ஒட்டுமொத்த இந்தியாவுமே வெயிட் பண்ணுது.. நீங்க எப்படி இந்த எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக காத்திருக்க போறீங்களா?

இந்திய மின் வாகன சந்தையை அலங்கரிக்கும் விதமாக சில முன்னணி நிறுவங்கள் அதன் புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்க உள்ளன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மின்சார பைக் என பல இந்தியாவில் களமிறங்க காத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியர்கள் மத்தியில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர், ஹீரோ எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் கடந்த மாத விற்பனையில் சூப்பரான வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. இந்த மாதிரியான சூழல் நாட்டில் நிலவிக் கொண்டிருப்பதே இவ்வாறு மின்சார வாகனங்கள் வரிசைக் கட்டிக் கொண்டு காத்திருக்க காரணமாக இருக்கின்றது. அந்தவகையில் இந்திய மின் வாகன சந்தையில் களமிறங்குவதற்காக காத்துகிடக்கும் சில முன்னணி பிராண்டுகளின் எலெக்ட்ரிக் டூ-வீலர்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சிம்பிள் ஒன்:

இந்தியாவில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் சிம்பில் ஒன்-ம் ஒன்று. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மிகவும் அதிக தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த வாகனமாக தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், அதிக நவீன வசதிகளைக் கொண்டதாக சிம்பிள் ஒன் காட்சியளிக்கின்றது. ஏற்கனவே இந்த வாகனத்திற்கான புக்கிங் பணிகளை தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தொடங்கிவிட்டது. இருப்பினும், சில குறிப்பிட்ட காரணங்களுக்காக இதன் டெலிவரி பணிகள் இழுத்தடிப்பு செய்யப்பட்ட வண்ணம் உள்ளது. இந்த நிலையிலேயே சமீபத்திய தகவல்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக வெளியாகியுள்ளன.

ஆம், 2023 ஜனவரியில் இந்த பணிகள் தொடங்கப்படும். இந்த முறை கால நீட்டிப்பு செய்யப்படாமல் சிம்பிள் ஒன்-இன் டெலிவரி பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாக தயாரித்திருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 200க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜை தரும். இதற்காக 4.8 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு முக்கிய தகவல்களை வழங்கக் கூடிய 7.0 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஓலா எலெக்ட்ரிக் பைக்:

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் உருவெடுத்துள்ளது. தற்போது நிறுவனத்தின் சக்சஸ்ஃபுல் இருசக்கர வாகனமாக ஓலா எஸ்1 ப்ரோ இருக்கின்றது. இவற்றுடன், எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையிலேயே நிறுவனம் புதுமுக எலெக்ட்ரிக் பைக் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

நாடு முழுவதும் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படும் நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியர்களின் கவனத்தைக் கூடுதலாக கவரும் பொருட்டு புதிதாக எலெக்ட்ரிக் பைக்கையும் அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது. இந்த பைக் தற்போது விற்பனையில் இருக்கும் ஓலா பிற தயாரிப்புகளைக் காட்டிலும் அதிக ரேஞ்ஜ் மற்றும் பன்முக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், என்ன மாதிரியான சிறப்பு வசதிகளுடன் இது விற்பனைக்கு வரும் என்பதை ஓலா நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:

பஜாஜ் நிறுவனத்துடனான கூட்டு முயற்சியில் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிறுவனத்தின் கூட்டணியிலேயே ஹஸ்க்வர்னா விரைவில் அதிக பிரீமியம் வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக ஸ்போர்ட்டியான தோற்றம் மற்றும் ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு சிறப்பம்சங்களுடன் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5.5 kWh பேட்டரி பேக் மற்றும் அதிக சக்தி வாய்ந்த 10 kW மின் மோட்டார் ஆகியவை எலெக்டரிக் ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

யமஹா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக யமஹா விளங்கிக் கொண்டிருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி நிறுவனத்தின்கீழ் ஒரு எலெக்ட்ரிக் வாகனம்கூட விற்பனைக்குக் கிடைக்காத நிலையே தென்படுகின்றது. இதையே நிறுவனம் விரைவில் மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளது. ஆமாங்க, சீக்கிரமே இந்திய மின் வாகன சந்தையை அலங்கரிக்கும் விதமாக யமாஹ ஓர் புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இதற்கான பணியில் நிறுவனம் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. தனது எதிர்கால எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சோதனை ஓட்டத்தை நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டது. ஆகையால், எப்போது வேண்டுமானால் இந்த நிறுவனத்தின் மின்சார வாகனம் வெளியீட்டைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுவரை இதன் வருகை பற்றிய குட்டி தகவலைகூட யமஹா நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், இதன் வருகையை நோக்கி இந்தியர்கள் பெருத்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:

யமஹாவை போலவே நாட்டின் மின்சார இருசக்கர வாகன பிரிவை அலங்கரிக்க காத்துக் கொண்டிருக்கும் முன்னணி நிறுவனங்களில் ஹோண்டாவும் ஒன்று. இந்த நிறுவனத்தின் தற்போதையே தயாரிப்புகளான ஆக்டிவா, டியோ, ஷைன் போன்ற டூ-வீலர் மாடல்களுக்கு இந்தியாவில் அமோகமான வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இதேபோல், அதன் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்திற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் விளைவாக விரைவில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய நிறுவனம் ஆயத்தமாகியுள்ளது. எனவே, ஹோண்டாவின் மின்சார வாகனம் அடுத்த ஆண்டின் மத்திக்குள் வெளியீட்டைப் பெற்று விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பென்லீ எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
List of e twowheelers expected soon in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X