Just In
- 34 min ago
இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்.. நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க!
- 12 hrs ago
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- 13 hrs ago
அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய ஸ்கார்பியோ காரின் அறிமுகம் எப்போது? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
- 15 hrs ago
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
Don't Miss!
- News
மேளங்கள் முழங்க.. பல்லக்கில் வெற்றிகரமாக பவனி வந்த தருமபுரம் ஆதீனம்.. எந்த எதிர்ப்பும் இல்லை!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Movies
கேன்ஸ் திரைப்பட விழா : மோடியை பாராட்டிய மாதவன்… எதுக்குனு தெரியுமா ?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெட்ரோல் பைக்கை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றலாம்... எவ்ளோ செலவு ஆகும்னு தெரிஞ்சா இப்பவே மாத்த ஆசைப்படுவீங்க!
ஒரு முறை சார்ஜ் செய்தால் 151 கிலோ மீட்டர் பயணிக்கும் எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நமது எதிர்கால போக்குவரத்து, எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ந்துதான் இருக்க போகிறது என்பது உறுதியாகி விட்டது. அதற்கான அறிகுறிகளும் தற்போதே தென்பட தொடங்கி விட்டன. இந்தியாவை பொறுத்தவரையில் தற்போது எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களை காட்டிலும், எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் விற்பனையாகி கொண்டுள்ளன.

இதன் காரணமாக எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் அது தொடர்பான பணிகளில் முன்னணி நிறுவனங்களும், நிறைய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் களமிறங்கியுள்ளன. அத்துடன் அவை வெற்றிகரமாகவும் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு கிட்டத்தட்ட 1.50 லட்சம் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேரடியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதன் மூலமாக மட்டுமல்லாது தற்போது உள்ள ஐசி இன்ஜின் வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவதன் மூலமும் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கலாம். இதன்படி கோகோஏ1 (GoGoA1) என்ற நிறுவனம் ஹீரோ ஸ்பிளெண்டர் உள்ளிட்ட பைக்குகளுக்கு கன்வெர்சன் கிட்களை (Conversion Kits) உற்பத்தி செய்து வருகிறது.

இந்த கன்வெர்ஷன் கிட்கள் மூலம் பெட்ரோலில் ஓடக்கூடிய பைக்குகளை எலெக்ட்ரிக் பைக்குகளாக மாற்றம் செய்ய முடியும். மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கோகோஏ1 நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்டிற்கு 35 ஆயிரம் ரூபாயை விலையாக நிர்ணயம் செய்துள்ளது. இது சரியான விலை நிர்ணயமாக கருதப்படுகிறது.

இந்த எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்டின் ரேஞ்ச் 151 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 151 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும். கோகோஏ1 நிறுவனம் ஆர்டிஓ-வால் அங்கீகரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் கன்வெர்சன் கிட்களை விற்பனை செய்கிறது. வரும் காலங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கும் கோகோஏ1 நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெட்ரோலில் இயங்க கூடிய இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை கோகோஏ1 நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. காற்று மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு தற்போது பலரும் விரும்புகின்றனர்.

குறிப்பாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் எலெக்ட்ரிக் வாகனங்கள் பலரின் முதன்மையான விருப்பமாக உள்ளன. ஏனெனில் பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு மிகவும் குறைவாகவே செலவு ஆகும். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக பலரால் தங்களது விருப்பப்படி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற முடிவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்கள் நல்ல தேர்வாக இருக்கும். ஏனெனில் புதிதாக ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்குவதுடன் ஒப்பிடும்போது ஏற்கனவே உள்ள வாகனத்தை எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றுவதற்கு குறைவான செலவுதான் ஆகும்.

எனவே தெளிவான விதிமுறைகள் வகுக்கப்பட்டால், வரும் காலங்களில் எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் தொழில் நல்ல வளர்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிய எலெக்ட்ரிக் வாகன சந்தையும் இந்தியாவில் தற்போது நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. ஓலா எலெக்ட்ரிக் போன்ற பல்வேறு நிறுவனங்கள் இந்த சந்தையில் தடம் பதித்துள்ளன.

குறிப்பாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்த எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் டெலிவரியில் தாமதம் போன்ற ஒரு சில குற்றச்சாட்டுக்களால் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது சிறிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே வரும் காலங்களில் நிறைய எலெக்ட்ரிக் கார்களும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளன. இதில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் விலை குறைவான மாடல், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் ஆகியவை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
-
கால்தடம் பதிச்சாச்சு... இனி ஆட்டம் வெறி தனமா இருக்க போகுது! ரெண்டு தரமான கீவே ஸ்கூட்டர்கள் அறிமுகம்!
-
இப்படி ஒரு தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கல... ராங் சைடில் போனால் இவ்வளவு பஞ்சாயத்து இருக்குதா?
-
வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!