கவாஸாகியில் இப்படியொரு பைக்கை எதிர்பார்க்கவே இல்ல!! எடை ரொம்ப குறைவு... விலை எவ்வளவு இருக்கும்?

இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள கவாஸாகி டபிள்யூ175 மோட்டார்சைக்கிள் பற்றிய முக்கிய விபரங்கள் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கவாஸாகியில் இப்படியொரு பைக்கை எதிர்பார்க்கவே இல்ல!! எடை ரொம்ப குறைவு... விலை எவ்வளவு இருக்கும்?

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கவாஸாகி நிறுவனம் பற்றிய ஏகப்பட்ட செய்திகள் சமீப காலமாக அதிகளவில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதில் பெரும்பான்மையானவை எதிர்காலத்தில் வெளிவரவுள்ள கவாஸாகியின் எலக்ட்ரிக் & ஹைப்ரிட் பைக்குகளை பற்றியதாக உள்ளன.

கவாஸாகியில் இப்படியொரு பைக்கை எதிர்பார்க்கவே இல்ல!! எடை ரொம்ப குறைவு... விலை எவ்வளவு இருக்கும்?

ஏனெனில் 2035க்குள் தனது பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் அனைத்து மோட்டார்சைக்கிள்களையும், முற்றிலும் எலக்ட்ரிக்கில் இயங்கக்கூடியதாகவோ அல்லது ஹைப்ரிட் மாடல்களாகவோ கொண்டுவரும் திட்டத்தில் கவாஸாகி உள்ளது. இதன்படி, இந்த ஜப்பானிய பைக் நிறுவனம் தனது பிரபலமான இசட்250 மற்றும் நிஞ்சா 250 மோட்டார்சைக்கிள்கள் எலக்ட்ரிக்கில் கொண்டுவரப்பட்டால் எவ்வாறு இருக்கும் என்பதை சமீபத்தில் வெளிக்காட்டி இருந்தது.

கவாஸாகியில் இப்படியொரு பைக்கை எதிர்பார்க்கவே இல்ல!! எடை ரொம்ப குறைவு... விலை எவ்வளவு இருக்கும்?

இந்த நிலையில் இந்தியாவில் மீண்டும் கிளாசிக் தோற்றத்திலான மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் வேலையில் இறங்க கவாஸாகி திட்டமிட்டு வருகிறது. இந்த வரிசையில் முதல் மோட்டார்சைக்கிளாக டபிள்யூ175 மாடல் வருகிற செப்டம்பர் 25ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் தான் தற்போது இந்த விலை குறைவான கவாஸாகி பைக்கை பற்றிய விபரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.

கவாஸாகியில் இப்படியொரு பைக்கை எதிர்பார்க்கவே இல்ல!! எடை ரொம்ப குறைவு... விலை எவ்வளவு இருக்கும்?

இந்தோனிஷியா நாட்டில் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டு இருந்த டபிள்யூ175 மோட்டார்சைக்கிள் அந்த நாட்டில் டிஆர், டிஆர்எஸ்இ மற்றும் கேஃப் ரேஸர் என மொத்தம் 3 விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இந்த வெர்சன்களில் டபிள்யூ175 பைக்கின் தோற்றம் ஒவ்வொரு விதமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த 3 வெர்சன்களில் ஒன்றில் மட்டுமே இந்த கவாஸாகி பைக் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவாஸாகியில் இப்படியொரு பைக்கை எதிர்பார்க்கவே இல்ல!! எடை ரொம்ப குறைவு... விலை எவ்வளவு இருக்கும்?

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, எபோனி மற்றும் எடிசன் சிவப்பு என்கிற 2 விதமான நிறத்தேர்வுகளில் கவாஸாகி டபிள்யூ175 பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. தோற்ற அம்சங்களை பொறுத்தவரையில், முன்பக்கத்தில் ஹலோஜன் ஹெட்லைட், ஹலோஜன் டர்ன் இண்டிகேட்டர்கள், டெயில்லைட், அனலாக் ஸ்பீடோமீட்டர், அனலாக் ஓடோமீட்டர் மற்றும் அனலாக் ட்ரிப் மீட்டர் உள்ளிட்டவற்றை இந்த புதிய கவாஸாகி பைக் பெற்றுவரவுள்ளது.

