Just In
- 9 hrs ago
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- 10 hrs ago
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- 22 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 1 day ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
Don't Miss!
- Movies
கிளைமேக்ஸ் சுத்தமா புடிக்கல.. நல்லா டைம் எடுத்து எழுதுங்க.. கடுப்பில் கிளம்பினாரா டாப் நடிகர்?
- News
கல்லூரி சுவர் தரமில்லாமல் விழுந்ததாக வீடியோ எடுத்த எம்எல்ஏ மீது வழக்கு பதிவு: உ.பி. போலீஸ் நடவடிக்கை
- Finance
டெஸ்லா கார்கள் உளவு பார்க்கிறதா.. சீனா-வின் புதிய கட்டுப்பாடு..!! - வீடியோ
- Technology
WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!
- Sports
ரஞ்சி கோப்பையில் புதிய வரலாறு.. 41 முறை சாம்பியன் மும்பை தோல்வி.. 23 ஆண்டுகள் ம.பி அணியின் கனவு கதை
- Lifestyle
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த இ-ஸ்கூட்டருல போகும்போது லைசென்ஸ் கையில வச்சிருக்கணும்னு அவசியம் இல்ல! போலீஸ் பிடிச்சாலும் பயப்பட வேண்டாம்
ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X) மின்சார ஸ்கூட்டரில் சிறப்பு வசதியாக முக்கிய ஆவணங்களை சேகரித்து வைத்துக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் போன்ற முக்கிய ஆவணங்களை இதன் வாயிலாக சேர்த்து வைத்துக் கொள்ள முடியும். இது குறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் வழங்கி உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக முக்கியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஏத்தர் எனெர்ஜி (Ather) நிறுவனத்தின் 450எக்ஸ் (450X)-ம் ஒன்று. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்கள் சிலவற்றிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலேயே மிக சிறப்பான வசதியை நிறுவனம் வழங்கியிருக்கின்றது. அதாவது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலேயே ஓட்டுநர் உரிமைத்தை சேமித்து வைத்துக்கொள்ளும் வசதியை அது அறிமுகப்படுத்தியிருக்கின்றது. நம்மில் பலர் தினந்தோறும் ஏதாவது ஒரு பொருளை மறந்துவிட்டு ஆஃபிசுக்கு புறப்படுபவர்களாக இருக்கின்றோம்.

மணி பர்ஸ், ஐடி கார்டு, சில நேரங்களில் லன்ச் பாக்ஸ் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்னை மறந்து விட்டுட்டு போவோம். அந்தவகையில், நாம் வீட்டிலேயே விட்டுவிட்டு போக பொருட்களில் ஒன்றே லைசென்ஸ் முக்கியமான ஆவணம். பொதுபோக்குவரத்தை பயன்படுத்துவோர் இதைவிட்டுட்டு போறதுனால எந்த சிக்கலையும் அனுபவிப்பதில்லை.

ஆனால், சொந்த வாகனத்தை பயன்படுத்துவோர் இதை விட்டுவிட்டு போகும்போது பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, செகண்டு ஷிஃப்ட் முடித்துவிட்டு அன்-டைமில் வீட்டுக்கு செல்பவர்கள், வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் காவலர்களிடத்தில் மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான். தேவையில்லாத சிக்கல்கள் அப்போதுதான் உருவாகும்.

இத்தகைய சூழலைச் சந்திப்பவர்களுக்கு உதவும் வகையிலேயே ஏத்தர் நிறுவனம் அதன் புகழ்பெற்ற 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கிய ஆவணங்களைச் சேமித்து வைத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. நிறுவனத்தின் இந்த புதிய அம்சம்குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கும் விதமாக புதிய விளம்பர வீடியோவை ஏத்தர் வெளியிட்டிருக்கின்றது.

இந்த வீடியோ டிரைவிங் லைசென்ஸ் மட்டுமின்றி இன்னும் பிற முக்கிய ஆவணங்களையும் ஸ்கூட்டரில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என்பதை வெளிக்காட்டுகின்றது. இந்த திரை 7.0 அங்குல அளவுக் கொண்டது. தொடுதிரை வசதியுடன் அது வழங்கப்படுகின்றது.

இருசக்கர வாகனம் பற்றிய பன்முக தகவல்களை வழங்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அது டிஜிட்டல் ஆவணங்களையும் சேமிக்கும் வசதிக் கொண்டதாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, செல்போனை இணைத்தல், ஓடிஏ அப்டேட்டுகளை பெறுதல் போன்ற செயல்களையும் இதன் வாயிலாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்ட மின்சார வாகனமாகவே ஏத்தர் 450எக்ஸ் காட்சியளிக்கின்றது. எனவேதான் நாட்டு மக்கள் மத்தியில் இந்த எலெக்ட்ரிக் வாகனத்திற்கு கணிசமான சிறந்த வரவேற்புக் கிடைத்து வருகின்றது. ஓலா, ஹீரோ எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நாட்டு மக்கள் மத்தியில் சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த வரேவற்பை இரட்டிப்பாக்கும் வகையிலேயே சிறப்பு அப்டேட்டுகளை ஏத்தர் வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதில், ஒன்றாக இந்த டிஜிட்டல் ஆவணங்களை சேகரிக்கும் வசதி பார்க்கப்படுகின்றது. தற்போது ஏத்தர் நிறுவனம் 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் என இருவிதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.
450 பிளஸ் மாடலின் விலை ரூ. 1.33 லட்சம் ஆகும். 450 எக்ஸ் மாடலுக்கு ரூ. 1.52 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஃபேம்2 மானிய திட்டத்தின்கீழ் கிடைக்கும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். கடன் மற்றும் லீஸ் என இருவிதமான ஆஃப்ஷன்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். லீஸ் திட்டம் ரூ. 3,868 இல் இருந்து தொடங்குகின்றது.
-
ஹீரோ, ஹோண்டா, யமஹா தயாரிப்புகள்... இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டர்கள் இருக்கா? இது தெரியாம போச்சே!
-
சூப்பரான புதுமுக எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... விலை ரூ. 1.60 லட்சம் மட்டுமே!
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் மின்சார கார்! அட இந்த காருக்கா இப்படி ஒருநிலைமை ஆகியிருக்கு?