இந்தியாவின் முதல் க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக்... கோமகி ரேஞ்ஜர் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை தெரியுமா?

நாட்டின் முதல் க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக் கோமகி ரேஞ்ஜர் (Komaki Ranger) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. எலெக்ட்ரிக் பைக் குறித்த கூடுதல் சிறப்பு தகவல்களை கீழே உள்ள பார்க்கலாம், வாங்க.

ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்தோம்... இந்தியாவின் முதல் க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

கோமகி எலெக்ட்ரிக் (Komaki Electric Vehicles) நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார க்ரூஸர் ரக பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ரேஞ்ஜர் (Ranger) என பெயர் கொண்ட பைக்கையே நிறுவனம் நட்டில் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியாவில் முதல் முறையாக க்ரூஸர் ஸ்டைலில் விற்பனைக்கு வரும் முதல் எலெக்ட்ரிக் பைக்க இதுவாகும். பிரத்யேகமான அக்ஸசெரீஸ்களுடன் சேர்த்து இதன் விலை ரூ. 1.68 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்தோம்... இந்தியாவின் முதல் க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

வரும் ஜனவரி 26ம் தேதி முதல் நிறுவனத்தின் அனைத்து விற்பனையகத்திலும் இந்த எலெக்ட்ரிக் க்ரூஸர் பைக் விற்பனைக்குக் கிடைக்கும் என கோமகி தெரிவித்துள்ளது. மூன்று விதமான நிற தேர்வுகளில் கோமகி ரேஞ்ஜர் எலெக்ட்ரிக் பைக் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்தோம்... இந்தியாவின் முதல் க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

கார்னெட் ரெட், டீப் ப்ளூ மற்றும் ஜெட் பிளாக் ஆகிய நிற தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. பைக்கின் க்ரூஸர் தன்மையை வெளிக்காட்டும் வகையில் பெரிய க்ராஸ்ஸர் ரக வீல்கள், வெளிப்புறத்தில் குரோம் பூச்சுடன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், இந்த தோற்றத்தை கூடுதலாக மெருகேற்றும் வகையில் ஷைனான குரோம் கொண்ட வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், இதே மாதிரியான வட்ட வடிவ ஆக்ஸிலியரி மின் விளக்குகள் உள்ளிட்டவை இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்தோம்... இந்தியாவின் முதல் க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இதுபோன்று பைக்கில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான அம்சங்கள் ரெட்ரோ ஸ்டைலை வெளிக்கொணரும் வகையிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏன், இன்டிகேட்டர்கள்கூட ரெட்ரோ தீமிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அகலமான ஹேண்டில்பார், சிங்கிள் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஷைனான க்ரோம் பூச்சுக் கொண்ட டிஸ்பிளே (எரிபொருள் தொட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது) உள்ளிட்டவையும் ரேஞ்ஜர் எலெக்ட்ரிக் பைக்கை க்ரூஸர் பைக்காக காட்சிப்படுத்தும் வகையிலேயே வழங்கப்பட்டுள்ளன.

ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்தோம்... இந்தியாவின் முதல் க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இவை அனைத்தும் கோமகி ரேஞ்ஜர் பைக்கிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, பின் பக்க பயணிக்கு கூடுதல் சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் பொருட்டு 'பேக் ரெஸ்ட் பேட்' ஒன்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரேஞ்ஜரின் இரு பக்கத்திலும் ஹார்ட் பேனியர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்தோம்... இந்தியாவின் முதல் க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இந்த இரு அம்சங்களும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவானதாக ரேஞ்ஜரை வெளிக்காட்டுகின்றன. இத்துடன், லெக் குவார்ட், ஃபாக்ஸ் எக்சாஸ்ட் மற்றும் கருப்பு நிற அலாய் வீல்கள் உள்ளிட்டவையும் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் இடம் பெற்றுள்ளன. ஆகையால், இது ஓர் பிரீமியம் தர க்ரூஸர் எலெக்ட்ரிக் பைக்காக காட்சியளிக்கின்றது. எனவே நிச்சயம் அதிகம் சிறப்பம்சங்களை விரும்பும் டூ-வீலர் விரும்புகளை இந்த எலெக்ட்ரிக் பெரியளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்தோம்... இந்தியாவின் முதல் க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இதை உறுதிப்படுத்தும் வகையில் கூடுதல் பிரீமியம் தர அம்சங்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ப்ளூடூத் இணைப்பு சவுண்ட் சிஸ்டம், சைடு ஸ்டாண்ட் சென்சார், க்ரூஸ் கன்ட்ரோல் ஃபீச்சர், ஆன்டி-தெஃப்ட் சிஸ்டம் (இருசக்கர வாகன திருட்டை தவிர்க்க பேருதவியாக இருக்கும்) மற்றும் ட்யூவல் ஸ்டோரேஜ் பாக்ஸ் ஆகியவையும் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்தோம்... இந்தியாவின் முதல் க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

கோமகி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் க்ரூஸர் பைக்கில் 4 ஆயிரம் வாட் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 4 kW பேட்டரி பேக் ஆகியவற்றை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீ முதல் 220 கிமீ வரை நம்மால் பயணிக்க முடியும். இது உண்மையிலேயே அதிக ரேஞ்ஜ் திறன் ஆகும். நிச்சயம் அதிக ரேஞ்ஜை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவர இது நிச்சயம் உதவும்.

ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்தோம்... இந்தியாவின் முதல் க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்! இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இந்தியாவில் அண்மைக் காலங்களாக மின் வாகனங்களுக்கான தேவை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக கடந்த 2021ம் ஆண்டில் பல மடங்கு இதன் தேவை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே எலெக்ட்ரிக் க்ரூஸர் ரேஞ்ஜர் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Most Read Articles
English summary
India s first electric cruiser bike komaki ranger launched in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X