சீன நிறுவனம் இப்படி ஒரு விலையை நிர்ணயிக்கும்னு எதிர்பார்க்கல... இரு ஸ்கூட்டர்களின் விலையை அறிவித்தது கீவே!

அண்மையில் இந்தியாவில் கால் தடம் பதித்த கீவே (Keeway) நிறுவனம் அது அறிமுகப்படுத்திய இரு ஸ்கூட்டர்களின் விலையையும் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சீன நிறுவனம் இப்படி ஒரு விலையை நிர்ணயிக்கும்னு எதிர்பார்க்கல... இரு ஸ்கூட்டர்களின் விலையை அறிவித்த கீவே!

சீன நிறுவனமான க்யூஜே மோட்டார்ஸ் (QJ Motors)-க்கு சொந்தமான நிறுவனம் கீவே (Keeway). இந்நிறுவனம் மிக சமீபத்திலேயே இந்தியாவில் அதன் கால் தடத்தைப் பதித்தது. ஆரம்பமே அமர்க்களமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரே மேடையில் மூன்று இருசக்கர வாகனங்களை அது அறிமுகப்படுத்தியது.

சீன நிறுவனம் இப்படி ஒரு விலையை நிர்ணயிக்கும்னு எதிர்பார்க்கல... இரு ஸ்கூட்டர்களின் விலையை அறிவித்த கீவே!

சிக்ஸ்டீல் 300ஐ (Sixties 300i), விஸ்டே 300 (Vieste 300) மற்றும் கே-லைட் 250 வி (K-Lite 250V) ஆகிய டூ-வீலர் மாடல்களையே அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதில், சிக்ஸ்டீஸ் 300ஐ என்பது கிளாசிக் ரக ஸ்கூட்டராகும். விஸ்டே 300 ஓர் மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடலும். பைக் க்ரூஸர் ரகம். இந்த மூன்று ரக இருசக்கர வாகனங்களையே இந்திய சந்தையை அலங்கரிக்கும் கீவே நாட்டில் அறிமுகப்படுத்தியது.

சீன நிறுவனம் இப்படி ஒரு விலையை நிர்ணயிக்கும்னு எதிர்பார்க்கல... இரு ஸ்கூட்டர்களின் விலையை அறிவித்த கீவே!

ஆனால், அறிமுகத்தின்போது இருசக்கர வாகனங்கள் பற்றிய போதிய தகவலை அது வெளியிடவில்லை. குறிப்பாக, இருசக்கர வாகனங்களின் விலை போன்ற முக்கிய தகவல்களை அது வெளியிடவில்லை. இந்த நிலையிலேயே அதன் ஸ்கூட்டர்களின் விலையை தற்போது நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.

சீன நிறுவனம் இப்படி ஒரு விலையை நிர்ணயிக்கும்னு எதிர்பார்க்கல... இரு ஸ்கூட்டர்களின் விலையை அறிவித்த கீவே!

இரண்டு ஸ்கூட்டர்களும் ஒரே விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். அதாவது, இரண்டிற்கும் ரூ. 2.99 லட்சம் என்ற விலையையே நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். தோற்றத்தில் மட்டுமே மாறுபட்டுக் காட்சியளிக்கும் இந்த ஸ்கூட்டர் சிறப்பு அம்சம் மற்றும் எஞ்ஜின் விஷயத்தில் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன.

சீன நிறுவனம் இப்படி ஒரு விலையை நிர்ணயிக்கும்னு எதிர்பார்க்கல... இரு ஸ்கூட்டர்களின் விலையை அறிவித்த கீவே!

இந்த நிலையிலேயே இதன் விலைகளும் ஒன்றே என்பதை நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு ஸ்கூட்டர்களிலும் 278.2 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், 4 வால்வு வசதியுடைய மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 18.7 பிஎச்பி பவரை 6,500 ஆர்பிஎம்மிலும், 22 என்எம் டார்க்கை 6000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும்.

சீன நிறுவனம் இப்படி ஒரு விலையை நிர்ணயிக்கும்னு எதிர்பார்க்கல... இரு ஸ்கூட்டர்களின் விலையை அறிவித்த கீவே!

இரு ஸ்கூட்டர்களும் மிக அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றன. அந்தவகையில், இரு ஸ்கூட்டர்களிலும் டிஸ்க் பிரேக்குகள் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் அம்சத்துடன் வழங்கப்பட்டிருக்கின்றது. இன்னும் சில அம்சங்களில் இரு ஸ்கூட்டர்களிலும் ஒரே மாதிரியான காட்சியளிக்கின்றன.

