ராயல் என்பீல்டு பைக் மாதிரி ஒத்த சீட்ல ஓட்டலாம்... சூப்பரான ஸ்டைலில் மொப்-அயான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஃபிரான்ஸ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் மொப்-அயான் நிறுவனம் அதன் ஏஎம்1 எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ராயல் என்பீல்டு பைக் மாதிரி ஒத்த சீட்ல ஓட்டலாம்... சூப்பரான ஸ்டைலில் மொப்-அயான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்தியாவின் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தைப் போல, ஃபிரெஞ்சு நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனம் மொப்-அயான் (Mob-ion). மின் வாகன சந்தையில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அந்நாட்டில் மொப்-அயான்உருவாக்கியிருக்கின்றது.

ராயல் என்பீல்டு பைக் மாதிரி ஒத்த சீட்ல ஓட்டலாம்... சூப்பரான ஸ்டைலில் மொப்-அயான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இதன் விளைவாக நிறுவனம் பற்றிய செய்திகள் அந்நாட்டின் ஊடகங்களில் அவ்வப்போது இடம் பெறுவதுண்டு. நிறுவனத்தின் புதுமுக தயாரிப்புகள் நிறுவனத்தை அடிக்கடி செய்தியில் இடம் பிடிக்க வைத்து விடுகின்றன. அந்தவகையில், நிறுவனத்தின் புதுமுக தயாரிப்பு ஒன்று ஃபிரெஞ்சு நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் தலை செய்தியில் இடம் பிடிக்க செய்திருக்கின்றது.

ராயல் என்பீல்டு பைக் மாதிரி ஒத்த சீட்ல ஓட்டலாம்... சூப்பரான ஸ்டைலில் மொப்-அயான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஏஎம்1 எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே இதற்கு காரணம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் உலகளவில் வெளியீடு செய்திருக்கின்று. ஆகையால், இம்முறை உலக செய்தியாக நிறுவனத்தின் தயாரிப்பு மாறியிருக்கின்றது. ஏஎம்1 மின்சார ஸ்கூட்டர்குறித்த தகவல் உலகளவில் பரவ, அதன் அட்டகாசமான தோற்றம், அதி நவீன சிறப்பு வசதிகளும் முக்கிய கராணங்களாக இருக்கின்றன.

ராயல் என்பீல்டு பைக் மாதிரி ஒத்த சீட்ல ஓட்டலாம்... சூப்பரான ஸ்டைலில் மொப்-அயான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

முதல் முழுமையான பிரான்ஸ் நாட்டு தயாரிப்பாக ஏஎம்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன் அந்நாட்டின் மிக முக்கியமான அங்கீகாரங்களில் ஒன்றான ஏஎஃப்என்ஓஆர்-இன் சான்றும் கிடைத்திருக்கின்றது. இந்த சான்றை பெறுவது அவ்வளவு சுலபமானது அல்ல என்கிறது ஃபிரான்ஸ் நாட்டு வாகன உலகம்.

ராயல் என்பீல்டு பைக் மாதிரி ஒத்த சீட்ல ஓட்டலாம்... சூப்பரான ஸ்டைலில் மொப்-அயான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

குறிப்பாக, 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஃபிரான்ஸ் தயாரிப்பு பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் வாகனங்களுக்கே இந்த சான்று வழங்கப்படும். அந்தவகையில், ஏஎம்1 முழுக்க முழுக்க மேட்-இன்-பிரான்ஸ் வாகனமாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த சிறப்பு தகுதியுடன் அந்நாட்டில் விற்பனைக்கு வரும் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவே ஆகும்.

