ஒருமுறை சார்ஜ் செய்தால் 110கிமீ-க்கு செல்லும்!! சைபோர்க்கின் பாப்-இ எலக்ட்ரிக் பைக் - வெளியீடு!

பாப்-இ என்கிற பெயரிலான சைபோர்க் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 110கிமீ ரேஞ்சில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய எலக்ட்ரிக் பைக்கை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 110கிமீ-க்கு செல்லும்!! சைபோர்க்கின் பாப்-இ எலக்ட்ரிக் பைக் - வெளியீடு!

இந்தியாவை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான இக்னிட்ரான் மோட்டோகார்ப் அதன் சைபோர்க் பிராண்டின் கீழ் இரண்டாவது எலக்ட்ரிக் மோட்டார்ச்சைக்கிளை வெளியீடு செய்துள்ளது. பாப்-இ என்கிற பெயரில் அளவில் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இ-பைக் குறிப்பாக இளம் தலைமுறையினரை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 110கிமீ-க்கு செல்லும்!! சைபோர்க்கின் பாப்-இ எலக்ட்ரிக் பைக் - வெளியீடு!

அதேநேரம் பாதுகாப்பையும், மாசு இல்லா சுற்றுச்சூழலை வேண்டுவோர்க்கும் சைபோர்க் பாப்-இ ஏற்றதாக இருக்கும். இக்னிட்ரான் மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் தான் அதன் முதல் எலக்ட்ரிக் பைக்காக சைபோர்க் யோதா க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளை சந்தையில் அறிமுகம் செய்திருந்தது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 110கிமீ-க்கு செல்லும்!! சைபோர்க்கின் பாப்-இ எலக்ட்ரிக் பைக் - வெளியீடு!

புதிய சைபோர்க் பாப்-இ எலக்ட்ரிக் பைக்கானது சகதி மோட்டார்பைக்குகளின் ஸ்டைலில் இருந்து கொண்டுவரப்பட்டிருப்பது இதன் படங்களை பார்க்கும்போது தெரிய வருகிறது. ஏற்கனவே கூறியதுபோல் அளவில் சிறியதாக காட்சியளிக்கும் பாப்-இ பைக்கில் தாழ்வான ஹேண்டில்பார், நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப் & டிஆர்எல், அளவில் பெரிய முன்பக்க ஃபெண்டர், ட்ரெண்டியான எல்இடி டர்ன் சிக்னல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 110கிமீ-க்கு செல்லும்!! சைபோர்க்கின் பாப்-இ எலக்ட்ரிக் பைக் - வெளியீடு!

இருக்கை அமைப்பு ஒற்றை துண்டாக வழங்கப்பட்டிருக்க, பைக்கின் பின்பக்க முனைப்பகுதி சற்று மேல்நோக்கி உயர்த்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் செதுக்கப்பட்டது போன்றதான டிசைனில் வழங்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பேனல்கள் தான் உண்மையில் பைக்கின் ஒட்டுமொத்த அழகையும் கூட்டுகிறது என்று சொல்ல வேண்டும்.

சிவப்பு மற்றும் கருப்பு என்கிற இரு விதமான பெயிண்ட் தேர்வுகளில் இந்த இ-பைக் விற்பனை செய்யப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் சிவப்பு நிறத்தேர்வில் பெரும்பான்மையான பேனல்கள் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டிருக்க, சக்கரம், இருக்கை என பைக்கின் சில பாகங்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 110கிமீ-க்கு செல்லும்!! சைபோர்க்கின் பாப்-இ எலக்ட்ரிக் பைக் - வெளியீடு!

மறுப்பக்கம் கருப்பு நிற பெயிண்ட் தேர்வில் பைக் முழுவதுமாக கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது என்றாலும், முன்பக்க சஸ்பென்ஷன், பின்பக்கத்தில் பின் இருக்கை பயணி பிடித்து கொள்வதற்கான க்ராப் ரெயில் உள்பட சில பாகங்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், சைபோர்க் பாப்-இ பைக்கில் ஐபி65 சான்றளிக்கப்பட்ட எல்இடி திரை வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர்த்த மற்ற அதிநவீன அம்சங்கள் என்று பார்த்தோமேயானால், புவி இருப்பிடம் (ஜியோ லொகேட்), புவி வேலி (ஜியோ ஃபென்சிங்), யுஎஸ்பி சார்ஜிங், ப்ளூடூத் இணைப்பு மற்றும் சாவியில்லா ஸ்டார்ட் உள்ளிட்டவற்றை சொல்லலாம். இவை மட்டுமின்றி ரிவர்ஸில் செல்வதற்கான மோட் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றையும் பாப்-இ பெற்றுள்ளது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 110கிமீ-க்கு செல்லும்!! சைபோர்க்கின் பாப்-இ எலக்ட்ரிக் பைக் - வெளியீடு!

இவற்றுடன் மிக முக்கிய அம்சமாக ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங்கை இந்த எலக்ட்ரிக் பைக் கொண்டுள்ளது. இது பைக்கின் ஒட்டுமொத்த ரேஞ்சை அதிகப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் ஆனது இயக்கம் சார்ந்த ஆற்றலை மின்னாற்றாலாக மாற்ற உதவுகிறது. இந்த மின்னாற்றால் பின்னர் பேட்டரியை சார்ஜ் ஏற்றிக்கொள்ள பயன்படுத்தப்படும்.

பாப்-இ எலக்ட்ரிக் மோட்டார்பைக்கில் 2.88kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு மற்றும் இதன் மூலம் இயங்கும் BLDC ஹப் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. சைபோர்க் யோதாவின் 3.24kWh பேட்டரி தொகுப்பு உடன் ஒப்பிடுகையில் இதன் பேட்டரி சற்று ஆற்றல் குறைவே ஆகும். அதிகப்பட்சமாக மணிக்கு 85kmph வேகத்தில் செல்லக்கூடிய பாப்-இ எலக்ட்ரிக் பைக்கின் ரேஞ்ச் 110கிமீ ஆகும்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 110கிமீ-க்கு செல்லும்!! சைபோர்க்கின் பாப்-இ எலக்ட்ரிக் பைக் - வெளியீடு!

அதாவது இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 110 கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். அதுவே யோதா எலக்ட்ரிக் க்ரூஸர் பைக்கின் டாப் ஸ்பீடு 90kmph மற்றும் ரேஞ்ச் 150கிமீ ஆகும். அதிகப்பட்சமாக 8.5 கிலோவாட்ஸ் இயக்க ஆற்றலை பெறக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள பாப்-இ எலக்ட்ரிக் பைக்கில் ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என்கிற 3 ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

சைபோர்க் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் பேட்டரிகள் பைக்கில் இருந்து நீக்கக்கூடியவைகளாக கொடுக்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரியை 0-வில் இருந்து 80% சார்ஜ் நிரப்ப கிட்டத்தட்ட 3 மணிநேரங்கள் தேவைப்படும். அதுவே முழுவதும் 100% சார்ஜ் நிரப்ப 4-5 மணிநேரங்கள் தேவை. இதற்காக 15 ஆம்பியர் வீட்டு உபயோக விரைவு சார்ஜர் வழங்கப்படுகிறது.

Most Read Articles

English summary
CYBORG unveils its second electric motorbike Bob-e in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X