லிக்யூடு கூல்டு மோட்டாரில் எலெக்ட்ரிக் டூ-வீலரா!.. நவம்பர் மாசம் லான்ச் செய்ய இந்திய நிறுவனம் திட்டம்!

லிக்யூடு கூல்டு மோட்டார் மற்றும் டூயல் மோட் கன்வெர்டர் சார்ஜர் ஆகிய அம்சங்களுடன் தனது எலெக்ட்ரிக் டூ-வீலரை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக புதுமுக மின் வாகன உற்பத்தி நிறுவனம் மேட்டர் (Matter) அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

லிக்யூடு கூல்டு மோட்டாரில் எலெக்ட்ரிக் டூ-வீலரா!.. நவம்பர் மாசம் லான்ச் செய்ய இந்திய நிறுவனம் திட்டம்... கூடுதல் விபரங்கள் இதோ!

இந்தியாவில் புதுமுக மின் வாகனங்களின் அறிமுகம் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. உலகெங்கிலும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்திருப்பதனால், சில புதுமுக நிறுவனங்களும் மின் வாகன உற்பத்தியில் களமிறங்கியிருக்கின்றன. இதன் விளைவாக புதுமுக மின் வாகனங்களின் அறிமுகத்திற்கு நாட்டில் பஞ்சமின்றி காணப்படுகின்றது.

இந்த நிலையில், மேட்டர் எனும் புதுமுக நிறுவனம் இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கான அதன் புதிய தொழில்நுட்பத்தை வெளியீடு செய்திருக்கின்றது. அஹமதாபாத் ஐஐஎம் வளாகத்தில் உள்ள கேபிடல் இன்குபேஷன் இன்சைட்ஸ் எவ்ரிதிங் (CIIE.Co)-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலேயே இந்த வெளியீட்டை நிறுவனம் நிகழ்த்தியது.

லிக்யூடு கூல்டு மோட்டாரில் எலெக்ட்ரிக் டூ-வீலரா!.. நவம்பர் மாசம் லான்ச் செய்ய இந்திய நிறுவனம் திட்டம்... கூடுதல் விபரங்கள் இதோ!

காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதுமுக தொழில்நுட்பத்தையே தனது வரவிருக்கும் மின்சார வாகனங்களில் மேட்டர் நிறுவனம் பயன்படுத்த இருக்கின்றது. இந்நிறுவனம் நடப்பாண்டின் நவம்பரில் ஓர் புதுமுக மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனத்திற்கான தொழில்நுட்பமே தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இருசக்கர வாகனம் தனித்துவமான வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேட்டர் நிறுவனம் ஏறதாழ இந்தியாவில் மூன்றாண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மூன்று ஆண்டுகளில் டிரைவ்டிரெயின், எலெக்ட்ரானிக் பொருட்கள், பேட்டரி சிஸ்டம், சார்ஜர்கள் மற்றும் இணைப்பு வசதிக்கான கருவிகள் உள்ளிட்டவற்றின் தயாரிப்புகளில் ஈடுபட்டிருக்கின்றது.

லிக்யூடு கூல்டு மோட்டாரில் எலெக்ட்ரிக் டூ-வீலரா!.. நவம்பர் மாசம் லான்ச் செய்ய இந்திய நிறுவனம் திட்டம்... கூடுதல் விபரங்கள் இதோ!

அந்தவகையில், அது உருவாக்கியிருக்கும் பலதரப்பட்ட பொருட்களுக்கு மேட்டர் நிறுவனம் காப்புரிமை பெற்றிருக்கின்றது. இதுவரை நிறுவனம் 100க்கும் அதிகமான ஐபி-க்களை உருவாக்கியிருக்கின்றது. இதில், 35க்கும் மேற்பட்டவற்றிற்கு பேடண்ட் விண்ணப்பம் போடப்பட்டிருக்கின்றது. 15 க்கும் மேற்பட்டவை இன்ஸ்டஸ்ட்ரியல் துறைக்கானது ஆகும். மேலும், 60க்கும் மேற்பட்டவற்றிற்கு டிரேட்மார்க்கும் செய்யப்பட்டிருக்கின்றது.

நிறுவனம் தற்போது மேட்டர் டிரைவ் 1.0 (லிக்யூடு கூல்டு மோட்டார்) மற்றும் மேட்டர் சார்ஜ் (டூயல் மோட் கன்வெர்டர்) ஆகியவற்றிற்கான பேடண்டையும் பெற்றிருக்கின்றது. மேட்டர் டிரைவ் 1.0 என்பது ஒரு ரேடியல் ஃப்ளக்ஸ் மோட்டார் ஆகும். இதனையே தனது முதல் மின்சார இருசக்கர வாகனத்தில் மேட்டர் நிறுவனம் பயன்படுத்த இருக்கின்றது.

லிக்யூடு கூல்டு மோட்டாரில் எலெக்ட்ரிக் டூ-வீலரா!.. நவம்பர் மாசம் லான்ச் செய்ய இந்திய நிறுவனம் திட்டம்... கூடுதல் விபரங்கள் இதோ!

இது அதிக டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் இயக்கத்தின்போது ஏற்படும் வெப்பத்தை குளிரூட்ட திரவ கூலிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் மின்சார மோட்டாரின் பல கூறுகளை ஒரே சமயத்தில் குளிரூட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், மிக வேகமாக வெப்பம் வெளியேற்றப்படும். எனவே வெப்பத்தால் ஏற்படும் சிக்கல்கள் முற்றிலும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, தீ விபத்து போன்றவை ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகின்றது.

லிக்யூடு கூல்டு மோட்டாரில் எலெக்ட்ரிக் டூ-வீலரா!.. நவம்பர் மாசம் லான்ச் செய்ய இந்திய நிறுவனம் திட்டம்... கூடுதல் விபரங்கள் இதோ!

மேட்டர் சார்ஜ், இது சார்ஜிங் தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பம் மின்சார வாகனனத்தை சிங்கிள் ஃபேஸ் அல்லது த்ரீ ஃபேஸ் என அனைத்து விதமான சார்ஜிங் போர்ட்டிலும் சார்ஜ் செய்து கொள்ள உதவியாக இருக்கும். இதன் எடையும் மிகக் குறைவாக இருக்கும் என கூறப்படுகின்றது. ஆகையால், மின் மோட்டாரின் திறனும், ரேஞ்ஜும் எந்தவகையிலும் பாதிக்காது.

லிக்யூடு கூல்டு மோட்டாரில் எலெக்ட்ரிக் டூ-வீலரா!.. நவம்பர் மாசம் லான்ச் செய்ய இந்திய நிறுவனம் திட்டம்... கூடுதல் விபரங்கள் இதோ!

ஆகையால், நிறுவனத்திடம் மிகவும் உறுதியான உற்பத்தி பிளான் இருப்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்த நிலையிலேயே நிறுவனம் அதன் தொழில்நுட்பங்களை தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. தனது பிராண்டின் சின்னத்தையும் அது வெளியிட்டிருக்கின்றது. விரைவில் அதன் முதல் தயாரிப்பையும் அது வெளியீடு செய்ய உள்ளது.v

Most Read Articles
v
English summary
Matter displayed its upcoming electric motorcycle s technology and innovations launch in november
Story first published: Thursday, September 29, 2022, 18:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X