வச்சான் பாரு ஓலாவிற்கு ஆப்பு! தீ பிடிக்காத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்போகும் கோமகி...

கோமகி நிறுவனம் தனது LiFePO4 பேட்டரி மூலம் வெனீஸ் எக்கோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்த முழு விபரங்களைக் கீழே காணுங்கள்.

வச்சான் பாரு ஓலாவிற்கு ஆப்பு . . . தீ பிடிக்காத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்போகும் கோமகி . . .

கோமகி நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் ஒரு முக்கியமான நிறுவனம் இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியா முழுவதும் 11 குறைந்த வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் 6 அதிக வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இந்நிறுவனம் பயணிகள் வாகனம் மட்டுமல்லாமல் சரக்குகளை ஏற்றிச் செல்லும் எலெக்டரிக் வாகனங்களைக் கூட தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

வச்சான் பாரு ஓலாவிற்கு ஆப்பு . . . தீ பிடிக்காத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்போகும் கோமகி . . .

இந்நிலையில் இந்த கோமகி நிறுவனம் தற்போது வெனீஸ் எக்கோ என்ற அதிக வேக எலெக்ரிக் ஸ்கூட்டரை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் என்பதால் அதிக வேக எலெக்டரிக் ஸ்கூட்டரை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான டீசரையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வச்சான் பாரு ஓலாவிற்கு ஆப்பு . . . தீ பிடிக்காத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்போகும் கோமகி . . .

அந்த டீசரில் பைக்கின் முழு அமைப்பைக் காட்டாமல் வெறும் இந்த பைக்கின் டச் ஸ்கிரீன் டிஸ்பிளேவை மட்டும் காட்டியுள்ளது. அதில் 6க்கு 4 இன்ச் அளவில் உள்ள 3ம் தலைமுறை டச் ஸ்கிரீன் இடம் பெற்றுள்ளது. இந்த டீசரில் ஒரு நிறத்தில் உள்ள ஸ்கூட்டர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. பொதுவாக கோமகி நிறுவனத்தின் அதிக வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பொருத்தவரை வெள்ளை மற்றும் நீல நிற ஷேட்களில் மட்டுமே கிடைத்து வந்தது.

வச்சான் பாரு ஓலாவிற்கு ஆப்பு . . . தீ பிடிக்காத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்போகும் கோமகி . . .

தற்போது கோமகி நிறுவனம் இந்த வெனீஸ் எக்கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மொத்தம் 7 நிறங்களில் விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இது போக இந்நிறுவனம் டீஸ் செய்துள்ள டிஎஃப்டி ஸ்கிரீன் நேவிகேஷனிற்கு சிறப்பாகச் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரில் மியூசிக் பிளேயரும் இடம் பெறும் எனத் தெரியவிக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் பாட்டுக் கேட்டுக்கொண்டே பயணிக்க முடியும்.

வச்சான் பாரு ஓலாவிற்கு ஆப்பு . . . தீ பிடிக்காத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்போகும் கோமகி . . .

இந்த கோமகி வெனீஸ் எக்கோ ஸ்கூட்டரை பொருத்தவரை லித்தியம் ஃபெர்ரோ பாஸ்பேட் என்ற பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியின் ரியல் டைம் அனலைசர் இந்த இந்நிறுவனம் டீஸ் செய்துள்ள டச் ஸ்கிரீனில் தெரியவரும். அதன்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வச்சான் பாரு ஓலாவிற்கு ஆப்பு . . . தீ பிடிக்காத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்போகும் கோமகி . . .

இந்த வெனீஸ் எக்கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் குன்ஞன் மல்கோத்ரா கூறும்போது : "கோமகி நிறுவனம் பசுமையான மாசு இல்லாத வாகனங்களைத் தயாரிப்பதில் தரமான தயாரிப்புகளை வழங்கும் நிறுவனம் என மக்கள் மத்தியில் பெயர் எடுத்துள்ளது. எங்கள் தயாரிப்புகள் அதிக திறன், அதிக பலம், சிறப்பான டிசைன் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவில் நீண்ட காலம் உழைக்கும் தயாரிப்புகளாகும். வெனீஸ் எக்கோ ஸ்கூட்டரும் இதில் முக்கிய பங்கை வகிக்கும். வாடிக்கையாளர்கள் பலர் விரும்பும் படி இதை வடிவமைத்துள்ளோம்" எனக் கூறினார்.

வச்சான் பாரு ஓலாவிற்கு ஆப்பு . . . தீ பிடிக்காத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்போகும் கோமகி . . .

இந்த வெனீஸ் எக்கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட லித்தியம் அயான் ஃபெர்ரோ பாஸ்பேட்(LiFePO4) பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இந்த பேட்டரி தீ பிடிக்காத தன்மை கொண்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. அந்த பேட்டரியை தான் இந்த வாகனத்தில் பயன்படுத்தியுள்ளது. இந்த பேட்டரியை தயாரிக்கும் போதே இந்த வாகனத்திற்கு இந்த பேட்டரி தான் பொருத்த வேண்டும் என அந்நிறுவனம் முடிவு செய்திருந்தது.

வச்சான் பாரு ஓலாவிற்கு ஆப்பு . . . தீ பிடிக்காத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்போகும் கோமகி . . .

தீப்பிடிக்காத தன்மைக்காக இந்த பேட்டரியில் பயன்படுத்தப்படும் செல்களின் எண்ணிக்கை 3ல் 1 பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பம் குறைவாகவே வெளியாகும். இது மட்டுமல்ல LiFePO4 ன் லைஃப் சைக்கிள் 2500-3000 என அந்நிறுவனம் தெரித்துள்ளது. இது சாதாரண நிக்கல், மேக்னீஸ், கோபால்ட் பேட்டரியின் லைஃப் சைக்கிள் வெறும் 800 தான்.

வச்சான் பாரு ஓலாவிற்கு ஆப்பு . . . தீ பிடிக்காத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்போகும் கோமகி . . .

இந்த பேட்டரியை தயாரிக்கும் போது அந்நிறுவமன் வெனீஸ் ஸ்கூட்டரில் இந்த பேட்டரி 300 கி.மீ வரை ரேஞ்ச் தரமு் என்றும், இந்நிறுவனம் அடுத்ததாகத் தயாரித்து வரும் SE மற்றும் TN95ஸ்கூட்டர்களில் 180 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என முன்னர் தெரிவித்திருந்தது.ஆனால் இந்த தகவல்கள் எல்லாம் இந்த ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ வெளியீடு நடக்கும்போதே உறுதியாகும்.

வச்சான் பாரு ஓலாவிற்கு ஆப்பு . . . தீ பிடிக்காத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்போகும் கோமகி . . .

தற்போது கோமகி நிறுவனம் இந்த வெனீஸ் எக்கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ79,999 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் உள்ள ஓலா எஸ்1, டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Komaki teased Venice eco e scooter with fireproof battery
Story first published: Tuesday, September 20, 2022, 15:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X