firm keeway unveiled sixties 300i vieste 300 maxi scooter
Story first published: Wednesday, May 18, 2022, 14:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X