கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! பெருசா ஒன்னுமே பண்ணல ஆனா விலையை மட்டும் ஏத்திட்டாங்கா!

கவாஸாகி (Kawasaki) நிறுவனம் அதன் இசட்900 (Z900) பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... பெருசா ஒன்னுமே பண்ணல ஆனா விலை மட்டும் ஏத்தி வச்சிருக்காங்க!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவமான கவாஸாகி இந்தியாவில் அதன் 2023 கவாஸாகி இசட்900 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அறிமுக விலையாக இருசக்கர வாகனத்திற்கு ரூ. 8.93 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இது தற்போது விற்பனையில் இருக்கும் இசட் 900-ஐக் காட்டிலும் ரூ. 51 ஆயிரம் அதிக விலை ஆகும்.

கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... பெருசா ஒன்னுமே பண்ணல ஆனா விலை மட்டும் ஏத்தி வச்சிருக்காங்க!

பெரியளவில் மாற்றம் செய்யப்படாமலே இந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேலையில், தற்போது இரு புதிய நிற தேர்வுகளில் கவாஸாகி இசட்900 பைக்கை நம்மால் வாங்கிக் கொள்ள முடியும். கவாஸாகி இசட் 900 ஓர் நடுத்தர எடைக் கொண்ட நேக்கட் ரக டூ-வீலர் ஆகும்.

கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... பெருசா ஒன்னுமே பண்ணல ஆனா விலை மட்டும் ஏத்தி வச்சிருக்காங்க!

புதிய நிற தேர்வாக இசட்900 -ஐ மெட்டாலிக் பேந்தம் சில்வர்/ மெட்டாலிக் கார்பன் கிரே அல்லது இபோனி/ மெட்டாலிக் மேட் கிரஃபேன் ஸ்டீல் கிரே ஆகிய நிற தேர்வுகளிலேயே கவாஸாகி இசட்900 பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் இந்த இருசக்கர வாகனத்தில் கவாஸாகி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... பெருசா ஒன்னுமே பண்ணல ஆனா விலை மட்டும் ஏத்தி வச்சிருக்காங்க!

இந்நிறுவனம் சமீபத்தில் 2023 கவாஸாகி இசட்எக்ஸ்-10ஆர் பைக்கையும் இதேபோல் இருவிதமான புதிய நிற தேர்வில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்டிருந்த 948 சிசி, இன்லைன்-4, லிக்யூடு கூல்டு மோட்டாரே இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... பெருசா ஒன்னுமே பண்ணல ஆனா விலை மட்டும் ஏத்தி வச்சிருக்காங்க!

இந்த மோட்டார் 125 எச்பி பவரை 9,500 ஆர்பிஎம்மிலும், 98.6 என்எம் டார்க்கை 7,700 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூப்பரான பவரை வெளியேற்றக் கூடிய மோட்டாரே கவாஸாகி இசட்900 பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், மிக ரைடிங் அனுபவத்தை வழங்கும் விதமாக இசட்900 பைக்கில் 41 மிமீ யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனோஷாக் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... பெருசா ஒன்னுமே பண்ணல ஆனா விலை மட்டும் ஏத்தி வச்சிருக்காங்க!

இவை இரண்டும் ப்ரீலோட் மற்றும் ரீ-பவுண்ட் வசதிக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக 300 மிமீ டிஸ்க் முன்பக்கத்திலும், 250 மிமீ டிஸ்க் பின் பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர, ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிஸ்டன் காலிபர்களும் இந்த இருசக்கர வாகனத்தில் சூப்பரான பிரேக்கிங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளன.

கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... பெருசா ஒன்னுமே பண்ணல ஆனா விலை மட்டும் ஏத்தி வச்சிருக்காங்க!

இதுமட்டுமின்றி சில முக்கிய தொழில்நுட்ப கருவிகளும் இந்த இருசக்கர வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ட்யூவல் சேனல் ஏபிஎஸ், எல்இடி மின் விளக்குகள் (அனைத்தும்), 4.3 அங்குல வண்ண டிஎஃப்டி திரை உள்ளிட்ட அம்சங்கள் கவாஸாகி இசட்900 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன், நான்கு விதமான ரைடிங் மோட்கள் இந்த இருசக்கர வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

கவாஸாகி இசட்900 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... பெருசா ஒன்னுமே பண்ணல ஆனா விலை மட்டும் ஏத்தி வச்சிருக்காங்க!

ரெயின், ரோடு, ஸ்போர்ட் மற்றும் ரைடர் (இந்த மோடில் நமக்கேற்றவாறு கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்) ஆகிய மோட்களே வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், டிராக்சன் கன்ட்ரோலுக்கு என தனி பொத்தானும் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. கவாஸாகி இசட்900 பைக் இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இருக்கும் டுகாட்டி மான்ஸ்டர், பிஎம்டபிள்யூ எஃப்900ஆர், டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆற் மற்றும் ஹோண்டா சிபி650ஆர் ஆகிய இருசக்கர வாகனங்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki launched z900 bike in india with two new colour option
Story first published: Wednesday, September 14, 2022, 18:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X