Just In
- 5 hrs ago
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- 6 hrs ago
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- 18 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 21 hrs ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
Don't Miss!
- Finance
FASTag-ல் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தி பணத்தைத் திருட முடியுமா?
- News
பிரபல பெண்ணின் "லிவிங் டூ கெதர்".. கை கால்களை கட்டி.. பால்கனியில் வைத்து.. அதிர்ந்த ஆக்ரா
- Movies
விஜய்யின் வாரிசு படத்தில் 'ஆல்தோட்ட பூபதி' ரீமிக்ஸ்...இது வேற லெவல் பிளானா இருக்கே
- Technology
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- Lifestyle
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஒரு போதும் ஸ்கிட் ஆகி கீழே விழ மாட்டீங்க... சூப்பரான அம்சங்களுடன் கோமகியின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
கோமகி (Komaki LY) நிறுவனம் அதன் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் காணக் கூடிய மிக முக்கியமான பிரச்னைகளில் சருக்கி விடுதலும் ஒன்றாக இருக்கின்றது. இந்த பிரச்னையில் இருந்து தீர்வளிக்கக் கூடிய ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று உருவாக்கியிருக்கின்றது. அந்த தயாரிப்பை தற்போது இந்திய மின்வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகமும் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி மின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் கோமகி (Komaki)-யும் ஒன்றாக தற்போது திகழ்கின்றது. இந்த நிறுவனமே நேற்றைய (செவ்வாய்) தினம் இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

கோமகி எல்ஒய் (Komaki LY) மற்றும் கோமகி டிடி 3000 (Komaki DT 3000) எனும் இரு புதுமுக மாடல்களே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், கோமகி எல்ஒய் மாடல் மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். கார்னெட் ரெட், ஜெட் பிளாக் மற்றும் மெட்டல் கிரே ஆகிய வண்ண தேர்வுகளிலேயே அது கிடைக்கும். ரூ. 88 ஆயிரம் இதற்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

கோமகி எல்ஒய் (Komaki LY) மற்றும் கோமகி டிடி 3000 (Komaki DT 3000) எனும் இரு புதுமுக மாடல்களே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், கோமகி எல்ஒய் மாடல் மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். கார்னெட் ரெட், ஜெட் பிளாக் மற்றும் மெட்டல் கிரே ஆகிய வண்ண தேர்வுகளிலேயே அது கிடைக்கும். ரூ. 88 ஆயிரம் இதற்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இதைவிட சற்று அதிக விலைக் கொண்ட மாடலாக கோமகி டிடி 3000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சியளிக்கின்றது. அதிக-வேக இயக்க திறனை வெளியேற்றக் கூடிய 3000 வாட் பிஎல்டிசி மின் மோட்டார் இதில் வழங்கப்பட்டிருக்கின்றது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆரம்ப விலையாக ரூ. 1.22 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

கோமகி டிடி 3000 மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ ஆகும். மிக சிறந்த ரேஞ்ஜ் திறனை வழங்குவதற்காக இ-ஸ்கூட்டரில் 62V52AH பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீ முதல் 220 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைக் காட்டிலும் அதிக ரேஞ்ஜ் திறன் ஆகும்.

இந்த மாடலை கோமகி நிறுவனம் நான்கு விதமான நிற தேர்வுகளில் வழங்க இருக்கின்றது. மெட்டல் கிரே, டிரான்ஸ்லூசென்ட் ப்ளூ, ஜெட் பிளாக் மற்றும் பிரைட் ரெட் ஆகிய வண்ண தேர்வுகளிலேயே கோமகி டிடி3000 கிடைக்கும்.

கோமகி எல்ஒய் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலேயே மிக சூப்பரான வசதியாக ஆன்டி ஸ்கிட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணத்தை வழங்கும் விதமாக இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் ஓர் முழுமையான சார்ஜில் 90 கிமீ ரேஞ்ஜை வழங்கக் கூடிய பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் இரு மின்சார ஸ்கூட்டர்களிலும் செல்ஃப்-டைக்னாஸிஸ் இன்ஸ்ட்ரூமென்ட், டிஸ்க் பிரேக், மொபைல் சார்ஜிங் பாயிண்ட், சத்தமே இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பம், ரிவர்ஸ் அசிஸ்ட், ரிமோட் லாக், டெலிஸ்கோபிக் ஷாக்கர், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

"இந்தியாவில் கோமகி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருப்பதாகவும், இந்த வரவேற்பைக் கூடுதலாக்கும் நோக்கத்தில் இவ்விரு புதிய தயாரிப்புகளை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக" கோமகி நிறுவனத்தின் இயக்கநர் கன்ஜன் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

கோமகி நிறுவனம் மிக சமீபத்தில் ரேஞ்ஜர் க்ரூஸர் ரக எலெக்ட்ரிக் பைக் மற்றும் வெனிஸ் கிளாசிக் ரக மின்சார ஸ்கூட்டரை மிக சமீபத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. கடந்த ஜனவரி மாதத்திலேயே இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகமும் அரங்கேறியது. இந்த நிலையில் தற்போது மேலும் இரு அதிக சிறப்பு வசதிகள் கொண்ட இ-வாகனங்களை அதன் விற்பனைக்கான வாகனங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
-
ஹீரோ, ஹோண்டா, யமஹா தயாரிப்புகள்... இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டர்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!
-
கூரையை பிச்சுகிட்டு புக்கிங் கொட்டுது! அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா? படம் காட்டும் ஹூண்டாய் கார்!
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் மின்சார கார்! அட இந்த காருக்கா இப்படி ஒருநிலைமை ஆகியிருக்கு?