மணிக்கு 140கிமீ வேகத்தில் இயங்கும் கேடிஎம் எலக்ட்ரிக் பைக்!! சீனாவில் மெக்கானிக்குகள் அசத்தல்!

அதிகப்பட்சமாக மணிக்கு 140கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய வகையில் கேடிஎம் பைக் ஒன்று சீனாவில் மெக்கானிக்குகளால் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த கேடிஎம் பைக்கை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மணிக்கு 140கிமீ வேகத்தில் இயங்கும் கேடிஎம் எலக்ட்ரிக் பைக்!! சீனாவில் மெக்கானிக்குகள் அசத்தல்!

எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலிலும் குறிப்பாக எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. எலக்ட்ரிக் 2-வீலர்ஸில் ஸ்கூட்டர்களே அதிகளவில் தற்போதைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகினேறன.

மணிக்கு 140கிமீ வேகத்தில் இயங்கும் கேடிஎம் எலக்ட்ரிக் பைக்!! சீனாவில் மெக்கானிக்குகள் அசத்தல்!

எலக்ட்ரிக் பைக்குகளின், குறிப்பாக அதிசெயல்திறன்மிக்க எலக்ட்ரிக் பைக்குகளின் எண்ணிக்கை என்று பார்த்தால் இன்னும் குறைவாகவே உள்ளது. ஆனால் இங்கு ஒரு கேடிஎம் பைக் உரிமையாளர் தனது கேடிஎம் பைக்கை எலக்ட்ரிக் பைக்காக மாற்றியமைத்து கொண்டுள்ளார். இந்த எலக்ட்ரிக் பைக்கின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இதில் அதிகப்பட்சமாக 140kmph வேகத்தில் செல்லலாமாம்.

ஹோம்மேட் என்கிற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த பைக்கை பற்றிய வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். இந்த பைக்கில் இருந்து தயாரிப்பு நிறுவனம் பொருத்திய என்ஜின் நீக்கப்பட்டு அதே இடத்தில் அதற்கு மாற்றாக 4000-வாட் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பில் 5000mAh திறன் கொண்ட 3.7 வோல்ட் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பை கஸ்டமைஸ்ட் செய்தவர்கள் வரிசைப்படுத்தி உள்ளனர்.

மணிக்கு 140கிமீ வேகத்தில் இயங்கும் கேடிஎம் எலக்ட்ரிக் பைக்!! சீனாவில் மெக்கானிக்குகள் அசத்தல்!

பேட்டரி தொகுப்பு பைக்கிற்கு இடது பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப பைக்கின் சில பகுதிகளில் வயரிங் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பைக்கின் செயல்படுதிறனை ரைடர் ஜிபிஎஸ் செயலி வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இந்த செயல்திறன்மிக்க பைக் மணிக்கு 140கிமீ வேகத்தில் செல்லும் என இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் கூறப்பட்டாலும், மொபைலில் 121kmph தான் டாப்-ஸ்பீடாக காட்டப்படுகிறது.

மணிக்கு 140கிமீ வேகத்தில் இயங்கும் கேடிஎம் எலக்ட்ரிக் பைக்!! சீனாவில் மெக்கானிக்குகள் அசத்தல்!

இந்த கேடிஎம் எலக்ட்ரிக் பைக்கில் வெவ்வேறான மோட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மோடிலும் பைக் பெறும் இயக்க ஆற்றல் வேறுப்படுகிறது. ஈக்கோ மோடில் பைக் முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 130கிமீ தொலைவிற்கு சொல்லும். அதுவே ஸ்போர்ட் மோடில் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கும் ஆற்றல் அதிகரிப்பதால் பைக்கின் ரேஞ்ச் குறைக்கிறது. இந்த மோடில் 80கிமீ தொலைவிற்கு ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்து பயணிக்கலாம்.

மணிக்கு 140கிமீ வேகத்தில் இயங்கும் கேடிஎம் எலக்ட்ரிக் பைக்!! சீனாவில் மெக்கானிக்குகள் அசத்தல்!

