41 லட்ச ரூபா மதிப்புள்ள பைக்கை இங்கிலாந்தில் அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்.. எதுனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று இங்கிலாந்து நாட்டில் விலையுயர்ந்த பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

41 லட்ச ரூபா விலை கொண்ட பைக்கை இங்கிலாந்தில் அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் நார்டன் மோட்டார்சைக்கிள் (Norton Motorcycles)-ம் ஒன்று. இந்த நிறுவனம் தற்போது டிவிஎஸ் மோட்டார் கம்பெனி (TVS Motor Company)-க்கு சொந்தமானதாக மாறியிருக்கின்றது. ஆமாங்க, கடந்த சில மாதங்களுக்கு முன்னரே நமது இந்திய நிறுவனம் நார்டன் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தியது.

41 லட்ச ரூபா விலை கொண்ட பைக்கை இங்கிலாந்தில் அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

கையகப்படுத்தலைத் தொடர்ந்து, நார்டன் நிறுவனத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் முயற்சியிலும் டிவிஎஸ் களமிறங்கியது. இதன் அடிப்படையில் அந்நிறுவனத்தின் நிர்வாகத்தையும், அதன் முக்கிய தயாரிப்புகளையும் மறுசீரமைப்பு செய்யும் பணிகளை மேற்கொள்ள அது ஆரம்பித்தது.

41 லட்ச ரூபா விலை கொண்ட பைக்கை இங்கிலாந்தில் அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இதன் வாயிலாக வாடிக்கையாளர்களைக் கவர முடியும் என்கிற நம்பிக்கையில் டிவிஎஸ் நிறுவனம் இந்த முயற்சியில் களமிறங்கியது. இந்த நிலையிலேயே டிவிஎஸ் கை வண்ணத்தால் ரீ-இன்ஜினியரிங் செய்யப்பட்ட நார்டன் வி4எஸ்வி (Norton V4SV) மோட்டார்சைக்கிள் இங்கிலாந்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

41 லட்ச ரூபா விலை கொண்ட பைக்கை இங்கிலாந்தில் அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

44 ஆயிரம் பவுண்டுகளுக்கு மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 41.52 லட்சம் ஆகும். இந்த பைக் 2021 ஆம் ஆண்டிற்கு உள்ளாகவே அறிமுகமாகியிருக்க வேண்டியது. ஆனால், நிர்வாகத்தில் ஏற்பட்ட சில சிக்கல்கள் இதன் வருகையை தள்ளிப் போட செய்துவிட்டது. இந்த நிலையிலேயே டிவிஎஸ் நிறுவனத்தின் கைகளுக்கு நார்டன் மாறியது.

41 லட்ச ரூபா விலை கொண்ட பைக்கை இங்கிலாந்தில் அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

டிவிஎஸ் நிறுவனம் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக இந்த பைக்கின் ரீ-இன்ஜினியரிங் பணியில் ஈடுபட்டு வந்தநிலையில், தற்போது அந்த பணிகள் அனைத்தும் முடிவுற்றிருக்கின்றன. இதனைத் தொடர்ந்தே பைக்கை அதிகாரப்பூர்வமாக நார்டன் பிராண்ட் வாயிலாக டிவிஎஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

41 லட்ச ரூபா விலை கொண்ட பைக்கை இங்கிலாந்தில் அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இங்கிலாந்தில் உள்ள நார்டன் நிறுவனத்திற்கு சொந்தமான சோலிஹல் ஆலையில் வைத்தே பைக் ரீ-இன்ஜினியரிங் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மறு சீரமைப்பின்போது தான் கற்று வைத்திருந்த வித்தைகள் சிலவற்றை இந்த பைக்கில் டிவிஎஸ் காண்பித்துள்ளது. அந்தவகையில், வி4எஸ்வி பைக்கின் மோட்டார் மற்றும் உடல் தோற்றம் சிலவற்றில் அது மாற்றத்தைச் செய்துள்ளது.

41 லட்ச ரூபா விலை கொண்ட பைக்கை இங்கிலாந்தில் அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இந்த செயலால் வி4எஸ்வி பைக்கின் தோற்றம் இன்னும் பல மடங்கு அதிக முரட்டுத் தனமானதாகவும், கவர்ச்சியானதாகவும் மாறியிருக்கின்றது. குறிப்பாக, தற்போது விற்பனையில் இருக்கும் எந்த இருசக்கர வாகனமும் கொண்டிராத ஸ்டைலில் வி4எஸ்வி பைக்கை உருவாக்கியிருப்பதாக நார்டன் தெரிவித்துள்ளது. மிக தெளிவாகக் கூற வேண்டும் இந்த மோட்டார்சைக்கிளை அது "அழகான கலைப் படைப்பு" என குறிப்பிட்டுள்ளது.

41 லட்ச ரூபா விலை கொண்ட பைக்கை இங்கிலாந்தில் அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

பைக்கில் சவாரியை ஆரம்பிப்பதில் தொடங்கி அதை விட்டு இறங்கும் வரை மிகுந்த உற்சாகமானதாக இருக்கும் என்றும் வி4எஸ்வி பைக்குறித்து நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மோட்டார்சைக்கிளில் பன்முக சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களை நார்டன் வழங்கியிருக்கின்றது.

41 லட்ச ரூபா விலை கொண்ட பைக்கை இங்கிலாந்தில் அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

சாவியே இல்லாமல் வாகனத்தின் இக்னிஷனை ஆக்டிவேட் செய்தல், 6 அங்குல டிஎஃப்டி திரை (பின் பக்கத்தில் உள்ள கேமிராவுடன் இது இணைக்கப்பட்டிருக்கும்) உள்ளிட்ட அதி-நவீன அம்சங்கள் பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்யூவல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி கார்பன் ஃபைபரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

41 லட்ச ரூபா விலை கொண்ட பைக்கை இங்கிலாந்தில் அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இதுபோன்று இன்னும் பல சிறப்பம்சங்கள் இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், முழு குயிக் ஷிஃப்ட், ஆட்டோ ப்ளிப்பர் சிஸ்டம், அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன் (முன் மற்றும் பின் பக்கத்தில்), பிரம்போ டிஸ்க் பிரேக்குகள், டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் மூன்று விதமான எஞ்ஜின் மோட்கள் (வெட், ரோட் மற்றும் ஸ்போர்ட்) உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

41 லட்ச ரூபா விலை கொண்ட பைக்கை இங்கிலாந்தில் அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்... எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

வி4எஸ்வி மோட்டார்சைக்கிளில் 1,200 சிசி திறன் கொண்ட லிக்யூடு-கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் வி4 ட்யூன் செய்யப்பட்ட மோட்டார் ஆகும். இது அதிகபட்சமாகக 185 பிஎச்பி பவரையும், 125 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஃப்ரேம் ஏரோஸ்பேஸ் கிரேட் பெற்ற அலுமினியத்தால் உருவாக்கப்பட்டவை ஆகும்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Norton v4sv bike launched in uk by tvs
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X