சீன நிறுவனம் இப்படி ஒரு விலையை நிர்ணயிக்கும்னு எதிர்பார்க்கல... இரு ஸ்கூட்டர்களின் விலையை அறிவித்த கீவே!

சிக்ஸ்டீஸ் 300ஐ ஸ்கூட்டரின் சிறப்பு வசதிகள்:

இதன் பெயரே இந்த ஸ்கூட்டரின் தோற்றம் எந்த காலத்துடையது என்பதை விளக்கும் வகையில் இருக்கின்றது. ஆமாங்க, 60-களில் விற்பனையில் இருந்த ஸ்கூட்டரின் தோற்றத்தில் சிக்ஸ்டீஸ் 300ஐ உருவாக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவ ஹெட்லேம்ப், வட்ட வடிவ கண்ணாடிகள், கிளாசிக் தோற்றத்திலான பேட்ஜ்கள், ரெட்ரோ ஸ்டைல் ஹேண்டில்கள் மற்றும் பெரிய இருக்கைகள் உள்ளிட்டவற்றை அது கொண்டிருக்கின்றது.

சீன நிறுவனம் இப்படி ஒரு விலையை நிர்ணயிக்கும்னு எதிர்பார்க்கல... இரு ஸ்கூட்டர்களின் விலையை அறிவித்த கீவே!

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான நிற தேர்வுகளில் சிக்ஸ்டீஸ் 300ஐ நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். மேட் லைட் ப்ளூ, மேட் கிரே மற்றும் மேட் வெள்ளை ஆகிய வண்ண அவை ஆகும். இந்த அனைத்து நிற தேர்வுகளைக் காட்டிலும் மேட் லைட் ப்ளூ மிக சிறந்த ரெட்ரோ தோற்றம் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

சீன நிறுவனம் இப்படி ஒரு விலையை நிர்ணயிக்கும்னு எதிர்பார்க்கல... இரு ஸ்கூட்டர்களின் விலையை அறிவித்த கீவே!

இதன் கிளாசிக் தோற்றத்தை மேலும் மெருகேற்றும் வகையில் க்ரீம் நிற பிளாஸ்டிக் பேனல்கள், வெள்ளை நிற சுவர்கள் கொண்ட டயர்கள் மற்றும் டேன் நிறத்திலான இருக்கைக் கவர் உள்ளிட்டவை சிக்ஸ்டீஸ் 300ஐ மாடலில் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, எல்சிடி திரை, பத்து லிட்டர் கெபாசிட்டி கொண்ட பெட்ரோல் டேங்க் ஆகியவையும் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளன.

சீன நிறுவனம் இப்படி ஒரு விலையை நிர்ணயிக்கும்னு எதிர்பார்க்கல... இரு ஸ்கூட்டர்களின் விலையை அறிவித்த கீவே!

விஸ்டே 300 மேக்ஸி ஸ்கூட்டரின் சிறப்பு வசதிகள்:

அதிக கம்ஃபோர்டான அம்சங்களுடனேயே இந்த ஸ்கூட்டரும் இந்திய சந்தையை வந்தடைந்திருக்கின்றது. மாடர்ன் மற்றும் நவீன கால தோற்றத்தில் இது காட்சியளிக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம். இதனையும் மூன்று விதமான நிற தேர்வுகளில் வழங்க இருக்கின்றது கீவே.

சீன நிறுவனம் இப்படி ஒரு விலையை நிர்ணயிக்கும்னு எதிர்பார்க்கல... இரு ஸ்கூட்டர்களின் விலையை அறிவித்த கீவே!

மேட் ப்ளூ, மேட் பிளாக் மற்றும் மேட் ஒயிட் ஆகிய நிற தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். எல்இடி மின் விளக்குகள், 4 புரஜெக்டர்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில் லைட் மற்றும் இன்டிகேட்டர்கள் ஆகியவை ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் கூடுதல்சிறப்பு தொழில்நுட்ப அம்சமாக விஸ்டே 300 மாடலில் எல்சிடி திரை, வட்ட வடிவ அனலாக் ஸ்பீடோ மற்றும் டேக்கோ மீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

சீன நிறுவனம் இப்படி ஒரு விலையை நிர்ணயிக்கும்னு எதிர்பார்க்கல... இரு ஸ்கூட்டர்களின் விலையை அறிவித்த கீவே!

இது மாதிரியான இன்னும் பல சிறப்பு வசதிகள் இந்த மேக்ஸி ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக அதிக வசதிகளைக் கொண்டிருப்பதனாலேயே இரு ஸ்கூட்டர்களும் காஸ்ட்லியான வாகனங்களாக விற்பனைக்கு வந்திருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #கீவே #keeway
English summary
Keeway announces sixties 300i and vieste 300 scooters price
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X