ராயல் என்பீல்டுக்கு செக்... இதை விட குறைவான விலையில் கவாஸாகி பைக்கை வாங்க முடியாது! இதெல்லாம் ரொம்ப நாள் கனவு!

கவாஸாகி நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக் குறித்த விபரங்கள் தற்போது நமக்கு கிடைத்துள்ளன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டுக்கு செக்... இதை விட குறைவான விலையில் கவாஸாகி பைக்கை வாங்க முடியாது! இதெல்லாம் ரொம்ப நாள் கனவு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பைக்குகளில் ஒன்று கவாஸாகி டபிள்யூ175 (Kawasaki W175). இந்த பைக் இந்திய சந்தையில் நாளை (செப்டம்பர் 25) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனவே நாளைதான் இந்த பைக்கின் அதிகாரப்பூர்வமான விலையை கவாஸாகி நிறுவனம் அறிவிக்கவுள்ளது.

ராயல் என்பீல்டுக்கு செக்... இதை விட குறைவான விலையில் கவாஸாகி பைக்கை வாங்க முடியாது! இதெல்லாம் ரொம்ப நாள் கனவு!

எனினும் அதற்கு முன்னதாக இந்த மோட்டார்சைக்கிளின் விலை எவ்வளவாக இருக்கலாம்? என்பது குறித்த விபரங்கள் தற்போது கிடைத்துள்ளன. ஸ்டாண்டர்டு (Standard) மற்றும் ஸ்பெஷல் எடிசன் (Special Edition) ஆகிய இரண்டு வேரியண்ட்களில் கவாஸாகி டபிள்யூ175 பைக் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்பீல்டுக்கு செக்... இதை விட குறைவான விலையில் கவாஸாகி பைக்கை வாங்க முடியாது! இதெல்லாம் ரொம்ப நாள் கனவு!

இதில், ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் விலை 1.47 லட்ச ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த பைக்கின் ஸ்பெஷல் எடிசன் வேரியண்ட்டின் விலை 1.49 லட்ச ரூபாயாக இருக்கலாம். அதாவது ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் விலையை காட்டிலும் ஸ்பெஷல் எடிசன் வேரியண்ட்டின் விலை 2 ஆயிரம் ரூபாயாக அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ராயல் என்பீல்டுக்கு செக்... இதை விட குறைவான விலையில் கவாஸாகி பைக்கை வாங்க முடியாது! இதெல்லாம் ரொம்ப நாள் கனவு!

இதன் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதிலேயே மிகவும் விலை குறைவான கவாஸாகி பைக் என்ற பெருமையை டபிள்யூ175 பைக் பெறவுள்ளது. இந்த மிகவும் குறைவான விலைதான் கவாஸாகி டபிள்யூ175 பைக் மீதான இந்திய வாடிக்கையாளர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்புகளுக்கு மிகவும் முக்கியமான காரணம்.

ராயல் என்பீல்டுக்கு செக்... இதை விட குறைவான விலையில் கவாஸாகி பைக்கை வாங்க முடியாது! இதெல்லாம் ரொம்ப நாள் கனவு!

ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி, இவை தற்போது நமக்கு கிடைத்திருக்கும் தகவல்கள் மட்டுமே. அதிகாரப்பூர்வமான விலை நமக்கு நாளைதான் தெரியவரும். இந்திய சந்தையில் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) மற்றும் டிவிஎஸ் ரோனின் 225 (TVS Ronin 225) ஆகிய பைக்குகளுடன் கவாஸாகி டபிள்யூ175 பைக் போட்டியிடும்.

ராயல் என்பீல்டுக்கு செக்... இதை விட குறைவான விலையில் கவாஸாகி பைக்கை வாங்க முடியாது! இதெல்லாம் ரொம்ப நாள் கனவு!

செயல்திறனை பொறுத்தவரையில் கவாஸாகி டபிள்யூ175 பைக்கில், 177 சிசி, சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக இருக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 12.8 பிஹெச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 13.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படலாம்.

ராயல் என்பீல்டுக்கு செக்... இதை விட குறைவான விலையில் கவாஸாகி பைக்கை வாங்க முடியாது! இதெல்லாம் ரொம்ப நாள் கனவு!

சஸ்பென்ஸனை பொறுத்தவரையில் கவாஸாகி டபிள்யூ175 பைக்கின் முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் உள்ள ட்வின் ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்படவுள்ளன. அதே நேரத்தில் இந்த பைக்கின் பிரேக்கிங் பணிகளை, முன் பகுதியில் சிங்கிள் 270 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 110 மிமீ ட்ரம் பிரேக்கும் கவனித்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டுக்கு செக்... இதை விட குறைவான விலையில் கவாஸாகி பைக்கை வாங்க முடியாது! இதெல்லாம் ரொம்ப நாள் கனவு!

வாழ்க்கையில் ஒரு கவாஸாகி பைக்கையாவது வாங்கி விட வேண்டும் என்ற கனவு இந்திய வாடிக்கையாளர் பலரிடமும் தற்போது காணப்படுகிறது. ஆனால் கவாஸாகி பைக்குகள் மிக மிக விலை உயர்ந்தவை என்பதால், அந்த கனவை பலராலும் நிறைவேற்றி கொள்ள முடிவதில்லை. எனினும் கவாஸாகி நிறுவனத்தின் பைக்கை வாங்க வேண்டும் என்ற கனவுடன் நீண்ட காலமாக இருப்பவர்களுக்கு, மிகவும் விலை குறைவான டபிள்யூ175 நல்ல தேர்வாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki w175 price details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X