மஹிந்திராவின் இந்த பைக்கை இப்போ வாங்குறது ரொம்ப கஷ்டம்... இந்த மாதிரியான பைக்கையா அசால்டா புதைச்சுட்டு போனாங்க

வேலூரில் சாலை போடுபவர்களால் புதைக்கப்பட்ட பைக்கை இப்போ இந்தியாவில் வாங்குவது என்பது இயலாத ஒன்று. இப்படியான ஓர் பைக்கையே அசால்டாக சாலைபோடுபவர்கள் புதைத்துவிட்டு சென்றிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திராவின் இந்த பைக்கை இப்போ வாங்குறது ரொம்ப கஷ்டம்... இந்த மாதிரியான பைக்கையா அசால்டா புதைச்சுட்டு போனாங்க!

தமிழக அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மாநிலத்தின் முக்கிய நகர்ப்பகுதிகளை வேற லெவலுக்கு மாற்றும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. குறிப்பாக, இத்திட்டத்தின்கீழ் முக்கிய நகரங்களின் உள்-கட்டமைப்புகளை சீரமைக்கும் பணிகளையே அரசு மேற்கொண்டு வருகின்றது. அதாவது, புதிய சாலைகள் அமைத்தல், மேம்பாலங்களை நிறுவுதல், மழை மற்றும் கழிவு நீர் வடி-கால்வாயை சீரமைத்தல் உள்ளிட்ட பன்முக பணிகளையே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது.

மஹிந்திராவின் இந்த பைக்கை இப்போ வாங்குறது ரொம்ப கஷ்டம்... இந்த மாதிரியான பைக்கையா அசால்டா புதைச்சுட்டு போனாங்க!

இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நகரங்களில் வேலூர் மாநகராட்சியும் ஒன்று. இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட மெயின் பஜார், காளிகாம்பாள் கோவில் தெருவிலேயே இதுவரை எந்தவொரு ரோடு போடும் கான்ட்ராக்டரும் செய்யாத ஓர் செயலை இந்த பகுதியில் சாலையை அமைத்து வரும் கான்ட்ராக்டர் செய்திருக்கின்றார்.

மஹிந்திராவின் இந்த பைக்கை இப்போ வாங்குறது ரொம்ப கஷ்டம்... இந்த மாதிரியான பைக்கையா அசால்டா புதைச்சுட்டு போனாங்க!

பொதுவாக ஏற்கனவே போடப்பட்டிருக்கும் சாலை மீதே புதிய சாலையை கான்ட்ராக்டர்கள் அமைப்பார்கள். குறிப்பிட்ட உயர அளவை கணக்கு காண்பிக்க இவ்வாறு அவர்கள் செய்வார்கள். ஆனால், வேலூரிலேயோ சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் வீல் புதையும் அளவிற்கு அந்த கான்ட்ராக்டர் சிமெண்ட் சாலையைப் போட்டிருக்கின்றார்.

மஹிந்திராவின் இந்த பைக்கை இப்போ வாங்குறது ரொம்ப கஷ்டம்... இந்த மாதிரியான பைக்கையா அசால்டா புதைச்சுட்டு போனாங்க!

பைக்கின் வீல் மட்டுமில்லைங்க, சாலையில் கொட்டிக் கிடந்த குப்பை, மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றையும் அகற்றாமல் அவர்கள் புதிய சாலையைப் போட்டிருக்கின்றனர். இந்த நிலையிலேயே காளிகாம்பாள் கோவில் தெருவைச் சேர்ந்த சிவா என்பவரின் டூ-வீலரின் இரு வீல்களும் புதையும்படி அவர்கள் சாலையைப் போட்டிருக்கின்றனர்.

மஹிந்திராவின் இந்த பைக்கை இப்போ வாங்குறது ரொம்ப கஷ்டம்... இந்த மாதிரியான பைக்கையா அசால்டா புதைச்சுட்டு போனாங்க!

சாலை அமைக்கும் கன்ட்ராக்டரின் இந்த அடாவடி செயல்குறித்து இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் சிவா கூறியதாவது, "வழக்கம்போல் இருசக்கர வாகனத்தை இரவு எங்களது கடைக்கு முன் நிறுத்தி விட்டு சென்றிருந்தேன். காலை எழுந்து வந்து வெளியே பார்க்கும்போது சாலை முழுவதும் புதிதாக ரோடு போடப்பட்டிருந்தது. சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்னுடைய பைக்கையும் ஓர் கட்டாமல் அவர் சாலையைப் போட்டிருந்தார்கள்" என்றார்.

