புதுசா ஸ்கூட்டர் வாங்கப்போகிறீர்களா? இதுல ஒன்ன வாங்கி போடுங்க... உங்க காசு எல்லாம் மிச்சமாகும்!

இன்று பெட்ரோல் விற்கும் விலைக்குப் பலருக்கு நல்ல மைலேஜ் தரும் வாகனங்கள் தான் தேவை. பலருக்கு நல்ல மைலேஜ் தரும் பைக் எது என்ற விபரம் எல்லாம் தெரியும். ஆனால் ஸ்கூட்டர்களில் எந்த ஸ்கூட்டர் நல்ல மைலேஜ் தரும் என்று பலருக்கும் தெரியாது. சிலர் பெரும்பாலும் ஸ்கூட்டர்கள் எல்லாம் ஒரே மாதிரியான மைலேஜை தான் தரும் எனத் தப்புக் கணக்கு போட்டு வருகின்றனர். ஆனால் ஸ்கூட்டர்களிலும் சிறந்த மைலேஜ் கொண்ட ஸ்கூட்டர்கள் இருக்கிறது. நல்ல மைலேஜ் தரும் ஸ்கூட்டர்களை இங்கே காணலாம்

யமஹா ஃபேசினோ ஹைபிரிட் 125 (Yamaha Fascino Hybrid 125)

யமஹா நிறுவனத்தின் மைல்டு-ஹைபிரிட் ஸ்கூட்டர் இது. இந்த ஸ்கூட்டர் தான் 125 சிசி ஸ்கூட்டர்களிலேயே அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டராக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 125 சிசி ஏர் கூல்டுஇன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.2 பிஎஸ் பவரையும் 10.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 68.75 கி.மீ மைலேஜை கொடுக்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் ரூ76,600 முதல் 87830 வரையிலான விலையில் விற்பனையாகிறது.

புதுசா ஸ்கூட்டர் வாங்கப்போகிறீர்களா? இதுல ஒன்ன வாங்கி போடுங்க... உங்க காசு எல்லாம் மிச்சமாகும்!

யமஹா ரே இசட் ஆர் 125 (Yamaha RayZR 125)

இந்த யமஹா ரே இசட் ஆர் 125 ஸ்கூட்டரிலும் ஃபேஷினோ ஸ்கூட்டரில் உள்ள அதே 125 சிசி மைல்டு ஹைபிரிட் இன்ஜின் தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் மொத்தம் டிஸ்க், டிரம், டிஎல்எக்ஸ், மோட்டோ ஜிபி என மொத்தம் 5 வேரியன்ட்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 66 கி.மீ மைலேஜை கொடுக்கிறது. இது ஃபேஷினோ ஸ்கூட்டரை விட சற்று குறைவு தான். இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் ரூ80,730 முதல் ரூ90,130 வரையிலான விலையில் விற்பனையாகிறது.

சுஸூகி ஆக்ஸஸ் 125 (Suzuki Access 125)

சுஸூகி நிறுவனத்தின் ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில் 124 சிசி, ப்யூயல் இன்ஜெக்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் மொத்தம் 3 விதமான வேரியன்ட்கள் இருக்கிறது. ஸ்டாண்டர்டு, ஸ்பெஷல் எடிசன் மற்றும் ரைடு கனெக்டெட் எடிசன் ஆகிய 3 வேரியன்ட்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 64 கி.மீ வரை மைலேஜ் தரும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் ரூ77,600 முதல் ரூ87,200 வரையிலான விலையில் விற்பனையாகிறது.

டிவிஎஸ் ஜூபிட்டர் (TVS Jupiter)

டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூபிட்டர் ஸ்கூட்டர் மிகவும் பிரபலமானது. இதுவும் டாப் 5 ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருகு்கிறது. இந்த ஸ்கூட்டரில் 110 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் இன்டெலிகோ ஐடியல் ஸ்டார்ட்/ ஸ்டாப் அம்சம் இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 62 கி.மீ மைலேஜை கொடுக்கும். இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் ரூ70 ஆயிரம் முதல் 85ஆயிரம் என்ற விலையில் விற்பனையாகிறது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி (Honda Activa 6G)

இந்த ஸ்கூட்டர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர், இதில் 109.51 சிசி கொண்ட சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ப்யூயல் இன்ஜெக்டரும் உள்ளது. இது அதிகபட்சமாக 7.79 பிஎஸ் பவரையும், 8.84 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இது ஒரு லிட்டருக்கு அதிகபட்சமாக 60 கி.மீ வரை மைலேஜை கொடுக்கும். இந்த ஸ்கூட்டரில் ஸ்டாண்டர்ட்,டிஎல்எக்ஸ் மற்ம் பிரிமியம் ஆகிய வெர்ஷன்கள் உள்ளன. இது மார்கெட்டில் ரூ73,086 முதல் ரூ76,587 என்ற விலையில் விற்பனையாகிறது.

இந்த பட்டியில் இருப்பது அதிக மைலேஜ் தரும் டாப் 5 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் தான். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்த பட்டியலில் இல்லை. இதை விட அதிக ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மார்கெட்டில் விற்பனையாகின்றன. பெட்ரோல் ஸ்கூட்டர்களில் அதிக மைலேஜ் கொண்ட ஸ்கூட்டர்கள் இது தான். இந்த ஸ்கூட்டரில் உங்களுக்கு பிடித்த ஸ்கூட்டர் எது? எந்த ஸ்கூட்டரை நீங்கள் வாங்க விரும்புவீர்கள்? இது குறித்த உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
English summary
List of best mileage petrol scooters in India
Story first published: Thursday, December 1, 2022, 17:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X