பெட்ரோல்-மின்சாரம் இரண்டிலும் இயங்கும் பைக்கை வெளியீடு செய்தது பிரபல நிறுவனம்... எந்த நிறுவனம் தெரியுமா?

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று பெட்ரோல் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் ஹைபிரிட் (Hybrid Bike) மோட்டார்சைக்கிள் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் (eBike) ஆகிய இரண்டையும் வெளியீடு செய்திருக்கின்றது. உற்பத்தி தயாராக இருக்கும் இவ்விரு இரண்டு சக்கர வாகனங்கள் பற்றிய முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெட்ரோல்-மின்சாரம் இரண்டிலும் இயங்கும் பைக்கை வெளியீடு செய்தது பிரபல நிறுவனம்... இத்துடன் ஓர் இ-பைக்கையும் வெளியிட்டிருக்கு!

உலகின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கவாஸாகி (Kawasaki) புதுமுக எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஹைபிரிட் (பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும்) மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனமும் சில புதுமுக வாகனங்களின் வருகைக்காக பேடெண்ட் (Patent) உரிமங்களை அண்மையில் பதிவு செய்தது.

பெட்ரோல்-மின்சாரம் இரண்டிலும் இயங்கும் பைக்கை வெளியீடு செய்தது பிரபல நிறுவனம்... இத்துடன் ஓர் இ-பைக்கையும் வெளியிட்டிருக்கு!

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஹைபிரிட் மோட்டார்சைக்கிள் ஆகிய இரண்டையும் சர்ப்ரைஸ் அளிக்கும் காட்சிப்படுத்தியுள்ளது. இதுவே இரு வாகனங்களும் காட்சிப்படுத்தப்படுவது முதல் முறையாகும். சமீபத்தில், சுஸுகி 8 மணிநேர எண்டூரன்ஸ் ரேஸ் எனும் போட்டியை நடத்தியது. இந்த போட்டியின்போதே உற்பத்தி நிலைக்கு தயாராக இருக்கும் கவாஸாகியின் மின்சார பைக் மற்றும் ஹைபிரிட் மோட்டார்சைக்கிள் இரண்டும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பெட்ரோல்-மின்சாரம் இரண்டிலும் இயங்கும் பைக்கை வெளியீடு செய்தது பிரபல நிறுவனம்... இத்துடன் ஓர் இ-பைக்கையும் வெளியிட்டிருக்கு!

எந்தவொரு மறைப்புகளும் இன்றி அவை தரிசனத்தை வழங்கியிருக்கின்றன. கவாஸாகி ஹைபிரிட் மோட்டார்சைக்கிள் பெட்ரோல் மோட்டார் மற்றும் மின்சார மோட்டார் என இரண்டிலும் இயங்கும். இப்பைக்கில் பெட்ரோல் மோட்டாராக 650 சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின் லிக்யூடு எஞ்ஜின் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெட்ரோல்-மின்சாரம் இரண்டிலும் இயங்கும் பைக்கை வெளியீடு செய்தது பிரபல நிறுவனம்... இத்துடன் ஓர் இ-பைக்கையும் வெளியிட்டிருக்கு!

இத்துடனேயே சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்று பைக்கின் பின் வீலில் பொருத்தப்பட இருக்கின்றது. இந்த இரு மோட்டார்களும் இணைந்து பைக்கை அதிக திறன் வெளியேற்றம் கொண்ட வாகனமாகவும், சூப்பரான மைலேஜ் தரக் கூடிய வாகனமாகவும் மாற்ற இருக்கின்றன. நிஞ்ஜா 400 பைக்கை தழுவியே கவாஸாகி நிறுவனம் புதிய ஹைபிரிட் பைக்கை உருவாக்கியிருக்கின்றது.

பெட்ரோல்-மின்சாரம் இரண்டிலும் இயங்கும் பைக்கை வெளியீடு செய்தது பிரபல நிறுவனம்... இத்துடன் ஓர் இ-பைக்கையும் வெளியிட்டிருக்கு!

ஆகையால், அதன் தோற்றம் மற்றும் ஸ்டைல் அனைத்தும் நிஞ்ஜா 400 பைக்கை போலவே காட்சியளிக்கின்றது. தற்போது தரிசனத்தை வழங்கியிருக்கும் ஹைபிரிட் மோட்டார்சைக்கிளில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், மோனோஷாக் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங்கிற்காக இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெட்ரோல்-மின்சாரம் இரண்டிலும் இயங்கும் பைக்கை வெளியீடு செய்தது பிரபல நிறுவனம்... இத்துடன் ஓர் இ-பைக்கையும் வெளியிட்டிருக்கு!

இந்த ஹைபிரிட் மோட்டார்சைக்கிளைப் போலவே தனது எலெக்ட்ரிக் பைக்கையும் அட்டகாசமான வாகனமாக கவாஸாகி உருவாக்கியிருக்கின்றது. குறிப்பாக, இந்த எலெக்ட்ரிக் பைக்கை ஃபெர்ஃபார்மன்ஸ் ரக மின்சார வாகனமாக கவாஸாகி தயாரித்துள்ளது. இந்த பைக்கிற்கான மின்சார மோட்டார் பைக்கின் மையப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல்-மின்சாரம் இரண்டிலும் இயங்கும் பைக்கை வெளியீடு செய்தது பிரபல நிறுவனம்... இத்துடன் ஓர் இ-பைக்கையும் வெளியிட்டிருக்கு!

இது சங்கிலி வாயிலாக இயக்க அனுபவத்தை வீலுக்கு கடத்தும். ஆனால், இந்த மோட்டார் என்ன மாதிரியான திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்டது என்பது தெளிவாக தெரியவில்லை. இதேபோல், என்ன மாதிரியான ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக் இ-பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்களையும் கவாஸாகி வெளியிடவில்லை.

பெட்ரோல்-மின்சாரம் இரண்டிலும் இயங்கும் பைக்கை வெளியீடு செய்தது பிரபல நிறுவனம்... இத்துடன் ஓர் இ-பைக்கையும் வெளியிட்டிருக்கு!

தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு நாளில் திடீர் சர்ப்ரைஸ் வழங்க வேண்டும் என்பதற்காக இரு இருசக்கர வாகனங்கள் பற்றிய எந்தவொரு முக்கிய தகவலையும் கவாஸாகி வெளியிடவில்லை. உலகளவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதன் விளைவாக டூ-வீலர் உற்பத்தியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு மின் வாகன உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர்.

பெட்ரோல்-மின்சாரம் இரண்டிலும் இயங்கும் பைக்கை வெளியீடு செய்தது பிரபல நிறுவனம்... இத்துடன் ஓர் இ-பைக்கையும் வெளியிட்டிருக்கு!

இந்த நிறுவனங்களின் வரிசையிலேயே தற்போது கவாஸாகி இணைந்திருக்கின்றது. ஆனால், இந்த பணியில் கவாஸாகி நிறுவனம் பல மாதங்களாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பும் வெகுவிரைவில் அதன் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதற்காக நிறுவனம் தனி பிராண்டையே உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki revealed ninja styled hybrid and z type e bikes here is full details
Story first published: Saturday, August 13, 2022, 20:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X