மஹிந்திராவின் இந்த பைக்கை இப்போ வாங்குறது ரொம்ப கஷ்டம்... இந்த மாதிரியான பைக்கையா அசால்டா புதைச்சுட்டு போனாங்க!

அதேநேரத்தில் சாலை போடுவதுகுறித்து தங்களுக்கு எந்தவொரு முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். சிமெண்ட் சாலை நன்கு இறுகியிருந்ததால் வாகனத்தை வெளியேற்றுவது பெரும் சவாலானதாக மாறியிருக்கின்றது. ஆகையால், புதிதாக போடப்பட்ட அந்த சாலையை உடைத்து பைக்கை அப்பகுதி மக்கள் மீட்டெடுத்திருக்கின்றனர்.

மஹிந்திராவின் இந்த பைக்கை இப்போ வாங்குறது ரொம்ப கஷ்டம்... இந்த மாதிரியான பைக்கையா அசால்டா புதைச்சுட்டு போனாங்க!

இந்த நிகழ்வு வேலூர் வாசிகளை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் மூழ்க வைத்திருக்கின்றது. வேலூர் நகராட்சியில் சாலை கான்ட்ராக்டரால் புதைக்கப்பட்ட இருசக்கர வாகனம் மஹிந்திரா சென்சூரோ ஆகும். இந்த பைக் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைப்பதில்லை.

மஹிந்திராவின் இந்த பைக்கை இப்போ வாங்குறது ரொம்ப கஷ்டம்... இந்த மாதிரியான பைக்கையா அசால்டா புதைச்சுட்டு போனாங்க!

ஆம், இவ்விருசக்கர வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் விற்பனையில் இருந்து அகற்றி ரொம்ப நாட்கள் ஆகின்றன. தற்போது நிறுவனம் மோஜோ பைக்கை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதுவும் நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே அந்த பைக்கை விருப்பத்தின் பேரில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

மஹிந்திராவின் இந்த பைக்கை இப்போ வாங்குறது ரொம்ப கஷ்டம்... இந்த மாதிரியான பைக்கையா அசால்டா புதைச்சுட்டு போனாங்க!

மஹிந்திரா சென்சூரோ பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பதால் அப்பைக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பலமடங்குக் குறைந்து காணப்படுகின்றது. ஆகையால், விரைவில் இந்த பைக்கின் தரிசனம் என்பது அறவே இல்லாத ஒன்றாக மாறும் சூழல் நிலவுகின்றது. இத்தகைய ஓர் பைக் மாடலையே சாலை போடுபவர்கள் அசால்டாக புதைத்துவிட்டு சென்றிருக்கின்றனர்.

மஹிந்திராவின் இந்த பைக்கை இப்போ வாங்குறது ரொம்ப கஷ்டம்... இந்த மாதிரியான பைக்கையா அசால்டா புதைச்சுட்டு போனாங்க!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்த மலிவு விலை இருசக்கர வாகனத்தில் மஹிந்திரா சென்சூரோவும் ஒன்று. விற்பனைக்கு வந்த புதிதில் வெறும் மூன்றே வாரங்களில் 10 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கைப் பெற்ற பைக் என்ற வரலாற்றைக் கொண்டதே இந்த மஹிந்திரா சென்சூரோ. 2013 ஜூலை 1ம் தேதி அன்றே இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மஹிந்திராவின் இந்த பைக்கை இப்போ வாங்குறது ரொம்ப கஷ்டம்... இந்த மாதிரியான பைக்கையா அசால்டா புதைச்சுட்டு போனாங்க!

பன்முக சிறப்பு வசதிகளுடன் இப்பைக் விற்பனைக்கு வந்ததால் இந்தியர்கள் பலர் இப்பைக்கிற்கு ஏகபோகமான வரவேற்பை வழங்கினர். ஆனால், நாளடைவில் புதிய வாகனங்களின் வருகையால் இந்த பைக்கிற்கான மவுசு குறையத் தொடங்கியது. தற்போது அது சந்தையை விட்டே வெளியேறியிருக்கின்றது. புனேவில் உள்ள ஆர்&டி மையத்தில் வைத்தே இப்பைக் உற்பத்தி செய்யப்பட்டது. ரூ. 45 ஆயிரம் என்ற மிக மிக குறைவான விலையில் இப்பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
New road laid without moving the parked two wheeler in vellore city
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X