100 கிலோ மீட்டர் ரேஞ்ச்... சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

நெக்ஸூ பாஸிங்கா எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

100 கிலோ மீட்டர் ரேஞ்ச்... சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று நெக்ஸூ மொபிலிட்டி (Nexzu Mobility). பாஸிங்கா (Bazinga) என்ற புதிய எலெக்ட்ரிக் சைக்கிளை நெக்ஸூ நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக தனது எலெக்ட்ரிக் சைக்கிள் லைன்-அப்பை நெக்ஸூ மொபிலிட்டி நிறுவனம் விரிவாக்கம் செய்துள்ளது.

100 கிலோ மீட்டர் ரேஞ்ச்... சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

பாஸிங்கா எலெக்ட்ரிக் சைக்கிளின் விலை 49,445 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் கார்கோ வெர்ஷனையும் நெக்ஸூ மொபிலிட்டி நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஆனால் கம்யூட்டர் வெர்ஷனை காட்டிலும் கார்கோ வெர்ஷனின் விலை சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

100 கிலோ மீட்டர் ரேஞ்ச்... சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதன்படி கார்கோ வெர்ஷனின் விலை 51,525 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாஸிங்கா வரிசை எலெக்ட்ரிக் சைக்கிள்கள் இந்திய சந்தையில் அடுத்த மாதம் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளன. எனினும் பாஸிங்கா வரிசை எலெக்ட்ரிக் சைக்கிள்களை வாடிக்கையாளர்கள் தற்போதே முன்பதிவு செய்ய முடியும்.

100 கிலோ மீட்டர் ரேஞ்ச்... சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

நெக்ஸூ மொபிலிட்டி நிறுவனத்தின் இ-காமர்ஸ் வெப்சைட் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலை தள பக்கங்களின் மூலமாக வாடிக்கையாளர்கள் இந்த எலெக்ட்ரிக் சைக்கிள்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். பாஸிங்கா வரிசை எலெக்ட்ரிக் சைக்கிள்கள் சந்தையில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளும் தொடங்கப்படும்.

100 கிலோ மீட்டர் ரேஞ்ச்... சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

கழற்றி மாட்டக்கூடிய ஒரு லித்தியம் அயான் பேட்டரியுடன் பாஸிங்கா எலெக்ட்ரிக் சைக்கிளின் நீட்டிக்கப்பட்ட ரேஞ்ச் 100 கிலோ மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்களை கவரும் வகையில் பாஸிங்கா வரிசை எலெக்ட்ரிக் சைக்கிள்களை நெக்ஸூ மொபிலிட்டி நிறுவனம் கவர்ச்சிகரமாகவும் டிசைன் செய்துள்ளது.

100 கிலோ மீட்டர் ரேஞ்ச்... சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

நெக்ஸூ மொபிலிட்டி நிறுவனம் ஏற்கனவே இந்தியா முழுவதும் தனது டீலர்ஷிப் நெட்வொர்க்கை விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி தமிழ்நாடு, ஹரியானா, கர்நாடகா, குஜராத் மற்றும் தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் நெக்ஸூ மொபிலிட்டி நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

100 கிலோ மீட்டர் ரேஞ்ச்... சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த நிறுவனத்தின் இ-காமர்ஸ் பிளாட்பார்ம்மான நெக்ஸூவில் இருந்து நேரடியாகவும் இந்த தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் இதன் மூலம் நெக்ஸூ மொபிலிட்டி நிறுவனத்தின் தயாரிப்புகளை எளிதாக வாங்கி கொள்ள முடியும். தற்போதைய நிலையில் இந்தியாவில் நிறைய எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமாகி வருகின்றன.

100 கிலோ மீட்டர் ரேஞ்ச்... சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் போதுமான அளவில் டீலர்ஷிப்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் விருப்பம் இருந்தாலும் வாடிக்கையாளர்களால் அவற்றை வாங்க முடிவதில்லை. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் உள்ள இதுபோன்ற சிக்கல்கள் வரும் காலங்களில் களையப்படும் என நாம் உறுதியாக நம்பலாம். ஏனெனில் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் நமது எதிர்கால போக்குவரத்து என்பதில் துளியும் சந்தேகமில்லை.

100 கிலோ மீட்டர் ரேஞ்ச்... சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவில் தற்போதைய நிலையில் ஏத்தர் எனர்ஜி, டிவிஎஸ், பஜாஜ், ஓலா எலெக்ட்ரிக் போன்ற நிறுவனங்கள் தங்களது எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்து வருகின்றன. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450எக்ஸ், டிவிஎஸ் நிறுவனத்தின் ஐ-க்யூப், பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன.

100 கிலோ மீட்டர் ரேஞ்ச்... சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதுதவிர இன்னும் பல்வேறு சிறிய நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. வரும் காலங்களில் நிறைய எலெக்ட்ரிக் பைக்குகளும் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என நாம் எதிர்பார்க்கலாம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் மத்திய, மாநில அரசுகளும், பொதுமக்களும் எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது ஆர்வமாக உள்ளனர்.

100 கிலோ மீட்டர் ரேஞ்ச்... சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்குவதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலை குறைந்தால், இந்தியாவின் பொருளாதாரம் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Nexzu bazinga e cycle unveiled in india details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X