ஒவ்வொரு சார்ஜுக்கும் 1.8 முதல் 2யூனிட்டுகள் வரை மட்டுமே செலவாகும்! கோமகி வெனிஸ் ஈகோ இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

கோமகி அதன் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒவ்வொரு சார்ஜுக்கும் 1.8 முதல் 2 யூனிட்டுகள் வரை மட்டுமே செலவாகும்... சூப்பரான கோமகி வெனிஸ் ஈகோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்தியாவின் புகழ்பெற்ற மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கோமகி (Komaki), அதன் வெனிஸ் ஈகோ (VENICE ECO) எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே இந்த ஸ்கூட்டர் பற்றிய கணிசமான தகவல்கள் மற்றும் விலை பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு சார்ஜுக்கும் 1.8 முதல் 2 யூனிட்டுகள் வரை மட்டுமே செலவாகும்... சூப்பரான கோமகி வெனிஸ் ஈகோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

வெனிஸ் ஈகோ ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் இடம் பெற இருக்கும் டிஎஃப்டி திரை போன்ற முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலே வெளியிடப்பட்டது. இத்துடன், அது ரூ. 79 ஆயிரம் என்கிற விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாகவும் அப்போது அறிவிக்கப்பட்டது. இதுமாதிரியான அறிவிப்புகளைத் தொடர்ந்தே இன்று கோமகி வெனிஸ் ஈகோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

ஒவ்வொரு சார்ஜுக்கும் 1.8 முதல் 2 யூனிட்டுகள் வரை மட்டுமே செலவாகும்... சூப்பரான கோமகி வெனிஸ் ஈகோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இதன் வருகையால் இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எண்ணிக்கைக் கணிசமாக உயர்ந்துக் காணப்படுகின்றது. நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 7 நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. வெள்ளை மற்றும் நீல நிறங்களும் இந்த தேர்வில் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒவ்வொரு சார்ஜுக்கும் 1.8 முதல் 2 யூனிட்டுகள் வரை மட்டுமே செலவாகும்... சூப்பரான கோமகி வெனிஸ் ஈகோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் லித்தியம் ஃபெர்ரோ ஃபாஸ்பேட் (LiPO4) பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த பேட்டரியின் ரியல் டைமை அனலைஸ் செய்யக் கூடிய கருவியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் பெரிய டிஎஃப்டி திரை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த திரை 6.4 அங்குல மூன்றாம் தலைமுறை திரையாகும்.

ஒவ்வொரு சார்ஜுக்கும் 1.8 முதல் 2 யூனிட்டுகள் வரை மட்டுமே செலவாகும்... சூப்பரான கோமகி வெனிஸ் ஈகோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்த திரை மிக சிறந்த நேவிகேஷன் தகவலை வழங்கும். இதுமட்டுமின்றி, இதில் மியூசிக் பிளேயரும் கொடுக்கப்பட்டிருக்கும். இதுபோன்று பற்பல வசதிகள் அந்த திரையில் உண்டு என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை நிறுவனம் அதிக வேகத்தில் செல்லும் மின்சார ஸ்கூட்டர் என குறிப்பிடுகின்றது. ஆனால், இதன் வேக திறன் பற்றிய விபரம் வெளியாகவில்லை.

ஒவ்வொரு சார்ஜுக்கும் 1.8 முதல் 2 யூனிட்டுகள் வரை மட்டுமே செலவாகும்... சூப்பரான கோமகி வெனிஸ் ஈகோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

எங்களின் யூகத்தின்படி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 40 கிமீ அல்லது 60 கிமீ வரையிலான உச்ச வேகத்தைக் கொண்டிருக்கலாம் என தெரிகின்றது. நிறுவனம் ஏற்கனவே 11 குறைந்த வேக திறனை வெளியேற்றக் கூடிய மின்சார ஸ்கூட்டரையும், ஆறு உயர் வேக எலெக்ட்ரிக் டூ-வீலரையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு சார்ஜுக்கும் 1.8 முதல் 2 யூனிட்டுகள் வரை மட்டுமே செலவாகும்... சூப்பரான கோமகி வெனிஸ் ஈகோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இவற்றின் வரிசையிலேயே கோமகி வெனிஸ் ஈகோ விற்பனைக்கு இணைந்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் இதில் தீயை எதிர்க்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், வெனிஸ் ஈகோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்தில் சிக்காது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதன் வாயிலாக ரைடர்கள், அதாவது, வெனிஸ் ஈகோ உரிமையாளர்கள் எந்தவித அச்சமுமின்றி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்க முடியும்.

ஒவ்வொரு சார்ஜுக்கும் 1.8 முதல் 2 யூனிட்டுகள் வரை மட்டுமே செலவாகும்... சூப்பரான கோமகி வெனிஸ் ஈகோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

தீ விபத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பன்முக சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பன்முக தெர்மல் சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், செயலி இணைப்பு அம்சமும் வெனிஸ் ஈகோவில் வழங்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிமீ முதல் 100 கிமீ வரை பயணிக்க முடியும்.

ஒவ்வொரு சார்ஜுக்கும் 1.8 முதல் 2 யூனிட்டுகள் வரை மட்டுமே செலவாகும்... சூப்பரான கோமகி வெனிஸ் ஈகோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்கள் முதல் 4 மணி நேரங்கள் தேவைப்படும். அதேநேரத்தில் இதன் ஒவ்வொரு முழு சார்ஜுக்கும் 1.8 முதல் 2 யூனிட்டுகள் மட்டுமே செலவாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், அதிக பலன்மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என யூகிக்க முடிகின்று.

வெனிஸ் ஈகோ கார்னெட் ரெட் (garnet red), சேக்ரமென்டோ கிரீன் (sacramento green), ஜெட் பிளாக் (jet black), மெட்டாலிக் ப்ளூ (metallic blue), பிரைட் ஆரஞ்சு (bright orange) மற்றும் சில்வர் க்ரோம் (silver chrome) ஆகிய நிற தேர்வுகளிலேயே வெனிஸ் ஈகோ விற்பனைக்குக் கிடைக்கும்.

ஒவ்வொரு சார்ஜுக்கும் 1.8 முதல் 2 யூனிட்டுகள் வரை மட்டுமே செலவாகும்... சூப்பரான கோமகி வெனிஸ் ஈகோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கைத் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, 2019ம் ஆண்டிற்கு பின்னர் இந்தியாவில் புதுமுக மின் வாகனங்களின் வருகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் மின் வாகனங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் நல்வரவேற்பே காரணமாக. இந்த நிலையிலேயே அதி-வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரும்புபவர்களைக் கவரும் வகையில் வெனிஸ் ஈகோ விற்பனைக்குக் களமிறக்கியுள்ளது.

குறிப்பு: முதல் ஐந்து படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.

Most Read Articles

English summary
Komaki venice eco high speed electric scooter launched in india at rs 79000
Story first published: Monday, October 3, 2022, 19:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X