பெங்களூருவில் டெஸ்ட் செய்யப்படும் ஓபன் ரோர் எலெக்ட்ரிக் பைக்...

ஓபன் ரோர் எலெக்ட்ரிக் பைக் பெங்களூருவில் டெஸ்ட் செய்யப்படும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பைக் குறித்த முழு தகவல்களைக் காணலாம்

பெங்களூருவில் டெஸ்ட் செய்யப்படும் ஓபன் ரோர் எலெக்ட்ரிக் பைக் . . .

இந்திய மக்கள் நாளுக்கு நாள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிகம் விரும்பி வருகின்றனர். முதலில் பேட்டரி ஸ்கூட்டர் என்றால் ஏதோ சீன பொம்மை என பேசியவர்கள் சமீபமாகச் சிறப்பான பெர்பாமென்ஸ்களுடன் வரும் பேட்டரி ஸ்கூட்டர்களை பார்த்து வியந்து வருகின்றனர். இந்நிலையில் மார்கெட்டில் பேட்டரி ஸ்கூட்டர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் தற்போது பெங்களூருவை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனம் பேட்டரி பைக் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.

பெங்களூருவில் டெஸ்ட் செய்யப்படும் ஓபன் ரோர் எலெக்ட்ரிக் பைக் . . .

பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஒபென் எலெக்ட்ரிக் பைக் நிறுவனம் சமீபத்தில் ஓபன் ரோர் என்ற எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியது. இது இந்நிறுவனம் வெளியிடும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். தற்போது இந்த ரோர் எலெக்ட்ரிக் பைக்கை டெஸ்ட் செய்யும் ஸ்பை புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் டெஸ்ட் செய்யப்படும் ஓபன் ரோர் எலெக்ட்ரிக் பைக் . . .

இந்த பைக்கிற்கான ப்ரீ புக்கிங் தற்போது நடந்து வருகுிறது. இந்த நிறுவனம் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகத்தைத் துவங்கவில்லை. தற்போது ஆன்லைன் மூலம் இந்த பைக்கிற்கை புக் செய்து கொள்ளலாம்.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

பெங்களூருவில் டெஸ்ட் செய்யப்படும் ஓபன் ரோர் எலெக்ட்ரிக் பைக் . . .

இந்த பைக்கை பொருத்தவரை எல்இடி லைட்டிங் சிஸ்டம், ஸ்மார்ட் போன் கனெக்ட்டிவிட்டியுடன் கூடிய முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், கம்பைன் பிரேக்கிங் சிஸ்டம், ஆகிய அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன மேலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரில் பைக்கின் பராமரிப்பு, ரைடு தகவல்கள், பேட்டரி நிலை, ஜியோ ஃபென்சிங் தகவல்கள், ஜியோ டேக்கிங் தகவல்கள், சார்ஜிங் ஸ்டேஷன் குறித்த தகவல்கள், சர்வீஸ் மற்றும் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் குறித்த தகவல்களை வழங்குகிறது.

பெங்களூருவில் டெஸ்ட் செய்யப்படும் ஓபன் ரோர் எலெக்ட்ரிக் பைக் . . .

ஓபன் ரோர் பைக்கை பொருத்தவரை 10KW ஃபிரேம் மவுண்ட்டட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. அது செயின் டிரைவ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் பைக்கை 0-40 கி.மீ வேகத்தை வெறும் 3 நொடிகளில் அடைய வைக்கிறது. இந்த பைக் அதிகபட்சமாக 100 கி.மீ வேகம் வரை செல்லும், மேலும் இந்த பைக்கில் எக்கோ, சிட்டி மற்றும் ஹாவக் டிரைவ் மோடுகள் உள்ளது. இதில் முழு பேட்டரி சார்ஜில் ஹாவக் மோடில் 100 கி.மீ தூரமும், சிட்டி மோடில் 120 கி.மீ தூரமும் எக்கோ மோடில் 150 கி.மீ தூரமும் பயணிக்க முடியும்.

பெங்களூருவில் டெஸ்ட் செய்யப்படும் ஓபன் ரோர் எலெக்ட்ரிக் பைக் . . .

பேட்டரியை பொருத்தவரை 4.4kWh லித்தியம் அயான் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15A பவர் சாக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. இது முழு பேட்டரியை 2 மணி நேரத்தில் சார்ஜ் முழுமையாக ஏற்றுகிறது. இந்த பைக் ஐடியல் டிரைவிங் கண்டிஷனில் முழு பேட்டரியில் 200 கி.மீ வரை பயணித்தது.

பெங்களூருவில் டெஸ்ட் செய்யப்படும் ஓபன் ரோர் எலெக்ட்ரிக் பைக் . . .

இந்த பைக்கின் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின் பக்கத்தில் மோனோ ஷாக் சஸ்பென்சன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு வீல்களிலும் பிரேக் அப்ளே ஆகும். மிக முக்கிய அம்சமாக இந்த பைக் 200மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உன் 230 மிமி தண்ணீர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.

பெங்களூருவில் டெஸ்ட் செய்யப்படும் ஓபன் ரோர் எலெக்ட்ரிக் பைக் . . .

மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகும் டோர்க் கிராட்டோஸ், ரிவோல்ட் ஆர்வி 400, அல்ட்ராவயோலேட் எஃப் 77 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக இந்த பைக் களம் இறங்குகிறது. இந்த பைக் ஒரே வேரியன்டில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. அதன் விலை ரூ99,999 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இதை வெறும் ரூ999 கொடுத்து ஆன்லைனில் ப்ரீ புக் செய்து கொள்ளலாம்

Most Read Articles
English summary
Oben rorr electric bike spotted testing in bengaluru roads
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X