கவாஸாகியில் இப்படியொரு பைக்கை எதிர்பார்க்கவே இல்ல!! எடை ரொம்ப குறைவு... விலை எவ்வளவு இருக்கும்?

பழமையான பைக்குகளுக்கே உண்டான தோற்றத்தில் பாடி பேனல்கள் டபிள்யூ175 மாடலில் குறைவாகவே வழங்கப்படும். இதைவிட முக்கிய அம்சமாக, ஸ்போக்டு சக்கரங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட உள்ளன. என்ஜின் பகுதிக்கு வந்தோமேயானால், டபிள்யூ175 பைக்குகளில் 177சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை கவாஸாகி நிறுவனம் வழங்குகிறது. ஏர்-கூல்டு என்ஜினான இது அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 13 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 13.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

கவாஸாகியில் இப்படியொரு பைக்கை எதிர்பார்க்கவே இல்ல!! எடை ரொம்ப குறைவு... விலை எவ்வளவு இருக்கும்?

இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அதிகப்பட்சமாகவே 13 பிஎச்பி என்பது தற்கால மாடர்ன் பைக்குகளுடன் ஒப்பிடுகையில் குறைவுதான். ஆனால் குறைவான விலையில் வழங்குவதற்காக இவ்வாறு குறைவான சிசி என்ஜின் கொண்ட மோட்டார்சைக்கிளை கவாஸாகி நிறுவனம் களமிறங்குகிறது. அதுவும் இல்லாமல், இந்த குறைவான இயக்க ஆற்றல் என்கிற குறையை பைக்கின் எடை மூலமாக கவாஸாகி சரிக்கட்டிவிடும்.

கவாஸாகியில் இப்படியொரு பைக்கை எதிர்பார்க்கவே இல்ல!! எடை ரொம்ப குறைவு... விலை எவ்வளவு இருக்கும்?

படங்களில் பைக்கின் தோற்றத்தை பார்க்கும்போது தெரிந்திருக்கும், பாடி பேனல்கள் அவ்வளவாக இல்லாததால் பைக்கின் எடை குறைவாக தான் இருக்கும் என்று. எந்த அளவிற்கு என்றால், டபிள்யூ175 பைக்கின் எடை வெறும் 135 கிலோ மட்டுமே ஆகும். பேனல்கள் அவ்வளவாக இல்லை என்றாலும், 175சிசி பைக்குகளை பொறுத்தவரையில், 135 கிலோ என்பது குறைவே.

கவாஸாகியில் இப்படியொரு பைக்கை எதிர்பார்க்கவே இல்ல!! எடை ரொம்ப குறைவு... விலை எவ்வளவு இருக்கும்?

இந்த 175சிசி கவாஸாகி பைக்கிற்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற யமஹா எஃப்.இசட் எக்ஸ் பைக்கின் எடை இதனை காட்டிலும் 4 கிலோ அதிகமாகும். இத்தனைக்கும் இந்த யமஹா எஃப்.இசட் மாடல் 150சிசி மட்டுமே. கவாஸாகி டபிள்யூ175 பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 110மிமீ டிராவல் உடன் வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்படுகின்றன.

கவாஸாகியில் இப்படியொரு பைக்கை எதிர்பார்க்கவே இல்ல!! எடை ரொம்ப குறைவு... விலை எவ்வளவு இருக்கும்?

பிரேக்கிங் பணியை இந்த பைக்கில் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் ட்ரம் பிரேக்கும் கவனித்து கொள்கின்றன. இரட்டை-தொட்டில் சேசிஸின் அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்ற டபிள்யூ175 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். இதனாலேயே புதிய டபிள்யூ175 பைக்கின் விலையினை மிகவும் சவாலானதாக எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
India made kawasaki w175 bike brochure leaks
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X