ரோடுல போகும்போது பிறரின் கவனத்தை ஈர்க்க விரும்புபவரா நீங்க? ஜாவாவின் இந்த பைக் இருந்தா நிச்சயம் அது நடக்கும்!

ஜாவா நிறுவனம் அதன் 42 பாபர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரோடுல போறவங்க கவனத்தை ஈர்க்க விரும்புபவரா நீங்க... ஜாவாவின் இந்த பைக்கை ஓட்டிட்டு போனா நிச்சயம் அது நடக்கும்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஜாவா (Jawa), அதன் புதிய 42 பாபர் (42 Bobber) மோட்டார்சைக்கிளை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அறிமுகமாக இதற்கு ரூ. 2.06 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரோடுல போறவங்க கவனத்தை ஈர்க்க விரும்புபவரா நீங்க... ஜாவாவின் இந்த பைக்கை ஓட்டிட்டு போனா நிச்சயம் அது நடக்கும்!

நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் மஹிந்திரா குழுமத்திற்கு சொந்தமான கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளினால் ஜாவா நிறுவனம் மீண்டும் புத்துயிரை பெற்றது. இதை அடுத்து ஒன்றன் பின் ஒன்றாக ஜாவா பிராண்டின்கீழ் மூன்று இருசக்கர வாகன மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

ரோடுல போறவங்க கவனத்தை ஈர்க்க விரும்புபவரா நீங்க... ஜாவாவின் இந்த பைக்கை ஓட்டிட்டு போனா நிச்சயம் அது நடக்கும்!

இந்த நிலையிலேயே இந்த தேர்வுகளை விரிவாக்கம் செய்யும் வகையில் நிறுவனம் ஜாவா 42 பாபர் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த பைக்கை மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது, ஜாவா. மிஸ்டிக் காப்பர் (Mystic Copper), மூன் ஸ்டோன் ஒயிட் (Moonstone white) மற்றும் ஜாஸ்பர் ரெட் (Jasper Red) என்கிற இரட்டை நிற தேர்விலும் இந்த பைக்கை விற்பனைக்கு வழங்க உள்ளது.

ரோடுல போறவங்க கவனத்தை ஈர்க்க விரும்புபவரா நீங்க... ஜாவாவின் இந்த பைக்கை ஓட்டிட்டு போனா நிச்சயம் அது நடக்கும்!

அடுத்து வரும் வாரங்களில் இந்த இருசக்கர வாகனத்தை நிறுவனம் டெலிவரி கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இத்துடன், டெஸ்ட் டிரைவ் வழங்கவும் ஆரம்பிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆகையால், அடுத்த வாரம் இந்த பைக்கை வாங்க விருப்பமுள்ளவர்கள் அதனை ரைடிங் அனுபவம் எப்படி இருக்கின்றது என்பதை டெஸ்ட் டிரைவ் செய்து வாங்கிக் கொள்ள முடியும்.

ரோடுல போறவங்க கவனத்தை ஈர்க்க விரும்புபவரா நீங்க... ஜாவாவின் இந்த பைக்கை ஓட்டிட்டு போனா நிச்சயம் அது நடக்கும்!

நிறுவனம் இந்த பைக்கை தனது புகழ்பெற்ற பெராக் மாடலை தழுவி உருவாக்கியிருக்கின்றது. தங்களின் 'ஃபேக்டரி கஸ்டம்' பிரிவில் நுழைந்த முதல் பைக் என நிறுவனம் தெரிவித்துள்ளது. பைக்கின் அழகிய தோற்றத்திற்கு கவர்ச்சி சேர்க்கும் விதமாக புதிய வட்ட வடிவ ஹெட்லேம்ப், இன்டிபென்டன்ட் கடிகார கன்சோல், புதிய ஹேண்டில் பார், புதிய ஃப்யூவல் டேங்க் மற்றும் மறு-வடிவமைப்பு செய்யப்பட்ட இருக்கை உள்ளிட்டவற்றை ஜாவா பயன்படுத்தியிருக்கின்றது.

ரோடுல போறவங்க கவனத்தை ஈர்க்க விரும்புபவரா நீங்க... ஜாவாவின் இந்த பைக்கை ஓட்டிட்டு போனா நிச்சயம் அது நடக்கும்!

இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கன்சோல் எல்சிடி திரை ஆகும். இதில், புதிய ஸ்விட்ச்கியர் கன்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. ஜாவா 42 பாபர் பைக்கில் ஃப்ளோட்டிங் ரக இருக்கையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இருக்கையை இரு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். முன் மற்றும் பின் என நகர்த்திக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது.

ரோடுல போறவங்க கவனத்தை ஈர்க்க விரும்புபவரா நீங்க... ஜாவாவின் இந்த பைக்கை ஓட்டிட்டு போனா நிச்சயம் அது நடக்கும்!

மோட்டாரை பொருத்த வரையில் இப்பைக்கில் 334 சிசி எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 30.64 பிஎஸ் பவரையும், 32.74 என்எம் டார்க்கையும் வெளியற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே இம்மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரோடுல போறவங்க கவனத்தை ஈர்க்க விரும்புபவரா நீங்க... ஜாவாவின் இந்த பைக்கை ஓட்டிட்டு போனா நிச்சயம் அது நடக்கும்!

இதைத்தொடர்ந்து, 42 பாபர் பைக்கில் மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக ரீ-ட்யூன் செய்யப்பட்ட சஸ்பென்ஷனே பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பிரேக்கிங் வசதிக்காக ரீ-கேலிபரேட்டட் பிரேக்குகள், ட்யூவல் சேனநல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ரோடுல போறவங்க கவனத்தை ஈர்க்க விரும்புபவரா நீங்க... ஜாவாவின் இந்த பைக்கை ஓட்டிட்டு போனா நிச்சயம் அது நடக்கும்!

பைக்கின் முழுமையான விலை விபரம்:

நிற தேர்வுகள் விலை விபரம் (எக்ஸ்-ஷோரூம்)
Mystic Copper ₹2,06,500
Moonstone White ₹2,07,500
Jasper Red (Dual Tone) ₹2,09,187
Most Read Articles

English summary
Jawa launches 42 bobber motorcycle in india at inr 2 06 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X