புதிய பைக்கை களமிறக்கும் வெளிநாட்டு நிறுவனம்... ராயல் என்பீல்டுக்கு செக்... இன்னும் ஒரு சில நாட்களில் அறிமுகம்

ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக புதிய பைக் ஒன்று இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய பைக்கை களமிறக்கும் வெளிநாட்டு நிறுவனம்... ராயல் என்பீல்டுக்கு செக்... இன்னும் ஒரு சில நாட்களில் அறிமுகம்

ஹங்கேரியை சேர்ந்த முன்னணி டூவீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று கீவே (Keeway). இந்த நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைக்கவுள்ளது. இந்திய சந்தையில் கீவே நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக கே-லைட் (K-Lite) என்ற க்ரூஸர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பைக்கை களமிறக்கும் வெளிநாட்டு நிறுவனம்... ராயல் என்பீல்டுக்கு செக்... இன்னும் ஒரு சில நாட்களில் அறிமுகம்

கீவே கே-லைட் மோட்டார்சைக்கிள் வரும் மே 17ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. கீவே நிறுவனம் ஹங்கேரியை சேர்ந்தது என்றாலும் கூட, தற்போது சீனாவின் கியான்ஜியாங் குழுமத்தால் (Qianjiang Group) நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.

புதிய பைக்கை களமிறக்கும் வெளிநாட்டு நிறுவனம்... ராயல் என்பீல்டுக்கு செக்... இன்னும் ஒரு சில நாட்களில் அறிமுகம்

இத்தாலியை சேர்ந்த முன்னணி டூவீலர் நிறுவனங்களில் ஒன்றான பெனெல்லி (Benelli) நிறுவனமும் கூட, கியான்ஜியாங் குழுமத்தின் கீழ்தான் தற்போது இயங்கி வருகிறது. கியான்ஜியாங் குழுமத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் கீவே நிறுவனம் சிறிய க்ரூஸர்கள், அட்வென்ஜர் டூரர்கள், நேக்கட் ஸ்ட்ரீட் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை தயாரிப்பதில் மிகவும் பிரபலமானது.

புதிய பைக்கை களமிறக்கும் வெளிநாட்டு நிறுவனம்... ராயல் என்பீல்டுக்கு செக்... இன்னும் ஒரு சில நாட்களில் அறிமுகம்

கீவே நிறுவனம் வரும் மே 17ம் தேதி இந்திய சந்தையில் தனது முதல் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்வது உறுதியாகியுள்ள நிலையில், அது கே-லைட் க்ரூஸர் மாடலாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ராயல் என்பீல்டு, ஜாவா மற்றும் யெஸ்டி போன்ற நிறுவனங்களின் பைக்குகளுக்கு இது போட்டியாக இருக்கும்.

புதிய பைக்கை களமிறக்கும் வெளிநாட்டு நிறுவனம்... ராயல் என்பீல்டுக்கு செக்... இன்னும் ஒரு சில நாட்களில் அறிமுகம்

இந்த பைக்கில், 500 சிசி, ட்வின்-சிலிண்டர், லிக்யூட்-கூல்டு இன்ஜின் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெனெல்லி 502சி (Benelli 502C) பைக்கில் இந்த இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். பெனெல்லி 502சி பைக்கில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 பிஹெச்பி பவரையும், 46 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

புதிய பைக்கை களமிறக்கும் வெளிநாட்டு நிறுவனம்... ராயல் என்பீல்டுக்கு செக்... இன்னும் ஒரு சில நாட்களில் அறிமுகம்

ஆனால் கீவே கே-லைட் க்ரூஸர் பைக்கில் இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் சற்று வித்தியாசமாக ட்யூனிங் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதுதவிர மற்றொரு வாய்ப்பும் உள்ளது. பெனெல்லி இம்பீரியல் 400 (Benelli Imperiale 400) பைக்கில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜினை, கீவே நிறுவனம் தனது கே-லைட் க்ரூஸர் பைக்கில் வழங்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

புதிய பைக்கை களமிறக்கும் வெளிநாட்டு நிறுவனம்... ராயல் என்பீல்டுக்கு செக்... இன்னும் ஒரு சில நாட்களில் அறிமுகம்

அது 374 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் ஆகும். பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.7 பிஹெச்பி பவரையும், 29 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்திய சந்தையில் எந்த வழியை பின்பற்றி கீவே கே-லைட் க்ரூஸர் பைக் விற்பனை செய்யப்படும் என்பது உறுதியாக தெரியவில்லை.

புதிய பைக்கை களமிறக்கும் வெளிநாட்டு நிறுவனம்... ராயல் என்பீல்டுக்கு செக்... இன்னும் ஒரு சில நாட்களில் அறிமுகம்

அதாவது இந்த பைக் இந்தியாவிலேயே முழுமையாக உற்பத்தி செய்யப்படுமா? அல்லது பாகங்களாக தருவிக்கப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுமா? என்பது சரியாக தெரியவில்லை. இதற்கிடையே கீவே நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி மையத்தை அமைப்பது தொடர்பான செய்திகள் எதுவும் தற்போது வெளியாகவில்லை.

புதிய பைக்கை களமிறக்கும் வெளிநாட்டு நிறுவனம்... ராயல் என்பீல்டுக்கு செக்... இன்னும் ஒரு சில நாட்களில் அறிமுகம்

எனவே சிபியூ வழியை கீவே நிறுவனம் பின்பற்றுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. அதாவது முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படலாம். இதுகுறித்த உறுதியான தகவல்கள் வரும் மே 17ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பைக்கை களமிறக்கும் வெளிநாட்டு நிறுவனம்... ராயல் என்பீல்டுக்கு செக்... இன்னும் ஒரு சில நாட்களில் அறிமுகம்

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு நிறுவனம் மிகவும் வலுவாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை எதிர்க்க வேண்டுமென்றால், விலை நிர்ணயம் மிகவும் முக்கியமானது. கீவே நிறுவனம் தனது கே-லைட் க்ரூஸர் பைக்கிற்கு குறைவான விலையை நிர்ணயம் செய்ய வேண்டுமென்றால், இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதுதான் மிகச்சிறந்த வழியாக இருக்கும்.

புதிய பைக்கை களமிறக்கும் வெளிநாட்டு நிறுவனம்... ராயல் என்பீல்டுக்கு செக்... இன்னும் ஒரு சில நாட்களில் அறிமுகம்

ஆனால் இது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் தற்போது வெளியாகவில்லை. ஆனால் சரியான விலை நிர்ணயம் செய்யப்பட்டால், இந்திய சந்தையில் கீவே நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கீவே நிறுவனத்தின் இந்திய நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றை தெரிந்து கொள்ள டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் இணைந்திருங்கள்.

Most Read Articles
மேலும்... #கீவே #keeway
English summary
Keeway k lite cruiser india launch details
Story first published: Tuesday, May 3, 2022, 15:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X