ஹீரோ, ஹோண்டா, யமஹா தயாரிப்புகள்... இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டர்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் 125 சிசி ஸ்கூட்டர்களின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹீரோ, ஹோண்டா, யமஹா தயாரிப்புகள்... இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டர்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!

இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தையில் 110 சிசி ஸ்கூட்டர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இருப்பினும் 125 சிசி ஸ்கூட்டர்களும் தற்போது வேகமாக பிரபமடைந்து வருகின்றன. கடந்த சில வருடங்களில் இந்திய சந்தையில் பல்வேறு இரு சக்கர வாகன நிறுவனங்களால் ஏராளமான 125 சிசி ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஹீரோ, ஹோண்டா, யமஹா தயாரிப்புகள்... இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டர்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!

110 சிசி ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, 125 சிசி ஸ்கூட்டர்கள் சற்று வல்லமை மிக்கவை. 125 சிசி ஸ்கூட்டர்களில் வாடிக்கையாளர்களுக்கு சற்று கூடுதல் பவர் கிடைப்பதுடன், ஏராளமான வசதிகளும் கிடைக்கின்றன. ஆனால் 125 சிசி ஸ்கூட்டர்களின் விலை மிகவும் அதிகம் என பலர் தவிர்த்து விடுகின்றனர். அவர்களுக்காகவே இந்த செய்தி.

ஹீரோ, ஹோண்டா, யமஹா தயாரிப்புகள்... இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டர்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 125 சிசி ஸ்கூட்டர்கள் (Most Affordable 125 CC Scooters) பற்றிய தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். நீங்கள் புதியதாக ஸ்கூட்டர் வாங்குவதற்கு முடிவு செய்திருந்தால், இந்த தகவல்கள் உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

ஹீரோ, ஹோண்டா, யமஹா தயாரிப்புகள்... இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டர்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!

யமஹா ஃபஸினோ 125 Fi (Yamaha Fascino 125 Fi)

யமஹா ஃபஸினோ 125 Fi ஸ்கூட்டரில், 125 சிசி, ஏர்-கூல்டு, 4-ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8.2 பிஎஸ் பவரையும், 10.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. தற்போதைய நிலையில் யமஹா ஃபஸினோ 125 Fi ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 76,100 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டின் விலை 85,630 ரூபாயாக இருக்கிறது.

ஹீரோ, ஹோண்டா, யமஹா தயாரிப்புகள்... இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டர்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!

இவையும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் யமஹா ஃபஸினோ 125 Fi ஸ்கூட்டர் 9 வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது. ட்ரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டு வகையான பிரேக் மாடல்களிலும் ஃபஸினோ 125 Fi ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

ஹீரோ, ஹோண்டா, யமஹா தயாரிப்புகள்... இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டர்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 (Hero Maestro Edge 125)

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 75,450 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டின் விலை 84,320 ரூபாயாக இருக்கிறது. இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டுமே டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஹீரோ, ஹோண்டா, யமஹா தயாரிப்புகள்... இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டர்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!

இதில், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் போன்ற வசதிகள் குறிப்பிடத்தக்கவை. ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின்தான் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்க விஷயம் ஆகும். (பின்வரும் ஸ்லைடர்களில் ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரின் விபரங்களை அறியலாம்).

ஹீரோ, ஹோண்டா, யமஹா தயாரிப்புகள்... இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டர்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!

ஹோண்டா ஆக்டிவா 125 (Honda Activa 125)

இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் 125 சிசி ஸ்கூட்டர்களில் ஒன்றாக ஹோண்டா ஆக்டிவா 125 திகழ்கிறது. இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 74,989 ரூபாய் மட்டுமே. இது ட்ரம் வேரியண்ட்டின் விலையாகும். அதே நேரத்தில் இந்த ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டின் விலை 82,162 ரூபாயாக உள்ளது. இது ஆக்டிவா 125 டிஸ்க் வேரியண்ட்டின் விலையாகும். இவை டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ, ஹோண்டா, யமஹா தயாரிப்புகள்... இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டர்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் முன் பகுதியில் க்ளவ் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் எல்இடி ஹெட்லேம்ப் உள்பட பல்வேறு வசதிகளையும் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரில், 123.97 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6.10 kW பவரையும், 10.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ஹீரோ, ஹோண்டா, யமஹா தயாரிப்புகள்... இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டர்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!

ஹீரோ டெஸ்ட்டினி 125 (Hero Destini 125)

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் மலிவான 125 சிசி ஸ்கூட்டர் என்ற பெருமையை ஹீரோ டெஸ்ட்டினி 125 தன்வசம் வைத்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை வெறும் 70,400 ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இந்த ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டின் விலை 75,900 ரூபாயாக உள்ளது. இவை டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஹீரோ, ஹோண்டா, யமஹா தயாரிப்புகள்... இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டர்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!

ஹீரோ டெஸ்ட்டினி 125 சிசி ஸ்கூட்டரில், 124.6 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9 பிஎஸ் பவரையும், 10.4 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மிகவும் குறைவான விலையில் புதிய 125 சிசி ஸ்கூட்டரை எதிர்பார்ப்பவர்களுக்கு ஹீரோ டெஸ்ட்டினி 125 மிகச்சிறந்த தேர்வாக இருக்கலாம்.

Most Read Articles

English summary
Most affordable 125 cc scooters in india
Story first published: Thursday, June 23, 2022, 18:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X