மற்றப்படி இந்த மெக்கானிக்குகள் எவ்வாறு வழக்கமான கேடிஎம் பைக்கை எலக்ட்ரிக் பைக்காக மாற்றினார்கள் என்பது குறித்த விரிவான விபரங்கள் இல்லை. 2015இல் வாங்கப்பட்ட கேடிஎம் 200 ட்யூக் பைக்கில் இந்த மாடிஃபிகேஷன் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரையில் விற்பனையில் உள்ள எரிபொருள் என்ஜின் மோட்டார்சைக்கிள்களுக்கு நாட்டின் வெவ்வேறான பகுதிகளில் இவி மாற்று தொகுப்புகள் கிடைக்கின்றன.

மணிக்கு 140கிமீ வேகத்தில் இயங்கும் கேடிஎம் எலக்ட்ரிக் பைக்!! சீனாவில் மெக்கானிக்குகள் அசத்தல்!

நான்கு சக்கர வாகனங்களில் சில பழைய மாடல்களுக்கான இவி மாற்று தொகுப்புகளுக்கு கூட அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் இருசக்கர சந்தையில் எந்த இவி மாற்று தொகுப்பிற்கும் அரசாங்கத்தால் ARAI சான்றளிக்கப்படவில்லை. தற்போது கேடிஎம் 200 ட்யூக் பைக் மாற்றப்பட்டது போல் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரும் எலக்ட்ரிக் வாகனமாக வேறு சில மெக்கானிக்குகளால் மாற்றப்பட்டு இருந்தது.

மணிக்கு 140கிமீ வேகத்தில் இயங்கும் கேடிஎம் எலக்ட்ரிக் பைக்!! சீனாவில் மெக்கானிக்குகள் அசத்தல்!

ஆனால் உண்மையில் இத்தகைய கஸ்டமைஸ்டேஷன் மாற்றங்கள் இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பான்மையானவை ஆகும். இத்தகைய வாகனங்களை சாலையில் இயக்க அனுமதி இல்லை. வாகனத்தின் நிறத்தை மாற்றுவதை தவிர்த்து பைக்கில் வேறெந்த மாற்றத்தையும் அங்கரீக்கப்படாத கஸ்டமைஸ்ட் நிறுவனங்கள் மேற்கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதி கிடையாது. ஏனெனில் நாமாக நமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி கொள்ளும் வாகனங்களினால் எதிர்பாராத விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

மணிக்கு 140கிமீ வேகத்தில் இயங்கும் கேடிஎம் எலக்ட்ரிக் பைக்!! சீனாவில் மெக்கானிக்குகள் அசத்தல்!

இதனால் இத்தகைய மாடிஃபை எலக்ட்ரிக் பைக்குகளை சாலையில் போலீஸார் பார்த்தால் பறிமுதல் செய்வதற்கும் வாய்ப்புள்ளது. கணக்கச்சிதமாக பைக்கில் பொருத்தப்பட்டிருப்பதை வைத்து பார்த்தோமேயானால் சற்று விலைமிக்க பேட்டரி தொகுப்பே இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆதலால் பைக்கின் செயல்படுதிறன் அதிகமாக கிடைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மணிக்கு 140கிமீ வேகத்தில் இயங்கும் கேடிஎம் எலக்ட்ரிக் பைக்!! சீனாவில் மெக்கானிக்குகள் அசத்தல்!

வழக்கமான எரிபொருள் என்ஜின் 2-வீலர்ஸை காட்டிலும் எலக்ட்ரிக் 2-வீலர்ஸின் விலைகள் இந்திய சந்தையில் சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படுகின்றன. இன்னும் அதி செயல்திறன்மிக்க பேட்டரிகளையும், எலக்ட்ரிக் மோட்டார்களையும் பொருத்தினால் இருசக்கர வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும். இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு சில செயல்திறன்மிக்க மோட்டார்சைக்கிள்கள் வரிசைக்கட்டி நின்று உள்ளன. ஆனால் அவை விற்பனைக்கு வருவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம்.

Most Read Articles
English summary
Ktm duke motorcycle converted in to electric bike with conversion kit details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X