ராயல் என்பீல்டு பைக் மாதிரி ஒத்த சீட்ல ஓட்டலாம்... சூப்பரான ஸ்டைலில் மொப்-அயான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஆகையால், ஃபிரான்ஸ் நாட்டு மக்களின் கவனத்தை இந்த வாகனம் வெகுவாக ஈர்க்க தொடங்கியிருக்கின்றது. அதேநேரத்தில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தொழில்நுட்ப வசதிகள் தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றன. 3 கிலோவாட் திறன் வெளியேற்றம் திறன் கொண்ட பிரஷ்லெஸ் எலெக்ட்ரிக் மோட்டார், இரு கழட்டி-மாட்டக் கூடிய பேட்டரிகள் ஆகியவை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ராயல் என்பீல்டு பைக் மாதிரி ஒத்த சீட்ல ஓட்டலாம்... சூப்பரான ஸ்டைலில் மொப்-அயான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த பேட்டரிகள் இருக்கைக்கு அடியில் இடம் பெறும் வகையிலேயே ஏஎம்1 வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக சார்ஜில் 140 கிமீ வரை ரேஞ்ஜ் வழங்கும். அதேநேரத்தில் பேட்டரியை முழு சார்ஜை செய்ய வேண்டுமானால் 2.30 மணி நேரங்கள் வரை தேவைப்படும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 45 கிமீ என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்பீல்டு பைக் மாதிரி ஒத்த சீட்ல ஓட்டலாம்... சூப்பரான ஸ்டைலில் மொப்-அயான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

மொப்-அயான் ஏஎம்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், ஜிபிஎஸ், ரிவர்ஸ் கியர், ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் (திருட்டை தவிர்க்க உதவும்), ரிமோட் வாயிலாக ஸ்கூட்டரை ஆஃப் செய்யும் வசதி (செல்ஃபோன், கணினி எதை வேண்டுமானாலும் ரிமோட்டாக பயன்படுத்தி ஆஃப் செய்யலாம், திருட்டை தவிர்க்க மிகுந்த உதவியாக இருக்கும்), டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ராயல் என்பீல்டு பைக் மாதிரி ஒத்த சீட்ல ஓட்டலாம்... சூப்பரான ஸ்டைலில் மொப்-அயான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகபட்சமாக 260 கிலோ வரை ஏற்றி செல்ல முடியம். இந்த ஸ்கூட்டரை மொப்-அயான் நிறுவனம் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஒற்றை இருக்கை அல்லது இரட்டை இருக்கை என இரு விதமான தேர்வுகளிலேயே வழங்க இருக்கின்றது. இதில், ஒற்றை இருக்கை தேர்வானது பார்சல் சர்வீஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் டெலிவரி போன்று வர்த்தக ரீதியாக பயன்படும் நோக்கில் விற்பனைக்கு வழங்கப்படும்.

ராயல் என்பீல்டு பைக் மாதிரி ஒத்த சீட்ல ஓட்டலாம்... சூப்பரான ஸ்டைலில் மொப்-அயான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இதன் இரட்டை இருக்கை தேர்வு வழக்கம் பயணிகள் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும். சிறப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் அதிகம் என்பதால் இதன் விலை சற்றே அதிகமானதாக காட்சியளிக்கின்றது. 3,582 யூரோக்களுக்கு விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ராயல் என்பீல்டு பைக் மாதிரி ஒத்த சீட்ல ஓட்டலாம்... சூப்பரான ஸ்டைலில் மொப்-அயான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 3.04 லட்சம் ஆகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டர்களைக் காட்டிலும் பல மடங்கு அதிக விலைக் கொண்டதாக இது காட்சியளிக்கின்றது. நம் நாட்டில் சமீப சில காலமாக மின்சார இருசக்கர வாகனங்களுக்கான தேவை பன் மடங்கு அதிகரித்து காணப்படுகின்றது.

ராயல் என்பீல்டு பைக் மாதிரி ஒத்த சீட்ல ஓட்டலாம்... சூப்பரான ஸ்டைலில் மொப்-அயான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இதேநிலைதான் உலகின் பல்வேறு நாடுகளிலும் நிலவுகின்றது. இதன் விளைவாகவே ஏஎம்1 போன்ற அதி-நவீன வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வெளியீடு அவ்வப்போது உலக சந்தையில் அரங்கேறி வருகின்றது. மொப்-அயான் ஓர் சூப்பர் வசதிக் கொண்ட கிளாசிக் ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். ஆகையால், இதற்கு அந்நாட்டின் எல்1இ சான்றும் கிடைத்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Mob ion am1 electric scooter unveiled gloablly
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X