கேடிஎம் 250 பைக்குகளின் விற்பனையில் திடீர் முன்னேற்றம்!! 2022 250 அட்வென்ச்சரின் அறிமுகத்தினாலா?

இந்தியர்களின் ஃபேவரட்டாக விளங்கும் கேடிஎம் பிராண்டில் இருந்து கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம் 250 பைக்குகளின் விற்பனையில் திடீர் முன்னேற்றம்!! 2022 250 அட்வென்ச்சரின் அறிமுகத்தினாலா?

கேடிஎம் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை 2020 டிசம்பர் மாதத்துடனான ஒப்பிடுகையிலும், 2021 நவம்பர் மாதத்துடனான ஒப்பிடுகையிலும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 3,591 கேடிஎம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கேடிஎம் 250 பைக்குகளின் விற்பனையில் திடீர் முன்னேற்றம்!! 2022 250 அட்வென்ச்சரின் அறிமுகத்தினாலா?

அதுவே 2020 டிசம்பர் மாதத்தில் 5,595 கேடிஎம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் கேடிஎம் பைக்குகளின் விற்பனை வருடம்-வருடம் ஒப்பிடுகையில் கடந்த டிசம்பர் மாதத்தில் 35.82% குறைந்துள்ளது. அதேபோல் 2021 நவம்பர் மாதத்திலும் கடந்த மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 205 யூனிட்கள் அதிகமாக 3,796 கேடிஎம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கேடிஎம் 250 பைக்குகளின் விற்பனையில் திடீர் முன்னேற்றம்!! 2022 250 அட்வென்ச்சரின் அறிமுகத்தினாலா?

வழக்கம்போல் கடந்த மாதத்திலும் அதிகளவில் விற்பனையான கேடிஎம் பைக்குகளாக 200சிசி பைக்குகள் (200 ட்யூக், ஆர்சி200) விளங்குகின்றன. கடந்த மாதத்தில் மொத்தம் 1,535 கேடிஎம் 200சிசி பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த எண்ணிக்கை 2020 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 19.30% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 1,902 200சிசி கேடிஎம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கேடிஎம் 250 பைக்குகளின் விற்பனையில் திடீர் முன்னேற்றம்!! 2022 250 அட்வென்ச்சரின் அறிமுகத்தினாலா?

அதேபோல் 2021 நவம்பர் மாதத்தில் ஏறக்குறைய 1,900 200சிசி கேடிஎம் பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன. இதற்கடுத்து இரண்டாவது இடத்தில் 988 யூனிட்களின் விற்பனை உடன் 125சிசி (125 ட்யூக், ஆர்சி125) கேடிஎம் பைக்குகள் உள்ளன. ஆனால் 2020 டிசம்பரில் இதனை காட்டிலும் சுமார் 60.87% அதிகமாக 2,525 கேடிஎம் 125சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கேடிஎம் 250 பைக்குகளின் விற்பனையில் திடீர் முன்னேற்றம்!! 2022 250 அட்வென்ச்சரின் அறிமுகத்தினாலா?

இதன் மூலமாக அந்த மாதத்தில் 200சிசி கேடிஎம் பைக்குகளை காட்டிலும் 125சிசி கேடிஎம் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்ததை அறிய முடிகிறது. ஆனால் 2021 நவம்பரில் விற்கப்பட்ட 929 யூனிட்களை காட்டிலும் கடந்த டிசம்பர் மாதத்தில் 125சிசி கேடிஎம் பைக்குகள் 6.35% அதிகம் விற்கப்பட்டுள்ளன. 125சிசி பைக்குகளுக்கு அடுத்து, 250சிசி கேடிஎம் பைக்குகள் (250 ட்யூக், 250 அட்வென்ச்சர்) அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கேடிஎம் 250 பைக்குகளின் விற்பனையில் திடீர் முன்னேற்றம்!! 2022 250 அட்வென்ச்சரின் அறிமுகத்தினாலா?

கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் கேடிஎம் நிறுவனம் விற்பனை செய்த 250சிசி பைக்குகளின் எண்ணிக்கை 909 யூனிட்கள் ஆகும். ஆனால் உண்மையில் 250சிசி கேடிஎம் பைக்குகளின் விற்பனை 2020 டிசம்பர் மற்றும் 2021 நவம்பரை காட்டிலும் கடந்த டிசம்பர் மாதத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. ஏனெனில் 2020 டிசம்பரில் 774 250சிசி கேடிஎம் பைக்குகளும், 2021 நவம்பரில் 735 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கேடிஎம் 250 பைக்குகளின் விற்பனையில் திடீர் முன்னேற்றம்!! 2022 250 அட்வென்ச்சரின் அறிமுகத்தினாலா?

இதற்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2022 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கை முக்கிய காரணமாக சொல்லலாம். கேடிஎம் 390சிசி பைக்குகளின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 159 யூனிட்கள் ஆகும். ஆனால் 2020 டிசம்பர் மாதத்தில் இதனை காட்டிலும் 59.34% அதிகமாக 394 யூனிட்களும், 2021 நவம்பரில் 33.19% அதிகமாக 238 யூனிட்களும் கேடிஎம் 390சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன.

Rank KTM Domestic Dec-21 Dec-20 Growth (%)
1 200 1,535 1,902 -19.30
2 125 988 2,525 -60.87
3 250 909 774 17.44
4 390 159 394 -59.64
Total 3,591 5,595 -35.82
Rank KTM Exports Dec-21 Dec-20 Growth (%)
1 390 3,395 3,185 6.59
2 125 2,016 1,137 77.31
3 200 1,236 2,889 -57.22
4 250 967 800 20.88
Total 7,614 8,011 -4.96
கேடிஎம் 250 பைக்குகளின் விற்பனையில் திடீர் முன்னேற்றம்!! 2022 250 அட்வென்ச்சரின் அறிமுகத்தினாலா?

இந்தியாவில் கேடிஎம் பைக்குகள் புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கேடிஎம் பைக்குகள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த வகையில் கடந்த மாதத்தில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட கேடிஎம் பைக்காக 390 மாடல் விளங்குகிறது.

கேடிஎம் 250 பைக்குகளின் விற்பனையில் திடீர் முன்னேற்றம்!! 2022 250 அட்வென்ச்சரின் அறிமுகத்தினாலா?

கேடிஎம் 390சிசி பைக்குகள் (390 ட்யூக், 390 அட்வென்ச்சர் & ஆர்சி390) கடந்த மாதத்தில் மொத்தம் 3,395 யூனிட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து கேடிஎம் 125சிசி பைக்குகள் 2,016 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கேடிஎம் 200சிசி பைக்குகள் 1,236 யூனிட்களும், 250சிசி பைக்குகள் 967 யூனிட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் இருந்து உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதை காட்டிலும் வெளிநாட்டிற்கு அதிகளவில் கேடிஎம் பைக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதை அறிய முடிகிறது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM India Sales, Exports Dec 2021 – Duke, RC 125, 200, 250, 390 ADV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X